முதல்வர்-பொதுச்செயலராக எடப்பாடி உயர்வதற்கு உதவியவர் வேலுமணி.. ஆனால் அதை மறந்துவிட்டு இப்படியெல்லாம்.. கே.ஏ.எஸ். அட்டாக்!
Minister K. A. Sengottaiyan : தமிழகத்தின் முதல்வராகவும், அதிமுகவின் பொதுச்செயலாளராகவும் எடப்பாடு கே. பழனிசாமி ஆவதற்கு எஸ். பி. வேலுமணி தான் உதவினார். எனவும், அதனை மறந்துவிட்டு பேசுவதாகவும் வருவாய், பேரிடர மேலாண்மைத் துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
அதிமுகவில் எடப்பாடி பழனிசாமிக்கும், எஸ்.பி. வேலுமணி இடையே மீண்டும் கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக, கோயம்புத்தூரில் அமைச்சர் கே. ஏ. செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஞானத்தை எதிர்த்து போரிடலாம். காலத்தை எதிர்த்து போரிட முடியாது. காலம் வைக்கிற புள்ளியையும் உன்னால் அழிக்க முடியாது. எடப்பாடி செக்கானூரணி லாக்கப் மரணம்! உண்மையிலேயே முதல்வர் கட்டுப்பாட்டில் காவல்துறை உள்ளதா? அப்படி இருந்தால்.. கனிமொழி காட்டமான கேள்வி! நடக்கும் நிகழ்வு இதுவாகவே உள்ளது. ஒவ்வொரு நபராக தனது அதிகாரத்தை பயன்படுத்தி எடப்பாடி பழனிசாமி வெளியேற்றி வருகிறார். எந்த ஒரு தலைமைக்கு மன்னிக்கும் தன்மையோ அல்லது பெருந்தன்மையோடு இல்லையோ அது வெகு நாட்கள் நீடித்து நிலைத்து நின்றதாக வரலாறு கிடையாது. அந்த வரலாறு எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும். எடப்பாடி பழனிசாமி பொதுச் செயலாளராகவும், முதல் அமைச்சராகவும் உயர்வதற்கு எஸ். பி. வேலுமணி உறுதுணையாக இருந்தவர் ஆவார்.
எஸ்.பி.வேலுமணியுடனான சந்திப்பு எத்தேச்சையாக நடந்தது
அந்த உதவியை மறந்துவிட்டு எடப்பாடி பழனிசாமி பேசி வருகிறார். பொள்ளாச்சியில் எஸ். பி. வேலுமணியை சந்தித்து பேசியது எத்தேச்சையாக நடந்தது ஆகும். இருவருக்கும் அவர் நெருக்கமானவர். இந்த சந்திப்பின் போது, என்னுடன் அதிமுக மற்றும் தவெக நிர்வாகிகள் உடனிருந்தனர். பொதுவான கருத்துக்களை தான் நாங்கள் இருவரும் பேசினோம் என்று தெரிவித்தார். முன்னதாக, அதிமுகவில் இருக்கும் 2 கோடி தொண்டர்களில் எஸ்பி வேலுமணியும் ஒருவர் தான் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருந்தார்.
மேலும் படிக்க: செக்கானூரணி லாக்கப் மரணம்! உண்மையிலேயே முதல்வர் கட்டுப்பாட்டில் காவல்துறை உள்ளதா? அப்படி இருந்தால்.. கனிமொழி காட்டமான கேள்வி!
எடப்பாடி பழனிசாமி- எஸ். பி. வேலுமணி கருத்து மோதல்
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக எஸ்பி வேலுமணி மற்றும் அவரது தொண்டர்களால் தான் எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் பொதுச் செயலாளராகவும், தமிழகத்தின் முதல் அமைச்சராகவும் ஆனார் என்றும், அவர்களின் குரல் தற்போது கேட்பதில்லை இன்றும் சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை எஸ். பி. வேலுமணி வெளியிட்டு இருந்தார். இதனால், மீண்டும் எடப்பாடி பழனிசாமிக்கு, எஸ். பி. வேலுமணிக்கும் இடையே கருத்து மோதல் எழுந்தது. இதனிடையே, பொள்ளாச்சியில் நடந்த திருமண நிகழ்ச்சியில் செங்கோட்டையன், வேலுமணி ஆகியோர் சந்தித்து பேசி இருந்தனர்.
வேலுமணிக்கு செங்கோட்டையன் ஆதரவு பேசும் பொருளானது
இது எதேச்சையாக நடந்த சந்திப்பு என்றாலும், வேலுமணி அதிருப்தியில் இருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்பி இருந்தது. இந்த நிலையில் தான், எஸ். பி. வேலுமணி குறித்து எடப்பாடி பழனிசாமியின் கருத்துக்கு அமைச்சர் கே. ஏ. செங்கோட்டையன் பதிலடி கொடுத்துள்ளார். எஸ். பி. வேலுமணிக்கு, செங்கோட்டையன் ஆதரவு அளித்து வருவது அரசியல் வட்டாரத்தில் பல்வேறு கேள்விகளை எழுப்பியதுடன் பேசும் பொருளாகி உள்ளது.
மேலும் படிக்க: சோனியா குடும்ப கதையை கேட்க நேரமிருந்தது.. ஆனால் விவசாயிகள் பற்றி பேச நேரமில்லையா முதல்வர் அவர்களே? எடப்பாடி ஆக்ரோஷம்!