AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

என்னுடைய நடிப்பில் சிறந்த படைப்பாக வேட்டுவம் படத்தை பார்க்கிறேன் – நடிகை ஷோபிதா துலிபாலா

Sobhita Dhulipala Talks About Vettuvam Movie | இந்தி சினிமாவில் நடிகையாக அறிமுகம் ஆகி தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம் மொழிகளில் தொடர்ந்து நடித்து வரும் ஷோபிதா துலிபாலா அவரது நடிப்பில் உருவாகி வரும் வேட்டுவம் ப்டம் குறித்து சமீபத்தில் பேசியது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

என்னுடைய நடிப்பில் சிறந்த படைப்பாக வேட்டுவம் படத்தை பார்க்கிறேன் – நடிகை ஷோபிதா துலிபாலா
ஷோபிதா துலிபாலாImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 30 May 2026 16:46 PM IST

இந்தி சினிமாவில் பிரபல இயக்குநராக உள்ள அனுராக் காஷ்யப் எழுதி இயக்கி கடந்த 2016-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான படம் ராமன் ராகவ் 2.0. இந்தப் படத்தின் மூலம் சினிமாவில் நடிகையாக அறிமுகம் ஆனார் நடிகை சோபிதா துலிபாலா. மேலும் இந்தப் படம் பான் இந்திய அளவில் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்த காரணத்தால் இந்தப் படத்தில் நடித்த நடிகை சோபிதா துலிபாலாவும் மக்களிடையே கவனத்தை ஈர்த்தார். இந்தி மொழியில் நடிகையாக அறிமுகம் ஆன சோபிதா துலிபாலா தற்போது தென்னிந்திய மொழிகளான தெலுங்கு, மலையாளம் மற்றும் தமிழ் மொழிகளில் அடுத்தடுத்துப் படங்களில் நடித்து வருகிறார். தொடர்ந்து பான் இந்திய மொழிகளில் பிசியான நடிகையாக வலம் வரும் நடிகை சோபிதா துலிபாலா நடிப்பில் இறுதியாக தெலுங்கு சினிமாவில் சீக்காட்டிலோ என்ற படம் திரையரங்குகளில் வெளியானது.

இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்ததாக நடிகை சோபிதா துலிபாலா நடிப்பில் தமிழ் சினிமாவில் வேட்டுவம் படம் வெளியாக உள்ளது. இயக்குநர் பா.ரஞ்சித் இந்தப் படத்தை எழுதி இயக்கி உள்ளார். இந்த நிலையில் படம் குறித்து நடிகை சோபிதா துலிபாலா பேசியது இணையத்தில் தற்போது வைரலாகி வருகின்றது.

என்னுடைய நடிப்பில் சிறந்த படைப்பாக வேட்டுவம் படத்தை பார்க்கிறேன்:

அதன்படி சோபிதா துலிபாலா பேசியதாவது, வேட்டுவம் திரைப்படம், இதுவரை நான் செய்த படைப்புகளிலேயே மிகச் சிறந்தது என்று நான் உறுதியாக நம்புகிறேன். இது ஒரு அசாதாரணமான திரைப்படம். மக்கள் இதைப் பார்ப்பதற்கும், இதில் நான் தோன்றும் விதத்தைப் பார்ப்பதற்கும் நான் மிகுந்த ஆவலுடன் காத்திருக்கிறேன். இதில் நான் ஒரு முற்றிலும் மாறுபட்ட, அதிரடியான அவதாரத்தில் (Crazy Avatar) தோன்றவிருக்கிறேன். இத்திரைப்படம் சண்டைக்காட்சிகள் மற்றும் நடனக் கூறுகளைக் கொண்டுள்ளது. பல்வேறு காலக்கட்டங்களில் விரியும் ஒரு பிரம்மாண்டமான காவியமாக இது அமையவுள்ளது; மேலும், இது உச்சகட்ட நாடகத்தன்மையும், மிகுந்த விறுவிறுப்பும் நிறைந்த தருணங்களைக் கொண்ட ஒரு அதிரடித் திரைப்படமாகத் திகழும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Also Read… 40 வருடங்களை நிறைவு செய்தது கமல் ஹாசனின் விக்ரம் படம் – கொண்டாடும் படக்குழு

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… கருப்பனின் பேயாட்டம்.. பரிமளா & கோ பட ரிலீஸ் தேதி மாற்ற காரணம் இதுதான் – இயக்குநர் பாண்டிராஜ் பேச்சு!

Follow Us