ரிலீஸ் தேதியை முடிவு செய்தது மோகன்லாலின் அதிமனோகரம் படம்!
Athimanoharam Movie Release Date Here | மலையாள சினிமாவில் உச்ச நடிகராக வலம் வருபவர் நடிகர் மோகன்லால். இவரது நடிப்பில் தற்போது உருவாகி உள்ள அதிமனோகரம் படத்தின் ரிலீஸ் தேதி எப்போது என்பது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.
மலையாள சினிமாவில் உச்ச நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் மோகன்லால் (Mohanlal). இவரது நடிப்பில் மலையாள சினிமாவில் தொடர்ந்து படங்கள் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. அதன்படி நடிகர் மோகன்லால் மலையாள சினிமாவில் தொடர்ந்து படங்களில் நடிப்பது மட்டும் இன்றி பான் இந்திய மொழிகளிலும் தொடர்ந்து படங்களில் கேமியோ வேடங்களிலாவது நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. அதன்படி தமிழ் சினிமாவில் இறுதியாக நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் 2 படத்தில் ஒரு கேமியோ வேடத்தில் நடிகர் மோகன்லால் நடித்து இருந்தார். இவர் முன்னதாக ஜெயிலர் முதல் பாகத்திலும் கேமியோ வேடத்தில் நடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து மலையாள மொழியில் மட்டும் இந்த 2026-ம் ஆண்டில் நடிகர் மோகன்லால் நடிப்பில் அடுத்தடுத்து 4 படங்கள் திரையரங்குகளில் இதுவரை வெளியாகி உள்ளது.
அதன்படி தொடர்ந்து பிசியான நாயகனாக வலம் வரும் நடிகர் மோகன்லால் நடிப்பில் மலையாள சினிமாவில் அடுத்தடுத்தப் படங்கள் பிசியாக நடைப்பெற்று வருகின்றது. அதன்படி நடிகர் மோகன்லால் நடிப்பில் மலையாள சினிமாவில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் அதிமனோகரம். இந்தப் படத்தின் ரிலீஸ் தேதி தற்போது வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது.




ரிலீஸ் தேதியை முடிவு செய்தது மோகன்லாலின் அதிமனோகரம் படம்:
அதன்படி இந்த அதிமனோகரம் படம் வருகின்ற 24-ம் தேதி டிசம்பர் மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. மேலும் இந்த அதிமனோகரம் படத்தை இயக்குநர் தருண் மூர்த்தி எழுதி இயக்கி உள்ளார். மேலும் இந்தப் படத்தில் நடிகர் மோகன்லால் உடன் இணைந்து நடிகர்கள் மீரா ஜாஸ்மின், பாமா அருண், ஜெகதீஷ், சித்திக், பினு பப்பு, மனோஜ் கே.ஜெயன், லாலு அலெக்ஸ், முகேஷ், சுதீஷ் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர். மேலும் இந்தப் படம் தொடர்பான அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களிடையே அதிக அளவில் கவனத்தை ஈர்த்து வருகின்றது.
Also Read… வெளியானது நடிகர் ஜீவாவின் ஜாலியா இருந்த ஒருத்தன் படத்தின் சென்சார் அப்டேட்!
நடிகர் மோகன்லால் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவு:
December 24,2026
T.S. Lovelajan
Reporting for Duty. On Time.#Athimanoharam #Tharunmoorthy
#Ashiqusman #Dec24 https://t.co/TjaFOYC0OS— Mohanlal (@Mohanlal) November 21, 2026
Also Read… தனது 30-வது படத்தில் தீவிரமாக கவனம் செலுத்தும் நடிகர் கார்த்தி… வைரலாகும் தகவல்!