AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

சபரிமலை பக்தர்களுக்கு சிறப்பு ரயில்கள், உணவுடன் கூடிய தங்குமிடம் – தெற்கு ரயில்வே அசத்தல் ஏற்பாடு

Sabarimala Special Train Arrangements : நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் ஐயப்ப பக்தர்களின் வசதிக்காக கேரளத்தின் கோட்டயம், செங்கனூர், எர்ணாகுளம் சந்திப்பு, எர்ணாகுளம் டவுன் ஆகிய ரயில் நிலையங்களில் சபரிமலை பக்தர்களுக்காக தங்குமிடம், ஓய்வறை, உணவு, மருத்துவ உதவி, போக்குவரத்து ஆகியவற்றுக்கான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

சபரிமலை பக்தர்களுக்கு சிறப்பு ரயில்கள், உணவுடன் கூடிய தங்குமிடம் – தெற்கு ரயில்வே அசத்தல் ஏற்பாடு
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 25 Nov 2026 07:40 AM IST

சென்னை, நவம்பர் 25 :சபரிமலை சீசன் தொடங்கியுள்ள நிலையில் பக்தர்களின் பாதுகாப்பாகவும், வசதியாகவும் பயணிக்கும் வகையில் சிறப்பு ரயில்கள், கூடுதல் வசதிகளுடன் கூடிய தங்குமிடம் என தெற்கு ரயில்வே (Southern Railway) முக்கிய ஏற்பாடுகளை செய்துள்ளது. சபரிமலை வரும் பக்தர்களுக்காக தங்குமிடம், ஓய்வறை, உணவு, மருத்துவ உதவி, போக்குவரத்து ஆகியவற்றுக்கான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில் பயணிகளின் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில், தெற்கு ரயில்வே மற்ற ரயில்வே மண்டலங்களுடன் இணைந்து பயணிகளுக்கு சிறந்த அனுபவத்தை வழங்கவுள்ளது. இதுவரை, சபரிமலைக்கு மொத்தம் 204 சிறப்பு ரயில் பயணங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. பயணிகளின் தேவை மற்றும் முன்பதிவு ஆகியவற்றின் அடிப்படையில் கூடுதல் சேவைகள் திட்டமிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க : நீதிமன்றத் தீர்ப்புகளை துச்சமாக நினைத்து செயல்பட்ட தவெக அரசு! முதல்வர் விஜய்யை சுற்றியுள்ளவர்கள் தவறாக வழிநடத்துகிறார்களா? – அண்ணாமலை கடும் விமர்சனம்!

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் ஐயப்ப பக்தர்களின் வசதிக்காக கேரளத்தின் கோட்டயம், செங்கனூர், எர்ணாகுளம் சந்திப்பு, எர்ணாகுளம் டவுன் ஆகிய ரயில் நிலையங்களில் சபரிமலை பக்தர்களுக்காக தங்குமிடம், ஓய்வறை, உணவு, மருத்துவ உதவி, போக்குவரத்து ஆகியவற்றுக்கான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பக்தர்கள் தங்குமிடங்கள்

கோட்டயத்தில் பிரதான நுழைவு வாயிலுக்கு அருகில் மூன்று மாடி பயணிகள் வசதி மையம் செயல்பட்டு வருகிறது. இதில் ஒரே நேரத்தில் 900 பேர் வரை தங்க முடியும். செங்கனூரில் 600 பயணிகள் வரை தங்கும் வகையில் மூன்று தங்குமிடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 1 ஏசி காத்திருப்பு கூடம், 2 ஏசி அல்லாத படுக்கை அறைகள் ஆகியவை உள்ளன. எர்ணாகுளம் சந்திப்பில் மறுசீரமைப்புப் பணிகள் நடைபெற்று வரும் நிலையிலும், ஏசி காத்திருப்பு கூடங்கள், ஓய்வறைகள், உணவு வசதிகள், உடைமைகள் பாதுகாப்பு அறை சேவைகள் இங்கு கிடைக்கின்றன.

டிக்கெட் முன்பதிவு மையங்கள்

பக்தர்களுக்கு உதவுவதற்காக, செங்கனூர், கோட்டயம் ரயில் நிலையங்களில், ரயில்வே பாதுகாப்புப் படை வீரர்களைக் கொண்ட உதவி மையங்கள் 24 மணி நேரமும் செயல்படுகின்றன. செங்கனூர் மற்றும் கோட்டயத்தில் கூடுதல் முன்பதிவு இல்லாத பயண சீட்டு கவுண்டர்கள் மற்றும் முன்பதிவு வசதிகள் திறக்கப்பட்டு 24 மணி நேரமும் செயல்படுகின்றன. வெளிமாநில பயணிகளுக்கு உதவுவதற்காக தெலுங்கு, கன்னடம், தமிழ் மொழி அறிந்த பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். தொடர் பயணத்திற்கு வசதியாக எர்ணாகுளம், கோட்டயம், செங்கனூர் மற்றும் திருச்சூர் ரயில் நிலையங்களில் டாக்ஸிகளை இயக்குவதற்குச் சிறப்பு அனுமதிகள் வழங்கப்பட்டுள்ளன.

இதையும் படிக்க : மரபு மற்றும் ஆகம விதிகளின்படியே தீபம் ஏற்றப்பட்டது! திருப்பரங்குன்றம் கோவில் நிர்வாகம் விளக்கம்

மகரவிளக்கு தினத்தன்று பக்தர்களின் வருகையை ஒருங்கிணைக்கவும், சிறப்பு ரயில்களைக் கண்காணிக்கவும், கூடுதல் முன்பதிவு கவுண்டர்கள் மற்றும் பிற வசதிகள் சுமூகமாகச் செயல்படுவதை உறுதி செய்யவும், செங்கனூர், எர்ணாகுளம் சந்திப்பு, கோட்டயம் ஆகிய ரயில் நிலையங்களில் பிரத்யேக பணிக்குழு அமர்த்தப்பட உள்ளது.

Follow Us