கருப்பு படத்தின் ரிலீஸில் ஏற்பட்ட சிக்கல்… எமோஷ்னலான வீடியோவை வெளியிட்ட ஆர்.ஜே.பாலாஜி
RJ Balaji Emotional Video: இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகி உள்ள படம் கருப்பு. இந்தப் படம் இன்று திரையரங்குகளில் வெளியாக இருந்த நிலையில் படம் சில பிரச்சனைகள் காரணமாக தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஆர்.ஜே.பாலாஜி வெளியிட்ட ஆடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.
தமிழ் சினிமாவில் இயக்குநராகவும், நடிகராகவும் மக்களிடையே வரவேற்பைப் பெற்றவர் ஆர்.ஜே.பாலாஜி. இவர் தொடர்ந்து அவர் நடித்த படங்களை மட்டுமே இயக்கி வந்த நிலையில் தற்போது மற்றொரு நாயகன் நடிக்கும் படத்தை இயக்கி உள்ளார். அதன்படி தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக உள்ள நடிகர் சூர்யாவின் 45-வது படத்தை இயக்க ஒப்பந்தம் ஆனார் ஆர்.ஜே.பாலாஜி. இந்தப் கூட்டணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்த 2024-ம் ஆண்டே அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து இந்தப் படம் தொடர்பான அப்டேட்கள் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது. இந்த நிலையில் இந்தப் படத்திற்கு கருப்பு என்று பெயர் வைக்கப்பட்டுள்ள நிலையில் படத்தின் ஷூட்டிங் கடந்த 2 ஆண்டுகளாக நடைப்பெற்று வந்தது. படம் கடந்த 2025-ம் ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பொங்கல் பண்டிகை வரை படம் திரையரங்குகளில் வெளியாகமல் இருந்தது ரசிகர்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் படம் மே மாதம் 14-ம் தேதி 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் படம் இன்று காலை 09-ம் மணிக்கு சிறப்பு காட்சி வெளியிட திட்டமிடப்பட்டது. ஆனால் படம் இன்று காலை முதல் இரண்டு காட்சிகள் வெளியாகாமல் ஒத்திவைக்கப்பட்டது. தயாரிப்பு நிறுவனத்திற்கு ஏற்பட்ட பிரச்சனை காரணமாக இந்தப் படம் வெளியாகாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி வெளியிட்ட வீடியோ பதிவு இணையத்தில் வைரலாகி வருகின்றது.




எமோஷ்னலான வீடியோவை வெளியிட்ட ஆர்.ஜே.பாலாஜி:
இந்த நிலையில் காலை 9 மணி காட்சி மட்டும் இல்லாமல் மேட்னி காட்சியும் ரத்தானது. இந்த நிலையில் இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி வெளியிட்ட வீடியோ பதிவில் முன்னதாக டிக்கெட்டை புக் செய்த ரசிகர்களுக்கு ஏற்பட்ட சிரமத்திற்காக மன்னிப்பு கோரினார். அதனைத் தொடர்ந்து படத்தை பார்க்க ஆவளுடன் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் அவர்களுக்கு ஏற்பட்ட ஏமாற்றம் காரணமாக நான் வருந்துகிறேன் என்றும் இன்று மாலை அனைத்து பிரச்சனைகளும் சரி செய்யப்பட்டு வெளியாகும் என்று நம்புகிறேன் என்று தெரிவித்து இருந்தார். மேலும் இந்த வீடியோ முழுவதும் கண்கலங்கி மிகுந்த வருத்ததுடன் அவர் பேசியது இணையத்தில் வைர்லாஅகி வருகின்றது.
இணையத்தில் வைரலாகும் ஆர்.ஜே.பாலாஜி வீடியோ:
Can’t see you break like this. Stay strong @RJ_Balaji brother. #Karuppu will win big and change the fate of many involved. Hard work & passion can never fail. I am rooting for your Success 🫂♥️. More power to entire team. https://t.co/XP1lmQFBBf
— Rathna kumar (@MrRathna) May 14, 2026
Also Read… பேசில் – டொவினோ நடிப்பில் வெளியானது அதிரடி படத்தின் ட்ரெய்லர்