AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Karuppu: நீதி காக்க கோர்ட் ஏறும் கருப்பசாமி.. சூர்யாவின் கருப்பு படம் எப்படி இருக்கு? விமர்சனம் இதோ!

Karuppu Movie Review: நடிகர் சூர்யாவின் நடிப்பில் பல பிரச்சனைகளை கடந்து இன்று 2026 மே 15ம் திரைப்படம்தான் கருப்பு. இந்த படத்தை ஆர்.ஜே.பாலாஜி இயக்க, சூர்யா, திரிஷா போன்ற பல்வேறு பிரபலங்களும் இணைந்து நடித்துள்ளனர். இந்நிலையில் இப்படத்தின் முழு விமர்சனங்களை பற்றி பார்க்கலாம்.

Karuppu: நீதி காக்க கோர்ட் ஏறும் கருப்பசாமி.. சூர்யாவின் கருப்பு படம் எப்படி இருக்கு? விமர்சனம் இதோ!
கருப்பு திரைப்பட விமர்சனங்கள்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Updated On: 15 May 2026 11:09 AM IST

தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் சூர்யா (Suriya). இவரின் நடிப்பில் 45வது திரைப்படமாக தயாராகியிருப்பதுதான் கருப்பு (Karuppu). இந்த திரைப்படத்தில் இயக்குநரும், நடிகருமான ஆர்.ஜே.பாலாஜி (RJ Balaji) இயக்கியுள்ள நிலையில், ட்ரீம் வாரியர் பிக்ச்சர்ஸ் நிறுவனத்தின் கீழ் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு (SR Prabhu) தயாரித்துள்ளார். இவரின் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்திற்கு இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் (Sai Abhyankkar) இசையமைத்துள்ளார். இவர் இசையமைக்கும் முதல் பெரிய திரைப்படம் என்ற நிலையில், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. இந்த கருப்பு படமானது அதிரடி ஆக்ஷன், தெய்வீகம், நீதி போன்ற வித்தியாசமான கதைக்களத்தில் தயாராகியுள்ள நிலையில், இன்று 2026 மே 15ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகியுள்ளது.

இப்படமானது தயாரிப்பாளரின் நிதி பிரச்சனையின் காரணமாக நேற்று (14/05/2026) வெளியாகாவிருந்த படம், இன்று வெளியாகியுள்ளது. அந்த வகையில் இன்று இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புகள் இருக்கும் நிலையில், திரையரங்குகளில் கூட்டம் அலைமோதுவதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் இப்படத்தின் முழு விமர்சனங்களை பார்க்கலாம்.

இதையும் படிங்க: திரையுலகில் 50 ஆண்டுகள்… நான் இல்லாத போது கூட – இளையராஜா பகிர்ந்த தகவல்

கருப்பு திரைப்படத்தின் விமர்சனங்கள் :

இந்த கருப்பு திரைப்படத்தில் நடிகர் சூர்யா “சரவணன்” என்ற வழக்கறிஞராகவும், நடிகை திரிஷா கிருஷ்ணன் “பிரீத்தி” என்ற வழக்கறிஞராகவும் நடித்துள்ளனர். மேலும் இப்படத்தில் வில்லனாக நடிகரும், இயக்குநருமான ஆர்.ஜே.பாலாஜி “பேபி கண்ணன்” என்ற வேடத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் தொடக்கமானது மாஸ் டைட்டில் கார்டுடன் தொடங்குகிறது. இதில் தமிழக முதலமைச்சர் விஜய்க்கு நன்றி தெரிவித்தே படம் தொன்டுக்குகிறது. இப்படமானது முழுக்க நீதிமன்றத்தில் நடைபெறும் சம்பவங்களை மையமாக கொண்டே ஆரம்பமாகிறது. இதில் ஆர்.ஜே.பாலாஜி “பேபி கண்ணன்” நீதி மன்றத்தில் முதன்மை வழக்கறிஞராக இருக்கிறார். அவரிடம் பிரச்சனைக்காக நீதிகேட்டு நாடிவரும் மக்களை பணம் பறித்துவிட்டு ஏமாற்றும் ஒருவராக இருக்கிறார்.

இதையும் படிங்க: கருப்பு படத்திற்காக குரல் கொடுக்கும் பிரபலங்கள் – வைரலாகும் எக்ஸ் பதிவுகள்!

கருப்பு திரைப்படம் குறித்து இணையத்தில் வைரலாகும் பதிவு:

இதை தடுப்பதற்கு யாரையுமே இல்லையா என என்னும்போது, சூர்யா இதில் தலையிடுகிறார். இதில் நடிகர் சூர்யாவும் வழக்கறிஞராக நடித்துள்ள நிலையில், இதில் அவர் தெய்வீகம் பொருந்திய வேடத்திலும் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. நீதியை நிலைநாட்ட கருப்பசாமியாகவே சூர்யா நடித்துள்ளார். அந்த வகையில் நீதிமன்றத்தில் நீதியை நிலைநாட்ட சூர்யா என்ன செய்தார் என்பதே மைய கதையாக இருக்கிறது. இதில் சூர்யா கருப்பசாமியாகவும் நடித்துள்ள நிலையியல், மாஸ் ஆக்ஷன் மற்றும் எமோஷனலான கிளைமேக்ஸ் காட்சி இருக்கிறது. மேலும் இப்படத்தில் முதல்வர் விஜய் நடித்திருந்த லியோ படத்தின் காட்சியும் ரீகிரியேட் செய்யப்பட்டுள்ளது. அதனால் மாஸ் படமாக கருப்பு இருக்கிறது.

கிட்டத்தட்ட காந்தாரா 2 பட கிளைமேக்ஸ் போலவே பவர் ஃபுல்லான காட்சிகள் இடம்பெற்றுள்ளதாம். இப்படத்தில் இசையமைப்பாளர் சாய் அபயங்கரின் இசையும் ஒவ்வொரு காட்சிகளுக்கு மேலும் அதிரடியை கொடுத்துள்ளது. ஆர்.ஜே.பாலாஜியின் இயக்கம், சூர்யா மற்றும் திரிஷாவின் நடிப்பு, ஆக மொத்தத்தில் குடும்பங்கள் கொண்டாடும் மாஸ் கமர்ஷியல் படம் இந்த கருப்பு. நிச்சயமாக குடும்பத்துடன் திரையரங்குகளில் பார்ப்பதற்கு ஒரு சிறப்பான படமாக கருப்பு இருக்கும். நீதியை நிலைநாட்ட வந்த கருப்பானாக சூர்யா ரசிகர்களுக்கு காட்சியளிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us