AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

Dhanush: ரசிக்கிற கண்ணான கண்மணியே.. 2 நாட்கள் முடிவில் உலகமெங்கும் தனுஷின் ஓ.எம் படத்தின் வசூல் இதுதான் – அறிவிப்பு!

Dhanush O.M Movie 2 Days Collection: கடந்த 2026ம் ஆண்டு நவம்பர் 20ம் தேதியில், நடிகர் தனுஷின் நடிப்பில் பான் இந்திய மொழிவதும் வெளியான திரைப்படம்தான் ஓ.எம். இந்த படமானது வெளியாகி 2 நாட்களை கடந்த நிலையில், உலகமெங்கும் அதிகாரப்பூர்வமாக எவ்வளவு வசூல் செய்துள்ளது என படக்குழு அறிவித்துள்ளது.

Dhanush: ரசிக்கிற கண்ணான கண்மணியே.. 2 நாட்கள் முடிவில் உலகமெங்கும் தனுஷின் ஓ.எம் படத்தின் வசூல் இதுதான் – அறிவிப்பு!
தனுஷ் ஓ.எம் திரைப்படத்தின் 2 நாட்கள் வசூல்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 22 Nov 2026 19:00 PM IST

தென்னிந்திய திரைத்துறையில் ரசிகர்களால் கொண்டாடப்பட்டுவரும் நாயகனாக இருந்துவருபவர் தனுஷ் (Dhanush). இவரின் நடிப்பில் தமிழில் தொடர்ந்து பிரம்மாண்டமான திரைப்படங்கள் உருவாக்கப்பட்டுவருகிறது. இந்த 2026ம் ஆண்டில் மட்டுமே இவரின் நடிப்பில் கர (Kara Movie) மற்றும் ஓ.எம் (O.M Movie) என இரு திரைப்படங்கள் வெளியாகியிருந்தது. இதில் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமியின் (Rajkumar Periasamy) இயக்கத்தில் இறுதியாக வெளியான திரைப்படம்தான் ஓ.எம். இப்படத்தில் நடிகர் தனுஷ் ஹீரோவாக நடிக்க, அவருக்கு ஜோடியாக இளம் நடிகை ஸ்ரீலீலா (Sreeleela) நடித்திருந்தார். இப்படத்தில் மிகவும் முக்கியமான வேடத்தில் மலையாள ஸ்டார் மம்முட்டி (Mammootty) நடித்திருந்தார். அதே போலவே நடிகை சாய் பல்லவியும் (Sai Pallavi) நித்யா ரெட்டி என்ற போலீஸ் அதிகாரியாக அதிரடி வேடத்தில் நடித்திருந்தார்.

இந்த படமானது 2026 நவம்பர் 20ம் தேதியில் உலகெங்கும் வெளியாகியிருந்தது. இந்நிலையில் 2 நாட்கள் முடிவில் இப்படம் எவ்வளவு வசூல் செய்துள்ளது என படக்குழு அறிவித்துள்ளது. அது குறித்து விவரமாக பார்க்கலாம்.

இதையும் படிங்க: பேக் டூ பேக் டபுள் எவிக்ஷன்.. பிக் பாஸிலிருந்து வெளியேறிய சாதிகா – முகேஷ் – வைரலாகும் ப்ரோமோ!

தனுஷின் ஓ.எம் திரைப்படத்தின் 2 நாட்கள் வசூல் விவரம்:

இப்படமானது 2 நாட்கள் முடிவில் இப்படமானது உலகமெங்கும் சுமார் ரூ 75 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. தனுஷ் இந்த திரைப்படத்தில் உளவாளி போலீஸ் அதிகாரி திருக்குமரன் என்ற வேடத்தில் நடித்துள்ளார். அவரின் மனைவியாக ஸ்ரீலீலா மற்றும் அவரின் தந்தையாக இந்திரன்ஸ் போன்ற நடிகர்கள் இணைந்து நடித்திருந்தனர்.

இதையும் படிங்க: தனுஷ் 56 படத்தின் படப்பிடிப்பிற்காக மதுரை சென்ற தனுஷ்… வைரலாகும் வீடியோ!

மேலும் இப்படத்தில் செம்மரக்கடத்தல் தலைவனாக மம்முட்டி நடித்துள்ளார். மேலும் வனத்துறை அதிகாரி நித்யா ரெட்டியாக சாய் பல்லவி நடித்திருந்தார். இப்படம் ஒரு மல்டி ஸ்டார் திரைப்படமாக அமைந்த நிலையில், திரையரங்குகளில் நல்ல வரவேற்பை பெறுகிறது.

ஓ.எம் திரைப்படத்தின் 2 நாட்கள் வசூல் குறித்து படக்குழு வெளியிட்ட அறிவிப்பு பதிவு:

இந்த ஓ.எம் திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் திரையரங்குகளில் சிறப்பான வரவேற்பு இருக்கிறது. நடிகை சாய் அல்லவோ சென்னையில் உள்ள திரையரங்குகளுக்கு சமீபத்தில் சர்ப்ரைஸாக ரசிகர்களை சந்தித்திருந்தார். மேலும் நடிகர் தனுஷ் தற்போது டி56 படத்தின் ஷூட்டிங்கில் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us