AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

கட்டா குஸ்தி 2 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரின் பிடிஎஸ் வீடியோவை வெளியிட்ட படக்குழு

Gatta Kusthi 2 Movie First Look Poster BTS Video Out Now | நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் அடுத்தடுத்து வெளியாகும் படங்கள் தொடர்பான அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றது. அந்த வகையில் கட்டா குஸ்தி படம் தொடர்பான அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றது.

கட்டா குஸ்தி 2 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரின் பிடிஎஸ் வீடியோவை வெளியிட்ட படக்குழு
கட்டா குஸ்தி 2Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 17 May 2026 18:57 PM IST

தமிழ் சினிமாவில் வெண்ணிலா கபடி குழு என்ற படத்தில் நாயகனாக அறிமுகம் ஆகி தமிழ் சினிமா ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்தவர் நடிகர் விஷ்ணு விஷால். இவரது நடிப்பில் அடுத்தடுத்து வெளியான படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. தொடர்ந்து ரசிகர்களிடையே வரவேற்பைப் பெறும் படங்களில் நாயகனாக நடித்து வரும் நடிகர் விஷ்ணு விஷாலின் நடிப்பில் அடுத்தடுத்து வெளியாக உள்ள படங்கள் வரிசைக்கட்டி காத்திருக்கின்றது. அதன்படி அடுத்தடுத்து நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் இரண்டு வானம், மோகன் தாஸ், கட்டா குஸ்தி 2 மற்றும் இடம் பொருள் ஏவல் என 4 படங்கள் வரிசையாக உள்ளது. இதில் இரண்டு வானம் மற்றும் கட்டா குஸ்தி 2 என இரண்டு படங்கள் தொடர்பான அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி வைரலாகி வருகின்றது.

இதில் இரண்டு வானம் படத்தின் படப்பிடிப்பு பணிகள் முன்னதாகவே முடிவடைந்து படத்தின் வெளியீட்டிற்கான பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றது. மேலும் இந்தப் படம் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த நிலையில் கட்டா குஸ்தி 2 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர் இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வந்தது.

கட்டா குஸ்தி 2 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் பிடிஎஸ் வீடியோ இதோ:

இந்த நிலையில் இந்த போஸ்டர்களின் பணிகளின் போது எடுத்த பிடிஎஸ் வீடியோவைப் படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த வீடியோவில் போஸ்டருக்காக எப்படி எல்லாம் படக்குழுவினர் வேலை செய்துள்ளனர் என்பதை அந்த வீடியோவில் வெளியிட்டுள்ளனர். மேலும் அந்த வீடியோவின் போது படக்குழுவினர் இடையே நடைப்பெற்ற கலகல விசயங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது.

Also Read… Karuppu: திரையரங்குகளில் வெற்றிநடைபோடும் கருப்பு.. பாராட்டி பதிவை வெளியிட்ட விஜய் தேவரகொண்டா மற்றும் விஷ்ணு விஷால்!

கட்டா குஸ்தி 2 படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… Malavika Mohanan: என்ன கேள்வி இது? விஜய் குறித்த கேள்விக்கு கடுப்பான மாளவிகா மோகனன்.. நடந்தது என்ன?

Follow Us