Viral Video : இரவு முழுவதும் பார்க் செய்ய அலைந்த ஓட்டுநர் இல்லாத மின்சார கார்.. வைரலாகும் வீடியோ!
Driverless Electric Car Tries 868 Self-Parks Overnight | சமூக ஊடகங்களில் நாள்தோறும் பல வகையான வித்தியாசமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகும். அந்த வகையில், ஓட்டுநர் இல்லாத மின்சார கார் ஒன்று தானே பார்க் செய்ய இரவு முழுவதும் அலைந்துக்கொண்டு இருந்த வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
சமூக ஊடகங்களில் நாள்தோறும் பல வகையான வித்தியாசமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகும். தற்போது பரவலாக அனைத்து இடங்களிலும் பாதுகாப்பு கருதி சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும் நிலையில், அதில் சில அசாத்தியமான சம்பவங்கள் பதிவு செய்யப்படும். அது தொடர்பான வீடியோக்களும் அவ்வப்போது சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகும். அந்த வகையில், சீனாவில் ஓட்டுநர் இல்லாத மின்சார கார் ஒன்று இரவு முழுவதும் பார்க் செய்ய அலைத்துக்கொண்டு இருந்தது தொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த நிலையில், இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில் என்ன இடம்பெற்றுள்ளது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
இரவு முழுவதும் பார்க் செய்ய அலைத்த ஓட்டுநர் இல்லாத மின்சார கார்
சீனாவில் (China) ஓட்டுநர் இல்லாத மின்சார கார் ஒன்று இரவு முழுவதும் பார்க்கிங் செய்ய அலைந்துக்கொண்டு இருந்துள்ளது. அங்கு ஏதோ வித்தியாசமாக சத்தம் கேட்டுக்கொண்டு இருந்ததை அறிந்து அந்த கட்டத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த பாதுகாவலர் சென்று பார்த்துள்ளார். அப்போது அந்த காரில் யாரும் இல்லாத நிலையில், கார் மட்டும் பார்க்கிங் செய்வதற்காக அலைந்துக்கொண்டு இருந்துள்ளது தெரிய வந்துள்ளது.




இதையும் படிங்க : Viral Video : அசுத்தமான யமுனா நதியில் குழந்தைகளை முழ்க வைத்த பெற்றோர்.. வைரல் வீடியோ!
இந்த நிலையில் தான், அந்த காரின் உரிமையாளர் அது குறித்து விளக்கம் அளித்துள்ளார். அதாவது, அந்த காரில் தானாகவே பார்க் செய்யும் வசதி உள்ளதாகவும், இதன் காரணமாக இரவு முழுவதும் சுமார் 868 முறை காரை பார்க் செய்ய முயற்சி செய்து, பின்னர் ஏற்கனவே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த காரின் அருகே நிறுத்தியதாகவும் கூறியுள்ளார்.
இணையத்தில் வைரலாகும் வீடியோ
Китайский электрокар сошёл с ума и попытался припарковаться 868 раз за ночь.
Пока хозяин спал, машина безуспешно пыталась найти себе место
https://t.co/yG9tJG7g35 https://t.co/f08QCu2gwF
— RSI – рекурсивное самосовершенствование (@since1795) November 21, 2026
இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில், ஓட்டுநர் இல்லாத அந்த கார் அங்கும், இங்கும் திரிந்துக்கொண்டு இருக்கிறது. காரை பார்க் செய்ய முயற்சி செய்யும் அந்த கார், மீண்டும் மீண்டும் அதே செயலை செய்கிறது. இவை அனைத்தும் அந்த வீடியோ காட்சியில் பதிவாகியுள்ளது.
இதையும் படிங்க : சூட்கேசுக்குள் நெளிந்த 2 விஷப்பாம்புகள்.. விமான நிலையத்தில் பரபர சம்பவம்!
இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், பலரும் அது குறித்து தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.