AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

கள்ளக்குறிச்சி த.வெ.க. எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் விவகாரம்: விசாரணை அதிகாரிகள் நியமனம்! செல்போனை பறிமுதல் செய்ய போலீசார் திட்டம்

Kallakurici MLA Issue: இந்த வழக்கில் அரசியல் செய்யவோ, யாரையும் பாதுகாக்கவோ முயற்சிக்கக் கூடாது என நீதிபதி எச்சரித்தார். தொடர்ந்து, வழக்கை திருப்பூர் எஸ்.பி. ஸ்ருஷ்டிசிங் விசாரிப்பார் என்றும், ஐ.ஜி. காமினி விசாரணையைக் கண்காணிப்பார் என்றும் அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஜான் சத்யன் தெரிவித்தார்.

கள்ளக்குறிச்சி த.வெ.க. எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் விவகாரம்: விசாரணை அதிகாரிகள் நியமனம்! செல்போனை பறிமுதல் செய்ய போலீசார் திட்டம்
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 24 Nov 2026 17:45 PM IST

நவம்பர் 24, 2026: கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்த புகாரில், தமிழக வெற்றிக் கழக சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் மீது ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரிக்க தனி அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் பயன்படுத்திய செல்போனையும் பறிமுதல் செய்ய காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.

மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி – சர்ச்சை

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பத்மஜாவுக்கு, சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் ஆபாசமான குறுஞ்செய்திகளை அனுப்பியதாகத் தகவல்கள் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தின. இதற்கு விளக்கம் அளித்த அருள் விக்னேஷ், அப்படியொரு சம்பவமே நடைபெறவில்லை என்றும், புகாரில் உண்மை இருந்தால் நடவடிக்கை எடுக்கலாம் என்றும் தெரிவித்திருந்தார்.

இந்த விவகாரத்தில் விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க தேசிய மகளிர் ஆணையம் உத்தரவிட்டது. இதற்கிடையே, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்ற வேண்டும் என வலியுறுத்தினார். நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழியும், மாவட்ட ஆட்சியருக்கே இந்த நிலைமை என்றால் சாதாரண பெண்களின் நிலை என்ன எனக் கேள்வி எழுப்பியிருந்தார்.

சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணை

இதற்கிடையே, அருள் விக்னேஷ் மீது வழக்குப்பதிவு செய்யக் கோரி அதிமுக வழக்கறிஞர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இதனை விசாரித்த நீதிபதி லட்சுமி நாராயணன், மாவட்ட ஆட்சியர் புகார் அளித்துள்ளாரா, குறுஞ்செய்தி அனுப்பியதற்கான ஆதாரங்கள் உள்ளனவா எனக் கேள்வி எழுப்பினார்.

மேலும் படிக்க: தமிழ்நாட்டில் நடப்பது ஆட்சியா, இல்லை வேறெதுவுமா? – ஸ்டாலின் கடும் விமர்சனம்!

இந்தச் சூழலில், மாவட்ட ஆட்சியர் பத்மஜா நேற்று இரவு மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தார். இதன் அடிப்படையில் அருள் விக்னேஷ் மீது ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

விசாரணை அதிகாரிகள் நியமனம்

இந்த வழக்கு இன்று மீண்டும் உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அப்போது, இந்த வழக்கில் அரசியல் செய்யவோ, யாரையும் பாதுகாக்கவோ முயற்சிக்கக் கூடாது என நீதிபதி எச்சரித்தார். தொடர்ந்து, வழக்கை திருப்பூர் எஸ்.பி. ஸ்ருஷ்டிசிங் விசாரிப்பார் என்றும், ஐ.ஜி. காமினி விசாரணையைக் கண்காணிப்பார் என்றும் அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஜான் சத்யன் தெரிவித்தார்.

மேலும் படிக்க: திருப்பரங்குன்றம் செல்ல முயன்ற பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கைது! – நெல்லையில் பரபரப்பு

மேலும், முக்கிய ஆதாரங்களைச் சேகரிக்கும் வகையில் அருள் விக்னேஷ் பயன்படுத்திய செல்போனைப் பறிமுதல் செய்யவும் காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர். இந்த விவகாரம் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Follow Us