Dhruv Vikram: துருவ் விக்ரமின் ஜாக்கி படத்தில் அவருக்கு ஜோடியாக இணையும் நடிகை யார்?
Jackie Film Heroine Update: தமிழ் சினிமாவில் ரசிகர்களால் கவரப்பட்டுவரும் இளம் நாயகனாக இருந்துவருபவர் துருவ் விக்ரம். இவர் இயக்குநர் கரண் அரவிந்த் குமார் இயக்கத்தில் ஜாக்கி என்ற படத்தில் நடித்துவருகிறார். இதில் இவருக்கு ஜோடியாக தெலுங்கு நடிகை ஒருவர் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகிவருகிறது. அது யார் என்பது குறித்து விவரமாக பார்க்கலாம்.
கோலிவுட் சினிமா ரசிகர்களிடையே சிறந்த இளம் கதாநாயகனாக இருந்துவருபவர் துருவ் விக்ரம் (Dhruv Vikram). இவர் தமிழ் நடிகர் சியான் விக்ரமின் (Chiyaan Vikram) மகன் ஆவார். இவர் ஆதித்ய வர்மா என்ற படத்தின் மூலம் தமிழில் நடிகராக நுழைந்த நிலையில், இவருக்கு ஒரு கதாநாயகனாக சிறப்பான வரவேற்பை கொடுத்த திரைப்படம் பைசன் (Bison Movie). இந்த படத்தை தமிழ் இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கியிருந்த நிலையில், கடந்த 2025ம் ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியானது. இந்த படமானது இவருக்கு ஹீரோவாக மக்களிடையே சிறப்பான வரவேற்பை கொடுத்தது. இந்த படத்திற்கு பிறகு இவரின் நடிப்பில் உருவாகிவரும் 4வது திரைப்படம்தான் ஜாக்கி (Jackie Movie). இதை அறிமுக இயக்குநர் கரண் அரவிந்த் குமார் (Director Karan Aravind Kumar) இயக்கிவருகிறார்.
மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும், இப்படத்தின் ஷூட்டிங் கடந்த சில வாரங்களுக்கு முன் சிறப்பாக ஆரம்பமாகியிருந்தது. இந்நிலையில் இப்படத்தின் நடிகை யார் என அறிவிக்கப்படாமல் இருந்த நிலையில், தற்போது தெலுங்கு நடிகை ஒருவர் துருவ் விக்ரமுக்கு ஜோடியாக இணைவதாக இணையத்தில் தகவல்கள் வைரலாகிவருகிறது.




இதையும் படிங்க: தனுஷ் 56 படத்தின் படப்பிடிப்பிற்காக மதுரை சென்ற தனுஷ்… வைரலாகும் வீடியோ!
ஜாக்கி படத்தில் துருவ் விக்ரமுக்கு ஜோடியாக இணையும் தெலுங்கு நடிகை:
இந்த ஜாக்கி திரைப்படத்தில் நடிகர் துருவ் விக்ரம், அதிரடி மற்றும் ஸ்டண்ட் மாஸ்டராக நடித்துள்ளாராம். இப்படத்தில் அவர் அதிரடி ஆக்ஷன் வேடத்தில் நடித்துவரும் நிலையில் அவருக்கு ஜோடியாக நடிக்கும் நடிகை யார் என எதிர்பார்க்கப்பட்டது. சில இப்படத்தில் நடிகை அனுபமா பரமேஸ்வரன் இணைந்து நடிப்பதாக கூறப்பட்ட நிலையில், தற்போது தெலுங்கு நடிகை ஒருவர் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகிவருகிறது.
இதையும் படிங்க: ஜெயிலர் 2 பிளாக்பஸ்டர்.. எடிட்டர் குழுவுடன் கேக் வெட்டி கொண்டாடிய நெல்சன் திலீப்குமார்!
துல்கர் சல்மானின் ஆகாஷம்லோ ஒக்க தாரா படத்தில் நடித்து அறிமுகமான, நடிகை சாத்விகா வீரவல்லி இப்படத்தில் நடிகையாக நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
துருவ் விக்ரமின் ஜாக்கி பட நடிகை தொடர்பாக வைரலாகும் எக்ஸ் பதிவு:
#DhruvVikram is currently working on a film titled #Jackie. #SatvikaVeeravalli, who was also seen in Aakasamlo Oka Tara, is reportedly playing the female lead in the film. https://t.co/bXy8ktYmG2
— Movie Tamil (@_MovieTamil) November 21, 2026
நடிகை சாத்விகா வீரவல்லி, தெலுங்கில் துல்கர் சல்மானின் ஆகாஷம்லோ ஒக்க தாரா என்ற படத்தின் மூலமாக கதாநாயகியாக சினிமாவில் அறிமுகமாகியிருந்தார். இப்படத்தில் அவரின் நடிப்பு சிறப்பாக அமைந்திருந்த நிலையில், ராம் சரணின் 17வது படத்திலும் இவர் கதாநாயகியாக நடிப்பதாக கூறப்படுகிறது. இந்த வரிசையில்தான் இவர் தமிழில் துருவ் விக்ரமின் ஜாக்கி படத்தில் நாயகியாக நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இது எந்த அளவுக்கு உண்மை என தெரியவில்லை. இதுகுறித்த எந்த அறிவிப்பையும் படக்குழு வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.