“புரிதல் இல்லையா? திட்டமிட்ட தவறா?”.. தீபத்தூண் விவகாரத்தில் தமிழக அரசு மீது கொதித்தெழுந்த அண்ணாமலை!!
Annamalai Questions Contradictory: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூண் விவகாரத்தில், உயர் நீதிமன்ற மதுரை கிளையிலும் உச்ச நீதிமன்றத்திலும் முற்றிலும் மாறுபட்ட நிலைப்பாடுகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், இந்த விவகாரத்தில் போதிய புரிதல் இல்லாமையையோ அல்லது திட்டமிட்டுத் தவறான புரிதலை முன்வைப்பதையோ தான் இது காட்டுகிறது என அவர் விமர்சித்துள்ளார்.
மதுரை, நவ.19: மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூண் தொடர்பான விவகாரம் நீண்ட காலமாகவே சமய, சட்ட மற்றும் அரசியல் வட்டாரங்களில் தீவிர விவாதத்திற்குரிய விஷயமாக இருந்து வருகிறது. இந்தத் தூணின் வரலாற்றுத் தன்மை மற்றும் பயன்பாடு குறித்து பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது இது தொடர்பாக அண்ணாமலை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள கருத்துக்கள் புதிய பரபரப்பைக் கிளப்பியுள்ளன. தீபத்தூண் விவகாரத்தில் தமிழ்நாடு அரசு தரப்பில் மாறுபட்ட மற்றும் முரண்பட்ட கருத்துக்கள் தெரிவிக்கப்படுவதாக அவர் வெளிப்படையாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
இதையும் படிக்க: இனி காவல் நிலையங்களுக்கு அலைய வேண்டியதில்லை.. “மொபைலில் புகார்.. உடனே e-CSR எண்!”.. டிஜிபி வெளியிட்ட அறிவிப்பு!
2025-ல் நீதிமன்றக் கிளையில் வைக்கப்பட்ட நிலைப்பாடு:
In Dec 2025, the HR&CE department under the erstwhile DMK govt told the Madurai bench of the Hon Madras High Court that the Deepathoon atop Thiruparankundram hill was placed by Jain monks to light lamps, contradicting its previous stand that the Deepathoon was a survey stone.
Yesterday, the incumbent TVK govt thru the District Collector of Madurai, has called the Deepathoon a survey stone in the Honourable Supreme Court.
How can a govt have entirely contradictory positions on the very same structure before two courts?
This only reflects a serious lapse in the TN govt’s (Be it DMK then or TVK now) understanding or a deliberate misunderstanding of the subject as a whole.
— K.Annamalai (@annamalai_k) November 19, 2026
தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் இந்த விவகாரம் குறித்துப் பதிவிட்டுள்ள அண்ணாமலை, கடந்த டிசம்பர் 2025-ல் அப்போதைய திமுக ஆட்சியின் கீழ் செயல்பட்ட இந்து சமய அறநிலையத் துறை முன்வைத்த கருத்தைச் சுட்டிக்காட்டியுள்ளார். திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூண் ஒரு நில அளவைக்கல் (Survey Stone) என்ற தனது முந்தைய நிலைப்பாட்டிற்கு மாறாக, அது சமண முனிவர்களால் விளக்கேற்றுவதற்காக அமைக்கப்பட்ட தூண் என்று சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் அறநிலையத் துறை தெரிவித்திருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
உச்ச நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்ட மாறுபட்ட தகவல்:
இதற்கு மாறாக, தற்போதைய தமிழக வெற்றிக் கழக (தவெக) அரசு மதுரை மாவட்ட ஆட்சியர் மூலமாக உச்ச நீதிமன்றத்தில் அந்தத் தீபத்தூண் ஒரு நில அளவைக்கல் என்று தெரிவித்துள்ளதாக அண்ணாமலை சுட்டிக்காட்டியுள்ளார். ஒரே அமைப்பைப் பற்றி இரண்டு வெவ்வேறு நீதிமன்றங்களில் ஒரு அரசு எப்படி முற்றிலும் முரண்பட்ட நிலைப்பாடுகளை எடுக்க முடியும் என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார். அன்றைய திமுக அரசாக இருந்தாலும் சரி, இன்றைய தவெக அரசாக இருந்தாலும் சரி, இந்த விவகாரத்தில் போதிய புரிதல் இல்லாமையையோ அல்லது திட்டமிட்டுத் தவறான புரிதலை முன்வைப்பதையோ தான் இது காட்டுகிறது என அவர் விமர்சித்துள்ளார்.
இதையும் படிக்க: மதுரை நகைக்கடை கொள்ளை வழக்கு.. வெளிவராத பல ரகசியங்கள்.. நிஷாந்தை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறை மனு தாக்கல்!
நீதிமன்ற அறிவிப்புக்கான எதிர்பார்ப்பு:
தீபம் ஏற்றுவது தொடர்பான விவகாரத்தில் விரைவில் நீதிமன்றத்தின் அறிவிப்புகள் வரும் என எதிர்பார்க்கப்படும் சூழலில், உச்ச நீதிமன்றத்திலும் மதுரை உயர் நீதிமன்றக் கிளையிலும் வெவ்வேறு கருத்துக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதை அண்ணாமலை தனது பதிவில் வலியுறுத்தியுள்ளார். தீபத்தூண் விவகாரத்தில் மாறிவரும் நிலைப்பாடுகள் சட்ட ரீதியான விவாதங்களையும் அரசியல் ரீதியான கேள்விகளையும் மேலும் தீவிரப்படுத்தியுள்ளன.