AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Karuppu: சூர்யாவின் கருப்பு பட FDFS காட்சிகள் எப்போது திரையிடப்படும்? – விவரங்கள் இதோ!

Karuppu FDFS Showtimes: நடிகர் சூர்யாவின் நடிப்பில் கருப்பு படமானது பிரம்மாண்டமாக தயாராகியுள்ளது. இந்த படமானது வரும் 2026ம் ஆண்டு மே 14ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகிறது. இந்த படமானது முதல் நாளில் எப்போது வெளியாகும் என்பது குறித்து எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது இதுகுறித்து அப்டேட் வெளியாகியுள்ளது.

Karuppu: சூர்யாவின் கருப்பு பட FDFS காட்சிகள் எப்போது திரையிடப்படும்? – விவரங்கள் இதோ!
கருப்பு எஃப்.டி.எஃப்.எஸ் காட்சிImage Source: X
Barath Murugan
Barath Murugan | Updated On: 12 May 2026 18:10 PM IST

தென்னிந்திய சினிமாவில் பிரபலமிக்க நடிகர்களில் ஒருவராக இருந்துவருபவர் சூர்யா (Suriya). இவரின் நடிப்பில் 45வது திரைப்படமாக தயாராகியுள்ளதுதான் கருப்பு (Karuppu). இந்த படத்தை இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி (RJ Balaji) இயக்கியுள்ள நிலையில், இதில் அவரே வில்லனாகவும் நடித்துள்ளார். இந்த படமானது தெய்வீகம், ஆக்ஷன் மற்றும் அதிரடி கதைக்களத்தில் தயாராகியுள்ள நிலையில் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்புகள் இருக்கிறது. இந்த படத்தில் சூர்யா ரெட்டை வேடத்தில் நடித்திருப்பதாக கூறப்படும் நிலையில், அவருடன் நடிகை திரிஷா கிருஷ்ணன் (Trisha Krishnan) நடித்துள்ளார். இவர்களின் ஜோடி கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கும் பிறகு மீண்டும் இணைந்து நடித்துள்ளனர். இந்த கருப்பு படமானது வரும் 2026 மே 14ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகியுள்ளது. அந்த வகையில் இந்த படத்தின் திரையிடல் எப்போது இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்துவந்தனர்.

இந்நிலையில் தற்போது இப்படத்தின் FDFS காட்சிகள் எப்போது என தகவல்கள் வெளியாகியுள்ளது. சூர்யாவின் கருப்பு படத்தின் FDFS காட்சிகள் காலை 9 மணியளவில் திரையிடப்படுகிறதாம். இதுகுறித்த அறிவிப்பு பதிவு இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பரவிவருகிறது.

இதையும் படிங்க: ஃபஹத் ஃபாசிலை வைத்து நான் எடுக்கும் படம் இப்படிதான் இருக்கும் – இயக்குநர் பிரேம் குமார் அப்டேட்!

சூர்யாவின் கருப்பு திரைப்படத்தின் FDFS காட்சிகள் குறித்து வைரலாகும் பதிவு:

சூர்யாவின் கருப்பு திரைப்படமானது சிறப்பாக தயாராகியுள்ளது. இந்த படத்திற்கு இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். இப்படத்தின் பாடல்களும் சிறப்பாக உருவாகியுள்ளது. கிட்டத்தட்ட 7 பாடல்கள் இருக்கிறதாம். இந்நிலையில் இதுவரை 5 பாடல்கள் இப்படத்திலிருந்து வெளியாகியுள்ளது. கருப்பு படமானது தெய்வீகம், நீதி மற்றும் ஆக்ஷ்ன் கதைக்களத்தில் தயாராகியுள்ளது. இப்படத்தின் முதல் பாகம் முழுவதும் ஆக்ஷ்ன் நீதிமன்றத்தில் நடக்கும் காட்சிகளில் இருக்கிறதாம்.

இதையும் படிங்க: இந்திய வரலாற்றிலே முதல்.. அமெரிக்க பல்கலைக்கழகத்தில் சிறப்பு விருதை வென்ற நடிகை ரோஜாவின் மகள்!

கருப்பு படத்தின் ட்ரெய்லர் வெளியாகி இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பை பெற்றுவருகிறது. இதுவரை யூடியூப்பில் கிட்டத்தட்ட 25 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளதாம். 2026ம் ஆண்டில் ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்பட்டுவரும் படமாக இருக்கிறது. ஜன நாயகன் படத்திற்கு பிறகு மக்களிடையே எதிர்பார்ப்பில் உள்ளது. நிச்சயமாக கருப்பு படமானது சூர்யாவிற்கு வெற்றி திரைப்படமாக அமையும் என வட்டாரங்கள் தெரிவிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில் இப்படத்தின் டிக்கெட் ப்ரீ புக்கிங் சிறப்பாக இருந்துவருகிறது. இந்நிலையில் சூர்யாவிற்கு வெற்றியாக அமையுமா? இல்லையா? என பொறுத்திருந்து பார்க்கலாம்.

Follow Us