Vettuvam: மக்களுக்கான தலைவனை தேந்தெடுக்கும் போட்டி.. வெளியானது ‘வேர்ல்ட் ஆப் வேட்டுவம்’ கிளிம்ப்ஸ்!
World of Vettuvam Glimpses Video: தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குநர்களில் ஒருவராக இருந்துவருபவர் பா.ரஞ்சித். இவரின் இயக்கத்திலும், தயாரிப்பிலும் உருவாகியுள்ள திரைப்படம்தான் வேட்டுவம். இப்படமானது 2026ம் ஆண்டில் வெளியாக காத்திருக்கும் நிலையில், இதிலிருந்து தி வேர்ல்ட் ஆப் வேட்டுவம் என்ற கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகியுள்ளது.
கோலிவுட் சினிமாவில் கிட்டத்தட்ட 2 ஆண்டுகளாக பல்வேறு தடைகள், சிக்கல்கள் மற்றும் பலிகளை கடந்தும் மிகவும் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டுள்ள திரைப்படம்தான் வேட்டுவம் (Vettuvam). இது தமிழ் இயக்குநர் பா. ரஞ்சித் (Pa.Ranjith) இயக்கம் மற்றும் தயாரிப்பிலும் உருவாக்கியுள்ளார். இந்த வேட்டுவம் படமானது கடந்த 2025ம் ஆண்டு தொடக்கத்திலே ஷூட்டிங் ஆரம்பமான நிலையில், கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக ஷூட்டிங் நடைபெற்றிருந்தது. இந்த படத்தில் நடிகர் ஆர்யா (Arya), அட்டகத்தி தினேஷ் (Attakathi Dinesh) மற்றும் சோபிதா துளிபலா இணைந்து நடித்துள்ளனர். இந்த படம் அதிரடி ஆக்ஷன் மற்றும் அறிவியல் புனைகதைகளை மையமாக கொண்டு இயக்கப்பட்டுள்ளதாம்.
இந்த படமானது பான் இந்திய படமாக உருவாக்கப்பட்டுள்ள நிலையில், இந்த படத்தின் மீது அதிக எதிர்பார்ப்புகள் இருந்துவருகிறது. இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துவரும் நிலையில், பாடல்களும் சிறப்பாக உருவாக்கப்பட்டுள்ளது. அந்த விதத்தில் இந்த படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்த நிலையில், தற்போது இப்படக்குழு தி வேர்ல்ட் ஆப் வேட்டுவம் கிளிம்ப்ஸ் வீடியோவை வெளியிட்டுள்ளது.




இதையும் படிங்க: ரூ 300 கோடி வசூல் சாதனையில் பெத்தலகேம் குடும்ப யூனிட் படம்.. நெகிழ்ச்சியான பதிவை பகிர்ந்த நிவின் பாலி!
ஆர்யா மற்றும் அட்டகத்தி தினேஷின் வேட்டுவம் படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோவை வெளியிட்ட பா. ரஞ்சித்:
A vision is only as powerful as the hands that bring it to life.
Grateful to everyone who helped us make the unseen seen. ⏾
An Introduction to #Vettuvam: #WorldOfVettuvam
🔗 https://t.co/ChcuACueC5@officialneelam @LearnNteachprod @Saidevanand3 @mr_saivenkat @arya_offl…— pa.ranjith (@beemji) September 18, 2026
இந்த கிளிம்ப்ஸ் வீடியோவை பார்க்கையில், இந்த படத்தில் ஒரு தலைவர் இடத்திற்காக இரு நபர்கள் போட்டியிடும் கதையில் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் இப்படத்தில் கடந்த கால கதைகளும் இருக்கும்படி உள்ளது. கிட்டத்தட்ட இப்படமானது அறிவியல் புனைகதைகளை மையமாக கொண்ட படமாக உருவாக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது. இந்த படத்தில் அட்டகத்தி தினேஷ் மற்றும் ஆர்யா இருவரும் லீட் வேடத்தில் நடித்துள்ளனர்.
இதையும் படிங்க: விஜய் தேவரகொண்டா- ராஷ்மிகா மந்தனாவின் ரணபாலி பட ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் தேதி அறிவிப்பு!
மேலும் நடிகை சோபிதா துளிபலாவும் மிகவும் முக்கியமான வேடத்தில் நடித்திருப்பதாக தெரிகிறது. இந்த படமானது மூன்று காலகட்டங்களில் ஒரு தலைவன் இடத்திற்காக நடக்கும் போட்டி மற்றும் அரசியலை மையமாக கொண்டு இயக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. தற்போது வேர்ல்ட் ஆப் கிளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு பகிர்ந்துள்ளது. தற்போது வெளியான இந்த வீடியோவானது இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் இப்படத்தின் ரிலீஸ் எப்போது என எதிர்பார்ப்பையும் ஏற்படுத்திவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.