AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

ரூ.50 லட்சம் ரோலெக்ஸ் வாட்ச் சர்ச்சை.. எனது கடிகாரத்தின் விலை ரூ.5,500 மட்டுமே – அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம்

சர்ச்சைக்கு விளக்கம் அளிக்கும் வகையில் அமைச்சர் ராஜ்மோகன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தனது கையில் அணிந்திருக்கும் கடிகாரத்தின் விலை சுமார் ரூ.5,500 மட்டுமே என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், கருத்து தெரிவிப்பதற்கு அனைவருக்கும் உரிமை உண்டு என்றாலும், திட்டமிட்டு நிறம், உடை, அணிகலன்கள் குறித்து பொய்யான தகவல்களைப் பரப்பி தனிப்பட்ட முறையில் இழிவுபடுத்துவது ஏற்புடையதல்ல என்றும் தெரிவித்துள்ளார்.

ரூ.50 லட்சம் ரோலெக்ஸ் வாட்ச் சர்ச்சை.. எனது கடிகாரத்தின் விலை ரூ.5,500 மட்டுமே – அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம்
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 19 Nov 2026 08:47 AM IST

நவம்பர் 19, 2026: தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் அணிந்திருந்த கைக்கடிகாரம் ரூ.50 லட்சம் மதிப்பிலானது என சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவிய நிலையில், அதன் உண்மையான விலை ரூ.5,500 மட்டுமே என அவர் விளக்கம் அளித்துள்ளார். மேலும், தன்னைப் பற்றி திட்டமிட்டு அவதூறு பரப்புவோர் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளார்.

டெல்லி சென்ற அமைச்சர்கள்

தமிழகத்திற்கு வர வேண்டிய சமக்ர சிக்ஷா திட்டத்தின் கீழ் நிலுவையில் உள்ள ரூ.5,000 கோடி நிதியை விடுவிக்க வலியுறுத்தி, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன், அமைச்சர்கள் பூசி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா ஆகியோருடன் டெல்லி சென்றிருந்தார். அங்கு மத்திய கல்வி அமைச்சரைச் சந்தித்து நிதி விடுவிப்பு தொடர்பாக ஆலோசனை நடத்தினார்.

மேலும் படிக்க: மதுரை நகைக்கடை கொள்ளை வழக்கு.. வெளிவராத பல ரகசியங்கள்.. நிஷாந்தை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறை மனு தாக்கல்!

இந்த ஆலோசனைக் கூட்டம் முடிந்த பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ராஜ்மோகன், பெரியார் அறிவுலகம், கன்னிமாரா நூலகம் உள்ளிட்ட இடங்களில் போலி நூல்கள் கொள்முதல் செய்யப்பட்டு முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாகக் கூறப்படும் புகார்கள் குறித்து பேசினார். இந்த விவகாரத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாகவும், இதில் யார் தவறு செய்திருந்தாலும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

ரூ.50 லட்சம் ரோலெக்ஸ் வாட்ச் எனப் பரவிய தகவல்

அமைச்சர் செய்தியாளர்களைச் சந்தித்தபோது அவரது கையில் அணிந்திருந்த கடிகாரத்தின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவின. அந்தக் கடிகாரம் விலை உயர்ந்த ரோலெக்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்தது என்றும், அதன் மதிப்பு ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை இருக்கும் என்றும் பல்வேறு தகவல்கள் வெளியாகின.

மேலும் படிக்க:  தமிழகத்தை விட்டு விலகிய அக்வான் புயல்.. சென்னைக்கு அடுத்த மழை எப்போது? பிரதீப் ஜான் தகவல்

இதையடுத்து, அமைச்சரின் கடிகாரத்தின் விலை தொடர்பாக சமூக வலைதளங்களில் விவாதங்களும் விமர்சனங்களும் எழுந்தன.

ரூ.5,500 மட்டுமே.. அமைச்சர் விளக்கம்


இந்தச் சர்ச்சைக்கு விளக்கம் அளிக்கும் வகையில் அமைச்சர் ராஜ்மோகன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், தனது கையில் அணிந்திருக்கும் கடிகாரத்தின் விலை சுமார் ரூ.5,500 மட்டுமே என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், கருத்து தெரிவிப்பதற்கு அனைவருக்கும் உரிமை உண்டு என்றாலும், திட்டமிட்டு நிறம், உடை, அணிகலன்கள் குறித்து பொய்யான தகவல்களைப் பரப்பி தனிப்பட்ட முறையில் இழிவுபடுத்துவது ஏற்புடையதல்ல என்றும் தெரிவித்துள்ளார்.

உண்மைக்குப் புறம்பான அவதூறுகளையும் தனிப்பட்ட இழிவுபடுத்தல்களையும் பரப்பும் போலிச் செய்தி பரப்பும் குழுக்களைச் சட்டரீதியாக எதிர்கொள்வேன் என்றும் அமைச்சர் ராஜ்மோகன் தனது பதிவில் எச்சரித்துள்ளார்.

Follow Us