AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Karuppu: கருப்பு திரைப்பட கிளைமேக்ஸ் காட்சி… திரையரங்கில் சாமி வந்து ஆடிய ரசிகர் – வைரலாகும் வீடியோ!

Suriya Fan Viral Video: கோலிவுட் சினிமாவில் சிறப்பான படங்களை கொடுத்துவரும் நடிகராக இருந்துவருபவர் சூர்யா. இவரின் நடிப்பில் இன்று 2026 மே 15ம் தேதியில் திரையரங்குகளில் வெளியான திரைப்படம் கருப்பு. இந்த படத்தின் கிளைமேக்ஸ் காட்சியின்போது ரசிகர் ஒருவர் சாமி வந்து ஆடிய வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது.

Karuppu: கருப்பு திரைப்பட கிளைமேக்ஸ் காட்சி… திரையரங்கில் சாமி வந்து ஆடிய ரசிகர் – வைரலாகும் வீடியோ!
கருப்பு பட திரையரங்கில் சாமி வந்து ஆடிய ரசிகர் Image Source: Instagram
Barath Murugan
Barath Murugan | Updated On: 15 May 2026 15:55 PM IST

இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜியின் (RJ Balaji) இயக்கத்தில், நடிகர் சூர்யா (Suriya) நடித்துள்ள 45வது திரைப்படம்தான் கருப்பு (Karuppu). இந்த திரைப்படத்தில் நடிகர் சூர்யா அதிரடி ஆக்ஷன் மற்றும் தெய்வீகம் நிறைந்த நாயகனாக நடித்துள்ளார். இப்படமானது இன்று 2026 மே 15ம் தேதி முதல் உலகமெங்கும் திரையிடப்பட்டுள்ளது. இப்படத்தை ஆர்.ஜே.பாலாஜி இயக்க, இதில் அவரும் வில்லனாகவே நடித்துள்ளார். மேலும் இதில் சூர்யாவுடன் நடிகர்கள் திரிஷா (Trisha), ஷிவதா, இந்திரன்ஸ், ஸ்வாசிகா, அனகா மாயா ரவி (Anaga Maya Ravi) உள்ளிட்ட பல்வேறு பிரபலங்களும் இணைந்து நடித்துள்ளனர். இந்த படமானது நீதி மற்றும் ஆக்ஷன் கலந்த தெய்வீகம் கொண்ட திரைப்படமாகவே தயாராகியுள்ளது. அந்த வகையில் இப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி பாசிட்டிவ் விமர்சனங்களைப் பெற்றுவரும் நிலையில், படத்தின் வசூலும் அதிகரிக்கும் என கூறப்படுகிறது.

அந்த வகையில், மதுரையில் உள்ள தனியார் திரையரங்கு ஒன்றில், கருப்பு திரைப்படத்தின் கிளைமேக்ஸ் காட்சியின்போது, சூர்யாவின் ரசிகர் ஒருவர் சாமி வந்து ஆடியுள்ளார். இது அருகிலிருந்த ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருந்தது. அவரை சுற்றியும் பல நபர்கள் இருந்தும் அவரை அடக்கமுடியாத விதமாக, அந்த நபர் இருந்த நிலையில், இது தொடர்பான வீடியோ தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகப் பரவிவருகிறது.

இதையும் படிங்க: நீதி காக்க கோர்ட் ஏறும் கருப்பசாமி.. சூர்யாவின் கருப்பு படம் எப்படி இருக்கு? விமர்சனம் இதோ!

கருப்பு படத்தின் திரையிடலில் சாமி வந்து ஆடிய ரசிகரின் வீடியோ குறித்த பதிவு:

சூர்யாவின் கருப்பு படமானது நிதி பிரச்சனையை சந்தித்து, சுமுகமாக இன்று 2026 மே 15ம் தேதியோடு உலகமெங்கும் வெளியாகிவருகிறது. இந்த படத்தில் சூர்யா தெய்வீகம் நிறைந்த கருப்பசாமியாகவே நடித்துள்ளார். மேலும் இதில் ஆர்.ஜே.பாலாஜி மெயின் வில்லனாக நடித்துள்ள நிலையில், படத்தில் பல நகைச்சுவை காட்சிகள், சிறப்பான வசனங்கள், ஆக்ஷன் மற்றும் தெய்வீகம் நிறைந்த காட்சிகளும் இடம்பெற்றுள்ளது. இப்படத்தில் திரிஷாவும் மிக முக்கியமான வேடத்தில் நடித்துள்ள நிலையில், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது.

இதையும் படிங்க: தேவதாஸ் – சந்திராவை சந்திக்க தயாரா? டிசி பட ட்ரெய்லர் ரிலீஸ் எப்போது?

இப்படமானது திரையரங்குகளில் ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்றுவரும் நிலையில், சூர்யாவிற்கு வெற்றி அமையும் என கூறப்படுகிறது. கடந்த 2025ல் வெளியான ரெட்ரோ படத்தை விடவும் கருப்பு படத்திற்கு நல்ல வரவேற்பு இருக்கும் என கூறப்படுகிறது. கருப்பு பட கிளைமேக்ஸ் காட்சிகள் பவர் ஃபுல்லாக இருக்கும் நிலையில், காந்தாரா 2 படத்தை போன்ற உணர்வை கொடுக்கிறது.இந்நிலையில் திரையரங்குகளில் தற்போது வெற்றிநடைபோடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us