Gatta Kusthi 2: கட்டா குஸ்தி 2 படத்தில் இணைந்த கருணாஸ்.. நடிகர்களின் கதாபாத்திர அறிமுக போஸ்டரை வெளியிட்ட படக்குழு!
Gatta Kusthi 2 Movie: நடிகர் விஷ்ணு விஷாலின் நடிப்பில் தயாராகிவரும் திரைப்படம்தான் கட்டா குஸ்தி 2. இயக்குநர் செல்ல அய்யாவு இயக்கத்தில் தயாராகியுள்ள இப்படத்தை, வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனமானது தயாரித்துள்ளது. இப்படம் விரைவில் வெளியாக தயாராகியுள்ள நிலையில், இப்படத்தின் கதாபாத்திரங்கள் அறிமுக போஸ்டரை படக்குழு பகிர்ந்துள்ளது.
தமிழ் சினிமாவில் சிறப்பான இயக்குநர்களில் ஒருவராக இருந்துவருபவர் செல்ல அய்யாவு (Chella Ayyavu). இவரின் இயக்கத்தில் கடந்த 2022ம் ஆண்டில் வெளியாகி வெற்றியை பெற்றிருந்த திரைப்படம்தான் கட்டா குஸ்தி 1 (Gatta Kusthi). இப்படமானது வெளியாகி சிறப்பான வரவேற்பை பெற்றிருந்த நிலையில், இப்படத்தின் தொடர்ச்சியாக தயாராகியுள்ள திரைப்படம்தான் கட்டா குஸ்தி 2 (Gatta Kusthi 2). இப்படத்தில் விஷ்ணு விஷால் (Vishnu Vishal)ஹீரோவாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை ஐஸ்வர்யா லக்ஷ்மி (Aishwarya Lekshm) நடித்துள்ளார். இப்படமானது குஸ்தி மற்றும் பேமிலி ஆக்ஷன் கதைக்களத்தில் தயாராகியுள்ளது. இப்படத்தில் விஷ்ணு விஷால் மற்றும் ஐஸ்வர்யா லக்ஷ்மி இருவருமே குஸ்தி போட்டியாளர்களாகவும், கணவன் மனைவியாகவும் நடித்துள்ளனர். இப்படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்து இறுதிக்கட்ட பணிகள் சிறப்பாக நடைபெற்றுவருகிறது.
இப்படத்தை வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள நிலையில், இசையமைப்பாளர் சென் ரோல்டன் இசையமைத்துவருகிறார். இதில் கட்டா குஸ்தி 1 படத்தில் நடித்த நடிகர்களும் நடித்துள்ள நிலையில், புதிதாக நடிகர் கருணாகரன் இணைந்துள்ளார். இவரின் கதாபாத்திர அறிமுக போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.




இதையும் படிங்க: சூர்யா ரசிகர்களுக்கு அடுத்த ஹேப்பி நியூஸ்.. விஸ்வநாத் அண்ட் சன்ஸ் பட ரிலீஸ் தேதி அறிவிப்பு!
கட்டா குஸ்தி 2 படத்தில் கருணாகரனின் கதாபத்திர அறிமுக போஸ்டரை வெளியிட்ட படக்குழு:
Welcoming the new players onboard #GattaKusthi2 – #Karunakaran as Partha 🫶
The @TheVishnuVishal starrer on the big screens from 3rd July, 2026!
Produced by @VelsFilmIntl & @VVStudioz.
A film by @ChellaAyyavu.
An @RSeanRoldan musical.@IshariKGanesh #AishwaryaLekshmi… pic.twitter.com/EWoEiOFsND— Vels Film International (@VelsFilmIntl) May 28, 2026
நடிகர் கருணாகரன் ஏற்கனவே விஷ்ணு விஷாலின் இன்று நேற்று நாளை என்ற படத்தில், அவரின் நண்பராக நடித்துள்ளார். அதை தொடர்ந்து தற்போது கட்டா குஸ்தி 2 படத்திலும் மிக முக்கியமான வேடத்தில் நடித்துள்ளாராம். இதில் அவர் “பார்த்தா” என்ற வேடத்தில் நடித்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. மேலும் கட்டா குஸ்தி 1 படத்தில் நடித்த கருணாஸ், முனீஷ்காந்த், காளி வெங்கட், லிஸ்ஸி ஆண்டனி, ஸ்ரீஜா மற்றும் கஜராஜ் போன்ற நடிகர்களின் கதாபாத்திரங்கள் தொடர்பான போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.
இதையும் படிங்க: கருப்பு படத்துக்கு சப்போர்ட்.. நீதித்துறையை வெளுத்து வாங்கிய நீதிபதிகள்.. என்ன நடந்தது?
கட்டா குஸ்தி 2 பட நடிகர்களின் அறிமுக போஸ்டர் குறித்து படக்குழு வெளியிட்ட பதிவு:
The family comes back together, for double the fun 💥#GattaKusthi2 – Retained players are here ❤️
Get set for the film in theatres from July 3rd, 2026!
Produced by @VelsFilmIntl & @VVStudioz.
A film by @ChellaAyyavu.
An @RSeanRoldan musical.@IshariKGanesh @TheVishnuVishal… pic.twitter.com/29E2UGcyCm— Vels Film International (@VelsFilmIntl) May 28, 2026
இந்த கட்டா குஸ்தி 2 படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்த நிலையில், இறுதிக்கட்ட பணிகளில் தீவிரமாக இருக்கிறது. இப்படமானது வரும் 2026 ஜூலை 3ம் தேதியில் உலகமெங்கும் வெளியாக தயாராகியுள்ளது. அந்த வகையில் தொடர்ந்து இப்படத்தின் டீசர், பாடல்கள் மற்றும் ட்ரெய்லர் தொடர்பான அறிவிப்பை படக்குழு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.