திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திற்கு 8,012 சிறப்புப் பேருந்துகள் – வெளியான அறிவிப்பு – எங்கிருந்து தெரியுமா?
Karthigai Deepam Special Bus Services : புகழ்பெற்ற திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் கார்த்திகை தீப திருவிழா வருகிற நவம்பர் 24, 2026 அன்று வெகு சிறப்பாக நடைபெறவுள்ளது. திருவண்ணாமலைக்குச் செல்லும் பக்தர்களின் வசதிக்காக 2026 நவம்பர் 22 முதல் நவம்பர் 25, 2026 வரை 8,012 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது.
சென்னை, நவம்பர் 22 : கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு, திருவண்ணாமலைக்குச் செல்லும் பக்தர்களின் வசதிக்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் 2026 நவம்பர் 22 முதல் நவம்பர் 25, 2026 வரை 8,012 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது. குறிப்பாக சென்னையில் (Chennai) இருந்து மட்டும் மொத்தம் 1,713 சிறப்புப் பேருந்துகள் இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளன. அதன்படி, கிளாம்பாக்கத்தில் இருந்து 1,023 பேருந்துகளும், மாதவரத்தில் இருந்து 400 பேருந்துகளும், அடையாறில் இருந்து 290 பேருந்துகளும் இயக்கப்பட உள்ளதாக அரசு போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.
கார்த்திகை தீபத்திற்கு 8,012 சிறப்புப் பேருந்துகள்
புகழ்பெற்ற திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் கார்த்திகை தீப திருவிழா வருகிற நவம்பர் 24, 2026 அன்று வெகு சிறப்பாக நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்க தமிழ்நாடு மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் இருந்தும் சிவபக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் பேருந்துகளில் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் பக்தர்கள் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக விழுப்புரம் கோட்டம் சார்பில் 8,012 சிறப்பு பேருந்து நடைகள் இயக்கப்படவுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க : கொளத்தூர் தொகுதியில் போட்டியிடுவது யார்? கூட்டணி கட்சிகளுடன் ஆலோசனை நடத்தும் முதல்வர் விஜய் – வெளியான முக்கிய தகவல்




இதுகுறித்து விழுப்புரம் கோட்ட மேலாண் இயக்குநர் ச.ஸ்ரீதரன் வெளியிட்ட அறிவிப்பில் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் கார்த்திகை தீபத் திருவிழாவுக்காக நவம்பர் 22, 2026 இன்று முதல் விழுப்புரம் மண்டலத்திலிருந்து 195 சிறப்பு பேருந்துகளும், கடலூர் மண்டலத்திலிருந்து 101 சிறப்பு பேருந்துகளும், திருவண்ணாமலை மண்டலத்திலிருந்து 566 சிறப்பு பேருந்துகளும், வேலூர் மண்டலத்திலிருந்து 205 சிறப்பு பேருந்துகளும், காஞ்சிபுரம் மண்டலத்திலிருந்து 35 சிறப்பு பேருந்துகளும், திருவள்ளூர் மண்டலத்திலிருந்து 1,132 பேருந்து சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படவுள்ளன.
அதனைத் தொடர்ந்து நவம்பர் 23, 2026 நாளை பௌர்ணமி தினத்தன்று விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, வேலூர், காஞ்சிபுரம் ஆகிய மண்டலங்களிலிருந்து 1,878 சிறப்பு பேருந்துகளும், அதனைத் தொடர்ந்து நவம்பர் 24, 2026 செவ்வாய் கிழமை கார்த்திகை தினத்தன்று 3,055 பேருந்து சிறப்பு பேருந்துகளும், 25-ஆம் தேதி 1,947 சிறப்பு பேருந்து பேருந்துகளும் இயக்கப்பட்டவுள்ளன.
இதையும் படிக்க : சீறி வந்த கனரக லாரி.. சக்கரத்தில் சிக்கிய ஸ்கூட்டி.. தாய், 2 மகன்கள் ரத்த வெள்ளத்தில் பலி.. தஞ்சையில் சோகம்!
கார்த்திகை தீபத் திருவிழாவுக்காக நவம்பர் 22, 2026 முதல் நவம்பர் 25, 2026 அன்று வரை 4 நாட்களுக்கு 8,012 சிறப்புப் பேருந்துகளும், கோயம்பேடு, மாதவரம், அடையாறு, புதுச்சேரி, திண்டிவனம், சேலம், பெங்களூர், திருப்பத்தூர், திருப்பூர், கோவை, வேலூர், ஏற்காடு, ஆரணி, செய்யார், காஞ்சிபுரம், வந்தவாசி, சேத்பட், மேல்சோழகுப்பம், விழுப்புரம், கடலூர், பண்ருட்டி, சிதம்பரம், திருக்கோவிலூர், விருத்தாச்சலம், மணலூர்பேட்டை, தண்ராம்பட்டு, தாணிப்பாடி, கள்ளக்குறிச்சி ஆகிய ஊர்களுக்கு 8, 012 சிறப்புப் பேருந்து பேருந்துகளும் இயக்கப்படவுள்ளன. பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே கார்த்திகை தீபத் திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளான பரணி தீபம் மற்றும் மகா தீபம் நடைபெறும் 2026 நவம்பர் 23, 24 மற்றும் 25 ஆகிய 3 நாட்களுக்கு, பக்தர்களின் நலனைக் கருத்தில் கொண்டு மொத்தம் 120 சிறப்பு மருத்துவ முகாம்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.