AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

“300 கிலோ எடை, 9 அடி நீளம்!”.. கடலூர் அருகே குடியிருப்புக்குள் புகுந்த ராட்சத முதலை.. வீட்டை விட்டு வெளியே வந்தவரை கடித்ததால் பரபரப்பு!!

Crocodile Enters Koppadu Village Near Kattumannarkoil: கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் அருகே கோப்பாடி கிராமத்தில் குடியிருப்புக்குள் புகுந்த சுமார் 9 அடி நீள முதலையைக் கடித்து ராஜேந்திரன் என்பவர் காயமடைந்தார். அவர் சிதம்பரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், பாதுகாப்பான இடத்தில் முதலையை விட வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

“300 கிலோ எடை, 9 அடி நீளம்!”.. கடலூர் அருகே குடியிருப்புக்குள் புகுந்த ராட்சத முதலை.. வீட்டை விட்டு வெளியே வந்தவரை கடித்ததால் பரபரப்பு!!
பிடிப்பட்ட முதலை
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Published: 22 Nov 2026 11:57 AM IST

கடலூர், நவ.22: கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் அருகே உள்ள கோப்பாடி கிராமத்தில் குடியிருப்புப் பகுதிக்குள் புகுந்த முதலை தாக்கியதில் நபர் ஒருவர் காயமடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ராஜன் வாய்க்காலில் இருந்து சுமார் 9 அடி நீளமும், சுமார் 300 கிலோ எடையும் கொண்ட முதலை ஒன்று இன்று அதிகாலை 3 மணியளவில் குடியிருப்புப் பகுதிக்குள் நுழைந்துள்ளது. அப்போது தெருநாய்கள் குரைத்த சத்தம் கேட்டு வீட்டிலிருந்து வெளியே வந்த ராஜேந்திரன் என்பவரை, வீட்டுப் படிக்கட்டின் கீழ் பதுங்கியிருந்த அந்த முதலை கடித்து வீழ்த்தியுள்ளது. ராஜேந்திரன் அலறிப் போட்ட சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தினர், முதலையிடமிருந்து அவரை மீட்டு உடனடியாகச் சிகிச்சைக்காகச் சிதம்பரம் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

இதையும் படிக்க: நாகர்கோவில் ரயிலில் பெண் கற்பழித்து கொலை! டிஜிபிக்கு பறந்த நோட்டீஸ்.. எண்ட்ரி கொடுத்த மகளிர் ஆணையம்!

வனத்துறையின் தாமதம் குறித்து குற்றச்சாட்டு:

குடியிருப்புப் பகுதிக்குள் முதலை புகுந்து தாக்குதல் நடத்திய நிலையில், முதலையைப் பிடிக்க வனத்துறை அதிகாரிகள் விரைந்து வந்து நடவடிக்கை எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். ஏற்கனவே ஒருவர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சூழலில், முதலை குடியிருப்புப் பகுதியில் சுற்றித் திரிவது கிராம மக்களிடையே கடும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழப்பு போன்ற அசம்பாவிதங்கள் ஏற்படும் முன்பாக வனத்துறையினர் உடனடியாகச் சம்பவ இடத்திற்கு வந்து முதலையைப் பாதுகாப்பாகப் பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அருகிலுள்ள ஏரியில் விடுவதால் தொடரும் அச்சம்:

வனத்துறையினரின் தாமதமான அணுகுமுறை பொதுமக்களின் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கியுள்ளதாகக் கூறும் கிராம மக்கள், பிடிக்கப்படும் முதலைகளை அருகாமையில் உள்ள ஏரியில் விடுவதால் அவ்வப்போது குடியிருப்புப் பகுதிகளுக்குள் முதலைகள் புகுந்து பொதுமக்களைத் தாக்கும் சூழல் ஏற்படுவதாக வேதனை தெரிவித்துள்ளனர். நீர் நிலைகளில் தண்ணீர் குறையும் பட்சத்தில் முதலைகள் கரையைக் கடந்து குடியிருப்புப் பகுதிகளுக்குள் வரும் நிலை தொடர்வதாகவும், எனவே பிடிக்கப்படும் முதலைகளை அருகில் விடாமல் உரிய பாதுகாப்பான இடத்தில் கொண்டு போய் விட வேண்டும் என்றும் நீண்டகாலக் கோரிக்கையை அவர்கள் முன்வைத்துள்ளனர்.

இதையும் படிக்க: “காங்கிரஸ் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெக-வில் இணைந்துவிடுங்கள்!”.. மாணிக்கம் தாகூருக்கு அண்ணாமலை காட்டமான பதிலடி!

வனத்துறை தகவல் மற்றும் நிவாரண அறிவிப்பு:

இது குறித்து வனத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, தகவல் அறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற வனத்துறையினர் முதலையைப் பிடித்துப் பாதுகாப்பாக விட்டதாகத் தெரிவித்துள்ளனர். காயமடைந்த ராஜேந்திரன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், பாதிக்கப்பட்ட அவருக்கு வனத்துறை சார்பில் உரிய நிவாரணம் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இப்பகுதியில் முதலைகளின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தி மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யத் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோப்பாடி கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Follow Us