AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

Jackie: ஆக்ஷன் ஹீரோவாக துருவ்.. வெளியானது ‘ஜாக்கி’ படத்தின் ‘First Move’ வீடியோ!

Jacky Movie Promo: தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் இளம் ஹீரோவாக மக்களிடையே பிரபலமானவர் துருவ் விக்ரம். இவர் அறிமுக இயக்குநர் கரண் அரவிந்த் குமாரின் இயக்கத்தில் நடித்துவரும் புது படம்தான் ஜாக்கி. தற்போது இப்படத்திலிருந்து முதல் கிளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு பகிர்ந்துள்ளது.

Jackie: ஆக்ஷன் ஹீரோவாக துருவ்.. வெளியானது ‘ஜாக்கி’ படத்தின் ‘First Move’ வீடியோ!
ஜாக்கி திரைப்பட புரோமோImage Source: X
Barath Murugan
Barath Murugan | Updated On: 18 Sep 2026 17:56 PM IST

கோலிவுட் சினிமாவில் முன்னணி நட்சத்திர நாயகனாக இருந்துவருபவர் சியான் விக்ரம் (Chiyaan Vikram). இவரின் நடிப்பில் பல படங்கள் வெளியாகி சூப்பர் ஹிட்டாகியிருக்கிறது. அந்த விதத்தில் இவரின் மகனுமான துருவ் விக்ரம் (Dhruv Vikram) தற்போது சினிமாவில் ஹீரோவாக நடித்துவருகிறார். இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம்தான் பைசன் (Bison). இதை இயக்குநர் மாரி செல்வராஜ் (Mari Selvaraj) இயக்கியிருந்த நிலையில், மக்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பை பெற்றிருந்தது. கடந்த 2025ம் ஆண்டு தீபாவளியை முன்னிட்டு வெளியாகியிருந்தது. இந்த படமானது துருவ் விக்ரமுக்கு மாபெரும் வெற்றி திரைப்படமாக அமைந்திருந்தது. இந்த படத்திற்கு பின் அறிமுக இயக்குநர் கரண் அரவிந்த் குமார் (Karan Aravind Kumar) இயக்கத்தில் இவர் இணைந்த திரைப்படம்தான் ஜாக்கி (Jackie).

இந்த படமானது ஆரம்பத்தில் DV04 என டைட்டில் வைக்கப்பட்டிருந்தது. அந்த விதத்தில் இப்படமானது அதிரடி ஆக்ஷன் மற்றும் காதல் கதைக்களத்தில் உருவாக்கப்பட்டுள்ள நிலையில், ஷூட்டிங் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாம். அதை முன்னிட்டு தற்போது இப்படத்திலிருந்து அறிமுக வீடியோவை படக்குழு பகிர்ந்துள்ளது.

இதையும் படிங்க: நான் பார்த்த சட்டமன்றக் காட்சிகளில் அவர் கலக்கி வருகிறார்.. முதல்வர் விஜய் குறித்து பேசிய நானி!

துருவ் விக்ரமின் ஜாக்கி திரைப்படம் குறித்து படக்குழு வெளியிட்ட முதல் கிளிம்ப்ஸ் வீடியோ:

ஜாக்கி பட கிளிம்ப்ஸ் வீடியோ எப்படி இருக்கு:

இந்த ஜாக்கி படமானது அதிரடி ஆக்ஷ்ன் கதைக்களத்தில் உருவாகுவதாக தெரிகிறது. இப்படத்தில் துருவ் விக்ரம் பிளே பாயாக நடித்திருப்பதாக தெரிகிறது. மேலும் இப்படத்தில் அதிரடி ஆக்ஷ்ன் கதாபாத்திரத்திலும் இவர் நடித்திருப்பதாக தெரிகிறது.

ஜாக்கி திரைப்படத்தின் ரிலீஸ் எப்போது இருக்கும்:

இந்த ஜாக்கி திரைப்படத்தில் நடிகர் துருவ் விக்ரம் ஹீரோவாக நடிக்க, அவருக்கு ஜோடியாக எந்த நடிகை என அறிவிக்கப்படவில்லை. இந்த படத்தில் ஆரம்பத்தில் சாய் அபயங்கர் இசையமைப்பதாக கூறப்பட்ட நிலையில், பின் சந்தோஷ் நாராயணன் இசையமைப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இதையும் படிங்க: கதையைக் கேட்காமலேயே ஓகே சொல்லிட்டேன்.. வேட்டுவம் படம் குறித்து பேசிய ஆர்யா!

இந்த படமானது அதிரடி காதல் கதைக்களத்தில் இயக்கப்பட்டுள்ள நிலையில், இப்படத்தின் மீது எதிர்பார்ப்புகள் அதிகமாக உள்ளது. இப்படத்தை இந்த 2026ம் ஆண்டு தீபாவளியை முன்னிட்டு அல்லது கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வெளியிட அதிக வாய்ப்புகள் உள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கிறது.

Follow Us