பிக்பாஸில் நா தொலைஞ்சா போதுனு நினைக்கிறது இவங்கதான்… போட்டியாளர்களின் கலகல பேச்சு!
Bigg Boss Tamil Season 10 | பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சி தொடங்கி தொடர்ந்து தற்போது 11-வது வாரமும் முடிவுக்கு வந்துள்ளது. மொத்தம் 10 போட்டியாளர்கள் மட்டுமே தற்போது உள்ள நிலையில் போட்டி இன்னும் அதிகமாக சூடு பிடித்துள்ளது.
பிக்பாஸ் தமிழ் சீசன் 10 (Bigg Boss Tamil Season 10) நிகழ்ச்சி தொடங்கியதில் இருந்து தொடர்ந்து போட்டியாளர்களிடையே வன்மமும் பகையும் மட்டுமே அதிகமாக இருப்பது பார்வையாளர்களிடையே நல்ல புரிதல் இருக்கிறது. மேலும் இந்த பிக்பாஸ் தமிழ் சீசன் நிகழ்ச்சி தொங்கியதில் இருந்து ஒவ்வொரு சீசனிலும் யாரேனும் நல்ல நன்பர்களாக இருப்பதைப் பார்த்து கொண்டாடுவது வழக்கமாக உள்ளது. ஆனால் இந்த சீசனில் மொத்தம் 24 போட்டியாளர் போட்டியில் கலந்துகொண்டாலும் இவர்களில் யாரேனும் கொண்டாடப்படும் அளவிற்கு நட்பு அல்லது பாசத்தால் பிணைந்து இருந்தார்களாக என்றால் அது கேள்விக்குறியே. இவர்கள் அனைவரும் இந்த நிகழ்ச்சி தொடங்கிய முதல் வாரத்தில் இருந்தே தொடர்ந்து ஒவ்வொருவர் மீதும் பகை வளர்ந்துகொண்டே இருப்பது பார்க்கும் போதே தெரிகிறது. நிகழ்ச்சி முடிய இன்னும் சில நாட்கள் இருக்கும் போதும் அது அதிகரித்து கொண்டே இருப்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சி தொடங்கி தற்போது 11 வாரங்கள் முடிவடைந்து 12-வது வாரம் தொடங்க உள்ளது. மொத்தம் 10 போட்டியாளர்கள் இந்த பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் உள்ள நிலையில் போட்டியாளர்களிடையே இன்றைய வார இறுதி எபிசோடில் விஜய் சேதுபதி ஒரு டாஸ்க் கொடுக்கிறார். அது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.




பிக்பாஸில் நா தொலைஞ்சா போதுனு நினைக்கிறது இவங்கதான்:
இந்த நிலையில் இன்று 77-வது நாளிற்கான முதல் புரோமோ வீடியோவை நிகழ்ச்சி குழு தற்போது வெளியிட்டுள்ளது. அதில் உங்களை யார் இந்த வீட்டில் கால் வாருவார்கள் என்ற கேள்வியை போட்டியாளர்களிடம் கேட்கிறார். அதற்கு வீட்டில் உள்ள போட்டியாளர்கள் 10 பேரும் தங்களை கால் வார நினைக்கும் நபர்களை மிகவும் கலகலப்பாக சுட்டிக்காட்டும் வீடியோவை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
Also Read… இணையத்தில் வைரலாகும் நடிகர் விமலின் நவோரியா படத்தின் டீசர்!
பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சி குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
#Day77 #Promo1 of #BiggBossTamil
Bigg Boss Tamil Season 10 – இன்று இரவு 9:30 மணிக்கு.. நம்ம விஜய் டிவில.. #BiggBossTamilSeason10 #Ottikichi #VijaySethupathi #CarniVizha #BiggBossSeason10Tamil #BiggBoss10 #BiggBossSeason10 #BiggBossTamilBB10 #VijayTV #VijayTelevision https://t.co/Ywba5u4LO6
— Vijay Television (@vijaytelevision) November 22, 2026
Also Read… படப்பிடிப்பை நிறைவு செய்தது விக்ரம் பிரபுவின் சிட்டி ஆஃப் கோல்ட் படக்குழு – வைரலாகும் வீடியோ!