AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

மரத்தின் மீது கார் மோதிய விபத்தில் 8 பேர் பலி… காதணி விழாவுக்கு சென்று திரும்பியபோது விபத்து – திருச்சி அருகே கொடூரம்

Eight Killed in Car Accident : திருச்சி முசிறி அருகே காதணி விழாவுக்கு சென்று திரும்பியபோது மரத்தின் மீது கார் மோதிய விபத்தில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். அதிவேகமாக வந்த கார், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்ததே விபத்திற்கு காரணம் என்று காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது

மரத்தின் மீது கார் மோதிய விபத்தில் 8 பேர் பலி… காதணி விழாவுக்கு சென்று திரும்பியபோது விபத்து – திருச்சி அருகே கொடூரம்
கோப்பு புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 22 Nov 2026 19:56 PM IST

திருச்சி, நவம்பர் 22 : திருச்சி முசிறி அருகே காதணி விழாவுக்கு சென்று திரும்பியபோது மரத்தின் மீது கார் மோதிய விபத்தில் (Car Accident) 8 பேர் உயிரிழந்துள்ளனர். அதிவேகமாக வந்த கார், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்ததே விபத்திற்கு காரணம் என்று காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மரத்தின் மீது கார் மோதிய விபத்தில் 8 பேர் பலி

தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியைச் சேர்ந்த செங்கல் சூளையில் பணியாற்றிய 10க்கும் மேற்பட்டோர் நாமக்கல்லில் நடைபெற்ற காதணி விழாவுக்கு நவம்பர் 22, 2026 இன்று காரில் சென்றுள்ளனர். காதணி விழாவில் பங்கேற்றுவிட்டு அவர்கள் தாங்கள் வந்த காரில், மீண்டும் தங்களது சொந்த ஊருக்கு திரும்பியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் துறையூர் – முசிறி சாலையில் ஜெம்புநாதபுரம் அருகே கார் சென்று கொண்டிருந்தபோது, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் திடீரென கார் சாலையோரம் இருந்த வேப்ப மரத்தின் மீது அதிவேகமாக மோதியுள்ளது. இந்த விபத்தில் கார் பலத்த சேதமடைந்த நிலையில், காரில் பயணம் செய்த மாணிக்கம், சங்கிலி, முருகன், ராஜேஷ் உள்ளிட்ட 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், இந்த விபத்தில் படுகாயமடைந்த சக்திவேல், சுப்பிரமணி உள்ளிட்ட 4 பேர் சிகிச்சைக்காக முசிறி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

விபத்துக்கான காரணம்

ஆனால் சிகிச்சை பலனின்றி சக்திவேல், சுப்ரமணி, சீதாராமன் ஆகிய 3 பேர் மருத்துவமனையில் உயிரிழந்தனர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஜெம்புநாதபுரம் காவல்துறையினர், உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக முசிறி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இந்த விபத்து தொடர்பாக வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், கார் கட்டுப்பாட்டை இழந்ததற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காதணி விழாவில் பங்கேற்றுவிட்டு சொந்த ஊருக்குத் திரும்பியபோது நிகழ்ந்த இந்த கோர விபத்து, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலி

முன்னதாக தஞ்சாவூர் மாவட்டத்தில் நவம்பர் 22, 2026 இன்று பைக் மீது லாரி மோதிய விபத்தில் தாய் மற்றும் 2 மகன்கள் என 3 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெனாசிர் பேகம் என்பவர் தனது 3 மகன்களுடன் உறவினர் வீட்டுக்கு பைக்கில் சென்று கொண்டிருந்தார். திருவையாறு- தஞ்சாவூர் சாலையில் உள்ள அம்மன் பேட்டை பிள்ளையார் கோவில் அருகே சென்று கொண்டிருந்தபோது, எதிரே வந்த லாரி எதிர்பாராத விதமாக பெனாசிர் பேகம் ஓட்டி சென்ற பைக் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இதனையடுத்து படுகாயமடைந்த 4 பேரும் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு செல்லப்பட்ட நிலையில் வழியில் தாய் பெனாசிர் பேகம் பரிதாபமாக உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து, அவரது மகன்களான முகமது ஜாசித், முகமது ஹாலித் ஆகியோரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர். பலத்த காயம் அடைந்த மற்றொரு மகன் முகமது ஜாவித் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் விபத்தில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Follow Us