AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

திருவண்ணாமலையில் 2,668 அடி உயர மலை உச்சியில் ஏற்றப்பட்ட மகா தீபம்..! பக்தி பரவசத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள்..

Tiruvannamalai Maha Deepam: சரியாக மாலை 6 மணிக்கு கோவிலில் அகண்ட தீபம் ஏற்றப்பட்டது. அதே நேரத்தில் 2668 அடி உயரம் கொண்ட திருவண்ணாமலை மலை உச்சியிலும் மகா தீபம் ஏற்றப்பட்டது. இதனைக் கண்ட பக்தர்கள் 'அண்ணாமலையாருக்கு அரோகரா' என முழக்கமிட்டு வழிபட்டனர்.

திருவண்ணாமலையில் 2,668 அடி உயர மலை உச்சியில் ஏற்றப்பட்ட மகா தீபம்..! பக்தி பரவசத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள்..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 24 Nov 2026 18:04 PM IST

நவம்பர் 24, 2026: திருக்கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் 268 அடி உயர மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது. இதனைக் காண தமிழகம் மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் குவிந்துள்ளனர். மகா தீபம் ஏற்றப்பட்டபோது, கோவிலில் திரண்டிருந்த பக்தர்கள் ‘அண்ணாமலையாருக்கு அரோகரா’ என பக்தி முழக்கமிட்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

கடந்த 15ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய விழா

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 15ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து தினமும் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலா நடைபெற்று வந்தது. விழாவின் முக்கிய நிகழ்வான மகா தீபம் இன்று ஏற்றப்பட்டது.

அதிகாலையில் பரணி தீபம் ஏற்றம்!

மகா தீபத் திருவிழாவை முன்னிட்டு இன்று அதிகாலையிலேயே கோவில் நடை திறக்கப்பட்டு பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து அதிகாலை 4 மணியளவில் சுவாமி சன்னதியில் உள்ள அர்த்த மண்டபத்தில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. இதற்கிடையே, நேற்று இரவு முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வந்து அண்ணாமலையாரை வழிபட்டு வருகின்றனர்.

2,668 அடி உயர மலை உச்சியில் மகா தீபம்

மாலையில் பஞ்சமூர்த்திகள் தீப தரிசன மண்டபத்தில் எழுந்தருளினர். இதனைத் தொடர்ந்து ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே காட்சி தரும் அர்த்தநாரீஸ்வரர், சன்னதியில் இருந்து ஆடியபடியே வெளியே வந்து பக்தர்களுக்கு சில நிமிடங்கள் காட்சியளித்தார்.

மேலும் படிக்க: தமிழ்நாட்டில் நடப்பது ஆட்சியா, இல்லை வேறெதுவுமா? – ஸ்டாலின் கடும் விமர்சனம்!

அதனைத் தொடர்ந்து சரியாக மாலை 6 மணிக்கு கோவிலில் அகண்ட தீபம் ஏற்றப்பட்டது. அதே நேரத்தில் 2668 அடி உயரம் கொண்ட திருவண்ணாமலை மலை உச்சியிலும் மகா தீபம் ஏற்றப்பட்டது. இதனைக் கண்ட பக்தர்கள் ‘அண்ணாமலையாருக்கு அரோகரா’ என முழக்கமிட்டு வழிபட்டனர்.

லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்ததால் பலத்த பாதுகாப்பு


மகா தீபத்தைக் காண 50 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருகை தந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதையொட்டி நகரம் முழுவதும் பலத்த காவல்துறை பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மகா தீபம் ஏற்றப்பட்டதைத் தொடர்ந்து, பக்தர்கள் மலை மீது ஏறுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், அசம்பாவிதங்களைத் தவிர்க்க காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

Follow Us