கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் ராஜினாமா முடிவு? விரைவில் கைதாகிறார்!
Kallakurichi TVK MLA Arul Vignesh : கள்ளக்குறிச்சி தமிழக வெற்றக் கழகத்தின் எம்எல்ஏ அருள் விக்னேஷ் தனது பதவியே ராஜினாமா செய்ய இருப்பதாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து, அவர் விரைவில் கைது செய்யப்பட இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன .
கள்ளக்குறிச்சி மாவட்ட பெண் ஆட்சியருக்கு ஆபாச மெசேஜ் அனுப்பியதாக எழுந்த புகாரில் தவெக அருள் விக்னேஷ் தனது பதவியை ராஜினாமா செய்ய முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கள்ளக்குறிச்சி மாவட்ட பெண் ஆட்சியருக்கு கடந்த சில நாட்களாக அந்தத் தொகுதியின் தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் வாட்ஸ்ஆப் மூலமாகவும், ஆட்சியர் வசிக்கும் இடத்திற்கு சென்று மது போதையில் தகராறில் ஈடுபட்டதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தன. இதைத் தொடர்ந்து, நேற்று கள்ளக்குறிச்சி எஸ்பி அலுவலகத்தில் பெண் ஆட்சியர் புகார் அளித்த நிலையில். எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீது 5 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதில், அவர் ஜாமினில் வெளிவராத பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது.
தவெக எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ய முடிவு
இதைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் அலுவலக ஊழியர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டிருந்தது. அத்துடன், எம்எல்ஏவின் செல்போன் பறிமுதல் செய்யப்பட்டு சைபர் கிரைம் போலீஸ் ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால், அவர் விரைவில் கைது செய்யப்படலாம் என்று தகவல்கள் வெளியாகியிருந்தன. இந்த நிலையில், தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் தனது பதவியை ராஜினாமா செய்ய முடிவில் இருப்பதாக கூறப்படுகிறது. தமிழக வெற்றி கழகத்தின் தலைமை அறிவுறுத்தியதன் அடிப்படையில், அவர் தனது பதவியை ராஜினாமா செய்ய திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
மேலும் படிக்க: கள்ளக்குறிச்சிலேயே பணியாற்ற விருப்பம்.. பெண் ஆட்சியரின் துணிச்சலான முடிவு.. கவிதா ராமு அளித்த ஆதரவு!
தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷை கைது செய்ய திட்டம்
அவர் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ததை தொடர்ந்து, கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட உள்ளார். இதைத் தொடர்ந்து, எதிர் வரும் 2 நாட்களில் அவரை போலீசார் கைது செய்ய இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்த விவகாரம் தமிழக வெற்றுக் கழகம் தரப்பில் கடும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. முன்னதாக பெண் ஆட்சியர் அளித்த புகாரின் அடிப்படையில், இந்த வழக்கு தொடர்பான விசாரணையை மேற்கொள்வதற்கு திருப்பூர் எஸ். பி. சிருஷ்டி சிங் விசாரணை அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தவெக எம்எல்ஏ விவகாரத்தில் விசாரணை அதிகாரிகள்
அத்துடன், இந்த வழக்கு விசாரணையை கண்காணிப்பதற்காக ஐஜி காமினி கண்காணிப்பு அதிகாரியாகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதனால், இந்த விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும், உயர்நீதிமன்ற நீதிபதிகளும் கடும் கண்டனத்தை தெரிவித்திருந்தனர். அத்துடன், பெண் ஆட்சியருக்கு சக ஐஏஎஸ் அதிகாரிகளும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: போலி நூல்கள் உருவாக்க 5 பேர்.. சாட் ஜிபிடி-யில் சந்தாதாரான மோகன்.. லஞ்ச ஒழிப்பு போலீஸ் விசாரணையில் அதிர்ச்சி!