AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

“காங்கிரஸ் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெக-வில் இணைந்துவிடுங்கள்!”.. மாணிக்கம் தாகூருக்கு அண்ணாமலை காட்டமான பதிலடி!

Annamalai Urges Manickam Tagore to Quit Congress: கள்ளக்குறிச்சி விவகாரம் மற்றும் தமிழ்நாட்டின் சட்டம்-ஒழுங்கு நிலை குறித்து மாணிக்கம் தாகூர் முன்வைத்து வரும் கருத்துகளையும், செல்வப்பெருந்தகையுடன் அவருக்கான முரண்பட்ட கருத்துகளையும் சுட்டிக்காட்டி, த.வெ.க-வில் அடிப்படை உறுப்பினராகச் சேர்ந்து தமது கருத்துகளைப் பேசுமாறு அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

“காங்கிரஸ் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெக-வில் இணைந்துவிடுங்கள்!”.. மாணிக்கம் தாகூருக்கு அண்ணாமலை காட்டமான பதிலடி!
அண்ணாமலை, மாணிக்கம் தாகூர்
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 22 Nov 2026 11:19 AM IST

நவம்பர், 22: மாணிக்கம் தாகூர் தமிழக வெற்றிக் கழகத்திற்கு அதிகப்படியான ஆதரவு நிலைப்பாட்டுடன் பேசி வருவதாகக் கூறி, காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் பொறுப்பை ராஜினாமா செய்துவிட்டு தவெக-வில் இணைந்து கொள்ளுமாறு  ‘வீ தி லீடர்ஸ்’ அமைப்பின் தலைவர், அண்ணாமலை காட்டமாகத் தெரிவித்துள்ளார். திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாக அண்ணாமலை பெரிதாக்கிப் பேசுவதாகவும், அந்தக் கோயிலுக்கே செல்ல வேண்டாம் எனவும் மாணிக்கம் தாகூர் கருத்து தெரிவித்திருந்த சூழலில், அதற்கு அண்ணாமலை பதிலடி கொடுத்துள்ளார். தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி முருக பக்தர்களுக்குப் பாடம் எடுக்கத் தேவையில்லை என்றும், தங்களது முருகனை யார், எப்படி வழிபட வேண்டும் என்பதில் தலையிட வேண்டாம் என்றும் அவர் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.

இதையும் படிக்க: “டெல்டாவில் கருகும் பயிர்கள்!”.. உடனடி வறட்சி நிவாரணம் அறிவிக்க முதல்வர் விஜய்க்கு உதயநிதி வலியுறுத்தல்!!

பழனி முருகன் வழிபாடு, திருப்பரங்குன்றம் விவகாரம்:

முருகப் பெருமானுக்கு எவ்வாறு வழிபாடு செய்ய வேண்டும் என்பது குறித்து மாணிக்கம் தாகூர் தன்னிடம் பேச வேண்டாம் என அண்ணாமலை தெரிவித்துள்ளார். ஒவ்வொரு ஆண்டும் பழனி முருகனுக்குக் காவடி எடுப்பவன் தான் என்றும், திருப்பரங்குன்றத்திற்குத் தாம் சென்றுள்ள நிலையில் மாணிக்கம் தாகூர் எத்தனை முறை அங்குச் சென்றுள்ளார் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். இறைவழிபாடு மற்றும் பக்தர்களின் நம்பிக்கை சார்ந்த விவகாரங்களில் அரசியல் நோக்கத்துடன் கருத்துத் தெரிவிப்பதைத் தவிர்க்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

சட்டம்-ஒழுங்கு, கட்சிக்குள்ளான கருத்து வேறுபாடுகள்:

கள்ளக்குறிச்சி விவகாரத்தில் சம்பந்தப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் குறுஞ்செய்தி அனுப்பவில்லை எனவும், தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு சரியாக இருப்பதாகவும் மாணிக்கம் தாகூர் தொடர்ந்து பேசி வருவதை அண்ணாமலை சுட்டிக்காட்டியுள்ளார். அதே நேரத்தில், மாணிக்கம் தாகூர் ஒரு கருத்தைச் சொல்லும்போது அதற்கு எதிரான கருத்தைச் செல்வப்பெருந்தகை முன்வைத்துப் பேசி வருவதாகவும், இத்தகைய சூழலில் மாணிக்கம் தாகூர் த.வெ.க-வுக்கு ஆதரவாகத் தொடர்ந்து பேசி வருவதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.

இதையும் படிக்க: “அதிமுகவின் இந்த நிலைக்கு காரணமே அவர் தான்!”.. இபிஎஸ்-க்கு எஸ்.பி.வேலுமணி காட்டமான பதிலடி!!

தவெக-வில் அடிப்படை உறுப்பினராக சேர வலியுறுத்தல்:

காங்கிரஸ் கட்சியில் இருந்து கொண்டு முன்னுக்குப் பின் முரணாகப் பேசுவதை விட, காங்கிரஸ் மாநிலத் தலைவர் பொறுப்பிலிருந்து விலகித் தமிழக வெற்றிக் கழகத்தில் அடிப்படை உறுப்பினராகச் சேர்ந்து அந்தக் கருத்துகளைப் பேசுவதே சரியாக இருக்கும் என அண்ணாமலை தெரிவித்துள்ளார். மாணிக்கம் தாகூர் தமது பொறுப்பை ராஜினாமா செய்துவிட்டு த.வெ.க-வில் இணைந்து கொள்ள வேண்டும் என்ற தமது கருத்தை அவர் மீண்டும் வலியுறுத்தியுள்ளார். ஏற்கெனவே, செல்வப்பெருந்தகை மாணிக்கம் தாகூர் இடையே முரண்பட்ட கருத்துகள் நிலவி வரும் நிலையில், அதனை சுட்டிக்காட்டி அண்ணாமலை விமர்சித்துள்ளது பேசுபொருளாகியுள்ளது.

Follow Us