AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

சொத்துக்குவிப்பு வழக்கு: விஜயபாஸ்கரை தொடர்ந்து மனைவி ரம்யாவுக்கு அமலாக்கத்துறை சம்மன்

ED Summons C Vijayabaskar Wife: இந்த வழக்கின் தொடர்ச்சியாக, விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவி ரம்யா ஆகிய இருவருக்கும் அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியது. அதன்படி, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் விஜயபாஸ்கர் நேற்று விசாரணைக்காக ஆஜரானார்.

சொத்துக்குவிப்பு வழக்கு: விஜயபாஸ்கரை தொடர்ந்து மனைவி ரம்யாவுக்கு அமலாக்கத்துறை சம்மன்
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 19 Nov 2026 07:19 AM IST

நவம்பர் 19, 2026: முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கரிடம் சுமார் 9 மணி நேரம் விசாரணை நடத்திய அமலாக்கத்துறை அதிகாரிகள், அவரது மனைவி ரம்யாவையும் விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியுள்ளனர். வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கின் அடிப்படையில் இந்த விசாரணை நடைபெற்று வருகிறது.

35.79 கோடி ரூபாய் சொத்துக்குவிப்பு வழக்கு

அதிமுக ஆட்சிக் காலத்தில், 2016 முதல் 2021 வரை சுகாதாரத்துறை அமைச்சராகப் பதவி வகித்தவர் சி. விஜயபாஸ்கர். 2021-ல் திமுக ஆட்சிக்கு வந்ததைத் தொடர்ந்து, வருமானத்துக்கு அதிகமாக ரூ.35.79 கோடி சொத்து சேர்த்ததாகக் கூறி, லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் அவரது மனைவி ரம்யாவும் சேர்க்கப்பட்டார்.

மேலும் படிக்க:  சென்னைக்கு நோ மழை.. தென் மாவட்டங்களில் மட்டுமே மழை இருக்கும் – வானிலை ரிப்போர்ட் இதோ..

இதையடுத்து, விஜயபாஸ்கர் மற்றும் அவருக்குத் தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். தொடர்ந்து, சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையும் தனியாக வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியது.

9 மணி நேரம் விஜயபாஸ்கரிடம் விசாரணை

இந்த வழக்கின் தொடர்ச்சியாக, விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவி ரம்யா ஆகிய இருவருக்கும் அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியது. அதன்படி, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் விஜயபாஸ்கர் நேற்று ஆஜரானார்.

மேலும் படிக்க: மகளிர் உரிமைத் தொகையில் பாதிப் பேர் நீக்கமா?.. பரபரப்பு புகார்களுக்கு தமிழக அரசு விளக்கம்!

காலை தொடங்கிய விசாரணை சுமார் 9 மணி நேரம் நடைபெற்றது. அப்போது, அவரிடம் நூற்றுக்கும் மேற்பட்ட கேள்விகள் கேட்கப்பட்டதாகவும், அவர் அளித்த பதில்கள் வாக்குமூலமாகப் பதிவு செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும், தேவைப்பட்டால் மீண்டும் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என அறிவுறுத்தி அதிகாரிகள் அவரை அனுப்பி வைத்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.

மனைவி ரம்யாவுக்கு இன்று சம்மன்

இதற்கிடையே, விஜயபாஸ்கரின் மனைவி ரம்யாவுக்கு அமலாக்கத்துறை மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது. அதன்படி, அவர் இன்று விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அமைச்சராக இருந்த காலகட்டத்தில் வாங்கப்பட்ட சொத்துகள், முதலீடுகள், பணப்பரிவர்த்தனைகள் உள்ளிட்டவை தொடர்பான ஆவணங்களின் அடிப்படையில் விசாரணை நடைபெறுவதாகக் கூறப்படுகிறது. மேலும், லஞ்ச ஒழிப்புத்துறை மற்றும் அமலாக்கத்துறையிடம் ஏற்கெனவே சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்கள், வருமான ஆதாரங்கள் மற்றும் சொத்துகளுக்கு இடையே உள்ள வேறுபாடுகள் குறித்தும் விளக்கம் கேட்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Follow Us