பறவைக் காய்ச்சல் எதிரொலி… இந்திய முட்டைகளுக்கு தடைவிதித்த ஓமன் – நாக்கல்லில் முடங்கிய முட்டைகள்
Indian Egg Export Ban to Oman : கடலூர் மாவட்டத்தில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, இந்திய முட்டைகளை இறக்குமதி செய்ய ஓமன் நாடு தடை விதித்துள்ளது. இதன் காரணமாக ஒவ்வொரு மாதமும் நாமக்கல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கோழி பண்ணைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
சென்னை, நவம்பர் 22 : கடலூர் மாவட்டத்தில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, இந்திய முட்டைகளை (Egg) இறக்குமதி செய்ய ஓமன் நாடு தடை விதித்துள்ளது. இதன் காரணமாக ஒவ்வொரு மாதமும் நாமக்கல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து மாதந்தோறும் ஏற்றுமதி செய்யப்பட்டு வந்த 3 முதல் 6 கோடி முட்டைகளின் ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நாமக்கல் மண்டலத்தைத் தனி முட்டை ஏற்றுமதி மண்டலமாக அறிவித்து, தடையை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என முட்டை ஏற்றுமதியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்திய முட்டைகளுக்கு தடைவிதித்த ஓமன்
கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி வட்டம், தியாகவல்லி ஊராட்சிக்கு உட்பட்ட தாமனம்பட்டி கிராமத்தில் உள்ள கோழிப்பண்ணையில் கடந்த அக்டோபர் 30, 2026 அன்று, திடீரென கோழிகள் உயிரிழப்பதாகத் தகவல் கிடைத்தது.இதனையடுத்து கால்நடை மருத்துவக் குழுவினர் உடனடியாக பாதிக்கப்பட்ட பண்ணைக்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது பாதிக்கப்பட்ட கோழிகளிடமிருந்து மாதிரிகளைச் சேகரித்து அதனை ஆய்வுக்காக நாமக்கல்லில் உள்ள கோழி நோய் கண்டறியும் ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
இதையும் படிக்க : வீட்டிலிருந்து வந்த கெட்ட வாடை.. “40 ஆண்டுகால திருமண வாழ்க்கை இப்படியா முடியனும்”.. சென்னையில் முதிய தம்பதிக்கு நேர்ந்த கொடுமை..




இதற்கிடையே கடந்த நவம்பர் 13,2026 அன்று வரை கடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மொத்தம் 35,647 கோழிகள் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து, நோய் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் கண்காணிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டன. இந்த நிலையில் கோழியின் உடல் மாதிரி கூடுதல் ஆய்வுக்காக மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் உள்ள தேசிய உயர் பாதுகாப்பு விலங்கு நோய்கள் நிறுவனம் ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் பறவைக் காய்ச்சல் (H5N1) தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இந்த நிலையில் பறவைக் காய்ச்சல் எதிரொலியாக இந்தியாவின் முட்டைகளை ஏற்றுமதி செய்ய ஓமன் அரசு தடை விதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் நாமக்கல் மற்றும் அதனை சுற்றுவட்டார பகுதிகளிலில் கோழி பண்ணை வைத்திருப்பவர்கள் மற்றும் முட்டை ஏற்றுமதியாளர்கள் பெரிதும் பாதிக்கப்படக் கூடும் என கூறப்படுகிறது. குறிப்பாக இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் முட்டைகளில் 90 சதவிகிதத்திற்கும் அதிகமாக நாமக்கல் மண்டலத்தில் இறுந்து ஏற்றுமதி செய்யப்படுகிறது.
இதையும் படிக்க : செக்கானூரணி லாக்கப் மரணம்! உண்மையிலேயே முதல்வர் கட்டுப்பாட்டில் காவல்துறை உள்ளதா? அப்படி இருந்தால்.. கனிமொழி காட்டமான கேள்வி!
நாமக்கல், சேலம், கோயம்புத்தூர் ஆகிய பகுதிகளில் ஏராளமான கோழிப் பண்ணைகள் உள்ளன. இங்கு ஒரு நாளுக்கு 7 கோடிக்கும் அதிகமான முட்டைகள் உற்பத்தியாகின்றன. இதில் இதில் இந்தியா முழுவதும் விநியோகிக்கப்படுவது போக வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன. குறிப்பாக தமிழ்நாட்டில் சத்துணவு திட்டத்துக்கு முட்டைகள் இங்கிருந்து தான் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. தற்போது பறவைக் காய்ச்சல் எதிரொலியால் கோழி பண்ணைகளில் முட்டைகள் முடங்குவதோடு அதனை நம்பியிருக்கும் ஏராளமான தொழிலாளர்களும் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. தற்போது வரை நாமக்கலில் 6 கோடி முட்டைகள் தேக்கமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.