AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

பேக் டூ பேக் டபுள் எவிக்ஷன்.. பிக் பாஸிலிருந்து வெளியேறிய சாதிகா – முகேஷ் – வைரலாகும் ப்ரோமோ!

Bigg Boss Tamil 10 Double Eviction: பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியானது 11வது வாரத்தின் இறுதியில் உள்ள நிலையில், மொத்தம் 10 போட்டியாளர்கள் இதில் இருந்தனர். இந்நிலையில் கடந்த இரு வாரங்களாக பிக் பாஸில் டபுள் எவிக்ஷன் இருந்த நிலையில், இந்த வாரத்திலும் டபுள் எவிக்ஷன் நடந்துள்ளது. இதில் சாதிகா மற்றும் முகேஷ் இருவருமே வெளியேற்றப்பட்டதாக ப்ரோமோ வெளியாகியுள்ளது.

பேக் டூ பேக் டபுள் எவிக்ஷன்.. பிக் பாஸிலிருந்து வெளியேறிய சாதிகா – முகேஷ் – வைரலாகும் ப்ரோமோ!
சாதிகா மற்றும் முகேஷ் வெளியேற்றப்பட்டனர்.Image Source: Social Media
Barath Murugan
Barath Murugan | Published: 22 Nov 2026 18:34 PM IST

தமிழில் மக்களிடையே அதிகமாக பார்க்கப்படும் ரியாலிட்டி ஷோவாக இருப்பது பிக் பாஸ் சீசன் 10 (Bigg Boss Season 10). இந்த நிகழ்ச்சியை நடிகர் விஜய் சேதுபதி (Vijay Sethupathi) தொகுப்பாளராக தொகுத்துவருகிறார். கடந்த பிக் பாஸ் சீசன் 08 நிகழ்ச்சியிலிருந்து தொகுத்துவரும் நிலையில், அதற்கு முன் கமல்ஹாசன் இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியிருந்தார். இந்த பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியானது ஆரம்பமாகி கிட்டத்தட்ட 77 நாட்களை கடந்துள்ளது. இந்த வாரத்தில் இந்நிகழ்ச்சியில் மொத்தம் 10 போட்டியாளர்கள் மட்டுமே மீதம் இருந்த நிலையில், கடந்த இரு வாரங்களை போலவே டபுள் எவிக்ஷன் நடைபெற்றுள்ளது.

இந்த எவிக்ஷனில், போட்டியாளர் சாதிகா (Shathiga) மற்றும் முகேஷ் (Mukesh) வெளியேற்றப்பட்டதாக சில நாட்களாக இணையத்தில் தகவல்கள் பரவிவந்தது. அதே மாதிரி பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியின் 11வது வாரத்தின் எவிக்ஷனில் சாதிகா மற்றும் முகேஷ் என இருவர் வெளியேற்றப்பட்டுள்ளனர். இது குறித்த பிக் பாஸ் ப்ரோமோ வெளியாகி இணையத்தில் வைரலாகிவருகிறது.

இதையும் படிங்க: தன்யாவின் இந்தவார கேப்டன்சி.. டிடிஃஎப் வாசனுக்கு ஆதரவா? – கேள்விகளால் அடுக்கிய போட்டியாளர்கள்!

பிக் பாஸிலிருந்து வெளியேறிய சாதிகா மற்றும் முகேஷ்:

இந்த ப்ரோமோவில் விஜய் சேதுபதி, “இந்த வாரத்தின் நாமினேஷனில் இருக்கும் அனைவரும் வீட்டின் வெளியே செல்லுங்கள்.. அதில் உங்களின் முகம் போட்ட பொம்மை ஓன்று இருக்கும். அதில் உங்களுக்காக விஷயம் இருக்கிறது” என கூறியிருந்தார். இந்நிலையில் நாமினேஷனில் இருந்த போட்டியாளர்கள் அனைவரும் தங்களின் பொம்மையில் இருந்த சீட்டு ஒன்றை எடுத்தனர்.

இதையும் படிங்க: துருவ் விக்ரமின் ஜாக்கி படத்தில் அவருக்கு ஜோடியாக இணையும் நடிகை யார்?

அதில் வாசன் saved, மற்றும் ஜேசன் saved என குறிப்பிடப்பட்ட நிலையில், சாதிகா எவிக்டட் என எழுதியிருந்தது. இதனால் முதல் போட்டியாளராக சாதிகா வெளியேறினார். இதன் பிறகு 2வது எவிக்ஷன் ஓன்று இருப்பதாக விஜய் சேதுபதி கோரிய நிலையில், போட்டியாளர்கள் பீதியில் இருந்தனர். பின் முகேஷ் எவிக்ட் செய்யப்பட்டதாக விஜய் சேதுபதி தெரிவித்திருந்தார். தற்போது இந்த ப்ரோமோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது.

பிக் பாஸ் சீசன் 10 ஷோவின் 77வது நாளின் 4வது ப்ரோமோ குறித்த எக்ஸ் பதிவு:

இந்த பிக் பாஸ் சீசன் 10 தமிழ் நிகழ்ச்சியில் கடந்த 2 வாரங்களும் டபுள் எவிக்ஷன் நடந்தது. அதே போலவே இந்த வாரத்திலும் நடந்துள்ளது. பிக் பாஸ் நிகழ்ச்சியானது இன்னும் சில வாரங்களில் நிறைவடைந்துவிடும் நிலையில், டைட்டிலை யார் தட்டி செல்கிறார் என பொறுத்திருந்து பார்க்கலாம்.

Follow Us