AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

சென்னையில் சின்ன வெங்காயம் கிலோ ரூ.270 வரை விற்பனை! காய்கறி விலை உயர்வால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி

Small Onion Price Hike: கோயம்பேடு சந்தைக்கு திருச்சி, பெரம்பலூர், கோவை, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து தினமும் 8 முதல் 10 லாரிகளில் சுமார் 100 டன் சின்ன வெங்காயம் கொண்டு வரப்படுவது வழக்கம். ஆனால் தற்போது இரண்டு லாரிகளில் மட்டுமே சுமார் 20 டன் வெங்காயம் வருவதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

சென்னையில் சின்ன வெங்காயம் கிலோ ரூ.270 வரை விற்பனை! காய்கறி விலை உயர்வால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Updated On: 18 Nov 2026 21:26 PM IST

நவம்பர் 18, 2026: சென்னையில் அன்றாடம் சமையலுக்குப் பயன்படுத்தப்படும் காய்கறிகளின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, கோயம்பேடு சந்தையில் சின்ன வெங்காயத்தின் விலை கிலோ ரூ.240 முதல் ரூ.250 வரை விற்பனை செய்யப்படுகிறது. சில்லறை விற்பனைக் கடைகளில் இதன் விலை ரூ.270 வரை உயர்ந்துள்ளதால் இல்லத்தரசிகள் கவலையடைந்துள்ளனர்.

சின்ன வெங்காயம் வரத்து 80 சதவீதம் சரிவு

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்ந்து வரும் நிலையில், தற்போது காய்கறிகளின் விலையும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, சின்ன வெங்காயத்தின் விலை கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

மேலும் படிக்க: தமிழகத்தில் காவல் மரணங்கள் தடுக்கப்படும்; தவறு செய்த காவலர்கள் மீது கடும் நடவடிக்கை – டிஜிபி மகேஷ்குமார் அகர்வால் உறுதி!

தொடர் மழையால் சின்ன வெங்காயம் சாகுபடி பாதிக்கப்பட்டு, விளைச்சல் மற்றும் அறுவடை குறைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் சென்னை சந்தைக்கு வரும் வெங்காயத்தின் அளவு கணிசமாகச் சரிந்துள்ளது.

தினமும் 100 டன் வந்த நிலையில் தற்போது 20 டன் மட்டுமே

கோயம்பேடு சந்தைக்கு திருச்சி, பெரம்பலூர், கோவை, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து தினமும் 8 முதல் 10 லாரிகளில் சுமார் 100 டன் சின்ன வெங்காயம் கொண்டு வரப்படுவது வழக்கம். ஆனால் தற்போது இரண்டு லாரிகளில் மட்டுமே சுமார் 20 டன் வெங்காயம் வருவதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். இதனால் வழக்கமான வரத்துடன் ஒப்பிடும்போது சுமார் 80 சதவீதம் சரிவு ஏற்பட்டுள்ளது.

தேவை தொடர்ந்து இருக்கும் நிலையில், வரத்து குறைந்திருப்பதால் விலை உயர்ந்துள்ளது. வெங்காயத்தின் தரம் மற்றும் அளவைப் பொறுத்து மொத்த விற்பனையில் கிலோ ரூ.180 முதல் ரூ.250 வரை விலை நிர்ணயிக்கப்படுகிறது.

மேலும் படிக்க: சாட்டை துரைமுருகன் மீது வழக்குப்பதிவு: தவெக அரசுக்கு சீமான் கடும் கண்டனம்!

மற்ற காய்கறிகளின் விலையும் உயர்வு

சின்ன வெங்காயம் மட்டுமின்றி, பல்வேறு காய்கறிகளின் விலையும் அதிகரித்துள்ளது. கோயம்பேடு சந்தையில் உஜாலா கத்திரிக்காய் கிலோ ரூ.80, முருங்கைக்காய் ரூ.130, இஞ்சி ரூ.100, பூண்டு ரூ.320, அவரைக்காய் ரூ.75, எலுமிச்சை ரூ.140 என விற்பனை செய்யப்படுகிறது.

இல்லத்தரசிகள் கவலை

அத்தியாவசியப் பொருட்களின் விலை ஏற்கெனவே உயர்ந்துள்ள நிலையில், தற்போது காய்கறிகளின் விலையும் அதிகரித்திருப்பது குடும்பங்களின் மாதாந்திர செலவினத்தை அதிகரித்துள்ளது. குறிப்பாக, அன்றாட சமையலில் அதிகம் பயன்படுத்தப்படும் சின்ன வெங்காயம் கிலோ ரூ.250 முதல் ரூ.270 வரை விற்பனை செய்யப்படுவது பொதுமக்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. வெங்காயம் மற்றும் காய்கறிகளின் வரத்து அதிகரித்தால் மட்டுமே விலை குறைய வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

Follow Us