மதுரையில் அதிர்ச்சி! பிளஸ் 2 மாணவியை திருமணம் செய்த பள்ளி ஆசிரியர்.. போக்சோவில் கைது!
Madurai Teacher Arrested : மதுரை மாவட்டத்தில் பிளஸ் 2 மாணவியை காதலித்து திருணம் செய்து 3 மாதம் கர்ப்பம் ஆக்கியதாக எழுந்த புகாரின் அடிப்படையில், தனியார் பள்ளி ஆசிரியரை அனைத்து மகளிர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர் .
மதுரையில் 12- ஆம் வகுப்பு பயலும் மாணவியை ஆசை வார்த்தை கூறி கர்ப்பமாக்கிய தனியார் பள்ளி ஆசிரியரை மகளிர் போலீஸ் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். மதுரை மேற்கு யூனியன் விரிவாக்க சமூக நல அலுவலராக பணிபுரிந்து வருபவர் ராஜாத்தி. இவருக்கு, குழந்தைகள் நல உதவி எண்ணில் இருந்து அழைப்பு வந்தது. அதில், பேசிய நபர் பிளஸ் 2 மாணவிக்கு தனியார் பள்ளி ஆசிரியர் பாலியல் தொல்லை அளித்து கர்ப்பமாக்கி விட்டதாக தெரிவித்துள்ளனர். அதன் அடிப்படையில், சமூக நல அலுவலர் ராஜாத்தி விசாரணை மேற்கொண்டதில், பீ.பி. குளம் பகுதியில் வசித்து வரும் தனியார் பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிந்து வரும் சந்தோஷ் குமார் ( 30 வயது) என்பவர் அரசு பள்ளியில் பயின்று வரும் பிளஸ் டூ மாணவி ஒருவரை காதலித்து வந்துள்ளார்.
பள்ளி ஆசிரியருடன், பிளஸ் 2 மாணவிக்கு காதல்
அந்த மாணவியும், தனியார் பள்ளி ஆசிரியர் சந்தோஷ் குமாரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால், இருவரும் செல்போன் மூலமாக பேசியும், பல்வேறு இடங்களுக்கு தனியாக சென்றும் தங்களது காதலை வளர்த்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் மாணவியின் பெற்றோருக்கு தெரியவந்த நிலையில், அவரை கடுமையாக எச்சரிக்கை செய்துள்ளனர். ஆனால், அதனை காதில் வாங்காத அந்த மாணவி தொடர்ந்து தனியார் பள்ளி ஆசிரியருடன் தொடர்பில் இருந்து வந்துள்ளார் என்று கூறப்படுகிறது. இதனை கண்காணித்துக் கொண்டிருந்த அவரது பெற்றோர் மாணவிக்கு கடும் எச்சரிக்கை விடுத்ததுடன், அவரை கடுமையாக கண்டித்துள்ளனர்.
மேலும் படிக்க: காதலி மீது ஏற்பட்ட சந்தேகம்! வீடு புகுந்து கத்தியால் குத்தி கொன்ற காதலன்.. தூத்துக்குடியில் பரபரப்பு சம்பவம்!
மாணவியை திருமணம் செய்த ஆசிரியர்
இதனால், அச்சமடைந்த அந்த மாணவி இந்த விவகாரம் குறித்து தனியார் பள்ளி ஆசிரியர் சந்தோஷ் குமாரிடம் தெரிவித்துள்ளார். அதனைக் கேட்ட அந்த நபர் வீட்டிலிருந்து புறப்பட்டு என்னுடன் வந்துவிடு, நான் உன்னை திருமணம் செய்து கொள்கிறேன் என்று ஆசை வார்த்தை கூறியுள்ளார். இதனை நம்பிய அந்த மாணவி ஆசிரியர் கூறியது போல வீட்டிலிருந்து வெளியேறி அவருடன் சென்றுள்ள. அதன்படி, ஆசிரியர் சந்தோஷ் குமாரும், மாணவியும் திருமணம் செய்து கொண்டு வெளியூரில் தனியாக வசித்து வந்ததாக தெரிகிறது. அத்துடன், அந்த மாணவியும் 3 கர்ப்பமாக இருந்துள்ளார்.
மாணவி 3 மாத கர்ப்பம்- போக்சோவில் ஆசிரியர் கைது
இந்த நிலையில்தான், பிளஸ் டூ மாணவி தனியார் பள்ளி ஆசிரியரால் திருமணம் செய்யப்பட்டு 3 மாதம் கர்ப்பமாக இருப்பதாக சமூக நல அலுவலருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில், போக்சோ சட்டத்தின் கீழ் மகளிர் போலீசார் வழக்குப் பதிவு செய்து தனியார் பள்ளி ஆசிரியர் சந்தோஷ் குமாரை கைது செய்தனர்.
மேலும் படிக்க: நாகர்கோவில் ரயிலில் பெண் கற்பழித்து கொலை! டிஜிபிக்கு பறந்த நோட்டீஸ்.. எண்ட்ரி கொடுத்த மகளிர் ஆணையம்!