பெத்தி படத்தில் ஹெல்லல்லலோ பாடலுக்கு டான்ஸ் ஆடியது குறித்து ஓபனாக பேசிய ஸ்ருதி ஹாசன்
Shruti Haasan Recent Interview | தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகம் ஆகி தற்போது பான் இந்திய மொழிகளில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நடிகை ஸ்ருதி ஹாசன். இவர் சமீபத்தில் அளித்தப் பேட்டி ஒன்றில் பெத்தி படத்தில் பாடல் ஒன்றிற்கு நடனம் ஆடியது குறித்து பேசியுள்ளார்.
உலக நாயகன் கமல் ஹாசனின் மூத்த மகள் தான் நடிகை ஸ்ருதி ஹாசன் (Shruti Haasan). இவரது அம்மாவும் பிரபல நடிகைதான். வாரிசு நடிகையாக தமிழ் சினிமாவில் தனது நடிப்பு பயணத்தை தொடங்கிய நடிகை ஸ்ருதி ஹாசன் படங்களில் நடிப்பதற்கு முன்பே பாடகியாக மக்களின் மனதில் இடம் பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து நாயகியாக இவர் அறிமுகம் ஆன முதல் படம் 7-ம் அறிவு. நடிகர் சூர்யாவிற்கு ஜோடியாக இந்தப் படத்தில் நடிகை ஸ்ருதி ஹாசன் நடித்து இருந்தார். இந்தப் படத்தில் இவரது நடிப்பை ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்தனர். அதனைத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடிகை ஸ்ருதி ஹாசன் நடித்து வந்தார். தொடர்ந்து தமிழ் சினிமாவில் மட்டும் இன்றி பான் இந்திய மொழிகளிலும் நடிகை ஸ்ருதி ஹாசன் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் நடிகை ஸ்ருதி ஹாசன் சமீபத்தில் அளித்தப் பேட்டி ஒன்றில் நடிகர் ராம் சரண் நடிப்பில் தெலுங்கு மொழியில் இறுதியாக வெளியான் பெத்தி படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு நடனம் ஆடியது குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார். அந்தப் பேட்டி தற்போது இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடையே வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.




பெத்தி பட பாடலுக்கு டான்ஸ் ஆடியது குறித்து பேசிய ஸ்ருதி ஹாசன்:
அந்த அனுபவத்தைப் பற்றி நான் கருத்து தெரிவிப்பது சரியாக இருக்காது, எனவே அதைப் பற்றி நான் பேச விரும்பவில்லை. ஏனென்றால், மற்ற பெண்களின் சார்பாக என்னால் பேச முடியாது; அதேபோல், அவர்களாலும் எனக்காகவோ அல்லது என்னுடன் பணிபுரியும் எனது குழுவினருக்காகவோ பேச முடியாது. படப்பிடிப்பின் போது அது ஒரு ‘ஐட்டம் சாங்’ (item song) ஆக இருக்கலாம், ஒரு காட்சியாக இருக்கலாம் அல்லது சண்டைக் காட்சியாக இருக்கலாம் நானும் எனது குழுவினரும் மிகச் சரியாக ஒருங்கிணைந்து செயல்படுவோம்.
ஏதேனும் ஒரு விஷயம் சரியாக அமையவில்லை என்றால், அதை என்னிடம் வெளிப்படையாகச் சொல்ல அவர்களுக்கு முழு உரிமை உண்டு. இருப்பினும், சில சமயங்களில் கவனக்குறைவாக ஏதேனும் தவறி நடக்கக்கூடும்; ஆனால், நாங்கள் எப்போதும் மிகுந்த கவனத்துடன் இருக்கவே முயற்சி செய்கிறோம் என்று தெரிவித்துள்ளார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
Also Read… வசூலில் ரூபாய் 100 கோடிகளை கடந்தது தனுஷின் ஓ.எம் படம் – வெளியானது அப்டேட்
இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:
#ShrutiHaasan about #Peddi Hellallallo Song
– It wouldn’t be right of me to comment on the experience at all, so I don’t want to get into that, because I can’t speak for other women, and they can’t speak for me and my team around me.
– When I’m in the moment, and it doesn’t need to be an item song, it can be a scene, it can be a fight scene my team and I are very much in sync. It’s okay to come and tell me, like, We can’t let something go off. Having said that, it happens sometimes, and it slips past everyone, you know, but we try to be careful.
#RamCharan https://t.co/xY7OVNEybl— Movie Tamil (@_MovieTamil) November 23, 2026
Also Read… மனைவியின் கடிதத்தை படிக்க முடியாமல் போனதால் வருத்தத்தில் ஜேசன் – வைரலாகும் வீடியோ