AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

மகளிர் உரிமைத் தொகையில் பாதிப் பேர் நீக்கமா?.. பரபரப்பு புகார்களுக்கு தமிழக அரசு விளக்கம்!

Tamil Nadu Govt Clarifies Rumors on Magalir Urimai: மகளிர் உரிமைத் தொகை திட்டம் தொடர்பாகத் தவறான தகவல்கள் பரப்பப்படுவதாகத் தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. இரண்டாம் கட்ட பயனாளிகள் மற்றும் புதிதாகச் சேர்க்கப்பட்ட 17 லட்சம் பேரில் பாதிப் பேர் நீக்கப்பட்டதாக எழுந்த எதிர்க்கட்சிகளின் புகார்களுக்கு அரசு தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மகளிர் உரிமைத் தொகையில் பாதிப் பேர் நீக்கமா?.. பரபரப்பு புகார்களுக்கு தமிழக அரசு விளக்கம்!
கோப்புப் படம்
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 19 Nov 2026 06:45 AM IST

சென்னை, நவ.19: தமிழ்நாட்டில் மகளிரின் பொருளாதார மேம்பாட்டிற்காகச் செயல்படுத்தப்பட்டு வரும் முக்கிய நலத்திட்டங்களில் ஒன்றான மகளிர் உரிமைத் தொகைத் திட்டம், பல குடும்பங்களுக்குப் பெரிதும் உறுதுணையாக இருந்து வருகிறது. இத்திட்டத்தின் பயனாளிகள் பட்டியல், தகுதி மற்றும் தொகை வரவு வைப்பு தொடர்பாகத் தொடர்ச்சியாகப் பல்வேறு விவாதங்களும் அரசியல் ரீதியான கருத்துகளும் எழுந்து வருகின்றன. குறிப்பாக, திட்டத்தில் பயனாளிகள் நீக்கப்படுவதாகவும், குறிப்பிட்ட மாதங்களில் உதவித்தொகை நிறுத்தப்படுவதாகவும் எதிர்க்கட்சிகள் முன்வைத்த குற்றச்சாட்டுகள் பொதுமக்கள் மற்றும் பயனாளிகள் மத்தியில் குழப்பத்தையும் பேசுபொருளையும் உருவாக்கியிருந்தன.

இதையும் படிக்க: தூத்துக்குடியில் கூகுள் பே வால் ஏற்பட்ட தகராறு.. விலக்கி விட சென்ற பால் பண்ணை உரிமையாள் கொலை.. ஒருவர் கைது!

இரண்டாம் கட்ட பயனாளிகள் குறித்த புகார்கள்:

இரண்டாம் கட்டமாக மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்தில் சேர்க்கப்பட்ட பலருக்கு ஆகஸ்ட் மாதம் முதல் உதவித்தொகை நிறுத்தப்பட்டிருப்பதாக எதிர்க்கட்சிகள் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டது. இந்தப் புகார்களுக்குப் பதிலளித்துள்ள தமிழக அரசு, மகளிர் உரிமைத் தொகை தொடர்பாகத் தவறான தகவல்கள் பரப்பப்படுவதாகத் தெளிவுபடுத்தியுள்ளது. திட்டத்தின் செயல்பாடுகளில் ஒவ்வொரு மாதமும் வழக்கமான புதுப்பித்தல் பணிகள் நடைபெறுவதாகவும், பயனாளிகளின் விவரங்களை உறுதி செய்யும் சரிபார்ப்பு நடைமுறைதான் இது என்றும் அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

17 லட்சம் பேருக்கு வரவு இல்லை?:

தேர்தலின் போது புதிதாகச் சேர்க்கப்பட்டவர்களில் 50 சதவீதம் பேர் நீக்கப்பட்டிருப்பதாக எதிர்க்கட்சிகள், குறிப்பாக திமுக தரப்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருந்தது. இதனைத் திட்டவட்டமாக மறுத்துள்ள தமிழக அரசு, புதிதாகச் சேர்க்கப்பட்ட 17 லட்சம் பேரில் 50 சதவீதம் பேருக்குத் தொகை வரவு வைக்கப்படவில்லை என்பது தவறான கூற்று எனத் தெரிவித்துள்ளது. மேலும், 15-ஆம் தேதி பயனாளிகளின் வங்கிக் கணக்கில் தொகை வரவு வைக்கப்பட்டதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தெளிவுபடுத்தப்பட்ட நடைமுறைகள்:

மகளிர் உரிமைத் தொகைத் திட்டம் தொடர்பான வதந்திகளுக்கும் தவறான கருத்துகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இந்த விளக்கம் வெளியிடப்பட்டுள்ளது. மாதந்தோறும் மேற்கொள்ளப்படும் வழக்கமான சரிபார்ப்பு மற்றும் புதுப்பித்தல் நடைமுறைகளே திட்டத்தின் தொடர்ச்சிக்கு அடிப்படையாக அமைந்துள்ளன என்பது இந்த அறிக்கையின் மூலம் மீண்டும் உறுதி செய்யப்பட்டுள்ளது. திட்டத்தின் தகுதி மற்றும் வரவு விவரங்கள் குறித்துப் பயனாளிகள் அதிகாரப்பூர்வத் தகவல்களை மட்டுமே நம்ப வேண்டும் என்ற சூழல் உருவாகியுள்ளது.

இதையும் படிக்க: சாட்டை துரைமுருகன் மீது வழக்குப்பதிவு: தவெக அரசுக்கு சீமான் கடும் கண்டனம்!

தங்கம் தென்னரசு குற்றச்சாட்டு:

முன்னதாக, மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் இரண்டாம் கட்டத்தில் சேர்க்கப்பட்ட பயனாளிகளில் 50 சதவீதத்திற்கும் அதிகமானோருக்கு உரிமைத் தொகை நிறுத்தப்படுவதாக வரும் தகவல்கள் அதிர்ச்சி தருவதாகத் திமுக தரப்பிலிருந்து தங்கம் தென்னரசு தெரிவித்திருந்தார். அதோடு, மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்தை தவெக அரசு படியடியாக முடக்கத் திட்டமிடுகிறதா என்ற தீவிரமான கேள்வியைத் தங்கம் தென்னரசு முன்வைத்தார். எந்தக் காரணமும் இன்றி 50 சதவீதத்திற்கும் அதிகமானோருக்கு உரிமைத் தொகையை நிறுத்த முற்படுவது கண்டனத்திற்குரியது என்றும், இது எப்படி நடைமுறைக்கு வரும் என்றும் அவர் கேள்வி எழுப்பினா. பயனாளிகளின் எண்ணிக்கையில் பெருமளவில் குறைப்பு செய்யப்படும் வகையில் தகவல்கள் வெளியாகி வருவது பெண்கள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளதாக அவர் கூறியிருந்தார்.

Follow Us