AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

26 நாள்கள் ரத்து முடிவு! மேட்டுப்பாளையம் டு குன்னூர் மலை ரயில் சேவை மீண்டும் தொடக்கம்.. எப்போது தெரியுமா?

Mettupalayam To Coonoor Mountain Railway : பலத்த மழையால் ஏற்பட்ட நிலச்சரிவு சீரமைக்கப்பட்ட நிலையில், மேட்டுப்பாளையம் டு குன்னுர் இடையையேயான மலை ரயில் சேவை நாளை முதல் தொடங்குவதாக சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது .

26 நாள்கள் ரத்து முடிவு! மேட்டுப்பாளையம் டு குன்னூர் மலை ரயில் சேவை மீண்டும் தொடக்கம்.. எப்போது தெரியுமா?
நீலகிரி மலை ரயில்.
Gowtham Kannan s
Gowtham Kannan S | Updated On: 18 Nov 2026 17:58 PM IST

நீலகிரி மாவட்டத்தில் கனமழை காரணமாக ஏற்பட்டிருந்த நிலச்சரிவு சீரமைப்பு பணிகள் நிறைவடைந்த நிலையில் மேட்டுப்பாளையம் டு குன்னூர் வரையிலான மலை ரயில் சேவை நாளை முதல் தொடங்குவதாக சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. நீலகிரி மாவட்டத்தில், கடந்த அக்டோபர் 23- ஆம் தேதி கனமழை பெய்தது. இதன் காரணமாக, மேட்டுப்பாளையம் டு ஊட்டி மலை ரயில் பாதையில் பல்வேறு இடங்களில் மண்சரிவு ஏற்பட்டது. இதனால், மலை ரயில் தண்டவாளத்தின் மீது பெரிய பெரிய அளவிலான பாறைகள் உருண்டு விழுந்து இருந்தன. அத்துடன், மலை உச்சியில் இருந்த மரங்கள் மற்றும் மண் சரிந்து விழுந்து கிடந்தது. இதனால், பயணிகளின் பாதுகாப்பு கருதி ஊட்டி மலை ரயில் சேவை நிறுத்தப்பட்டிருந்தது.

நீலகிரி மலை ரயில் சேவை ரத்து

தொடர்ந்து, ரயில் இருப்புப் பாதைகளில் விழுந்து கிடந்த பாறைகள், மரங்கள் ஆகியவற்றை சீரமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தன. இதன் காரணமாக கடந்த நவம்பர் 13- ஆம் தேதி வரை மேட்டுப்பாளையம் டு ஊட்டி வரையிலான மலை ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், நீலகிரி மலை இரயில் பாதையில் ஏற்பட்டிருந்த நிலச்சரிவு காரணமாக மேட்டுப்பாளையம் டு உதகமண்டலம் ( ஊட்டி) இடையே இயக்கப்படும் குறிப்பிட்ட நீலகிரி மலை ரயில் சேவை ரத்து நீட்டிக்கப்பட்டுள்ளது ரயில்வே நிர்வாகம் தெரிவித்தது.

மேலும் படிக்க: மீனாட்சி நாச்சியார் தவெகவை சேர்ந்தவரா? சாட்டை துரைமுருகன் மீது பாய்ந்த வழக்கு.. 20 யூடியூப் சேனலுக்கு நோட்டீஸ்!

தண்டவாளத்தில் கிடந்த பாறைகள், மணல், மரங்கள் அகற்றம்

அதன்படி, கடந்த நவம்பர் 13- ஆம் தேதி முதல் இன்று புதன்கிழமை ( நவம்பர் 18- ஆம் தேதி) வரை மலை ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், ரயில் இருப்பு பாதைகளில் விழுந்து கிடந்த பாறைகள், மரங்கள், மண் ஆகியவற்றை ரயில்வே ஊழியர்கள் அகற்றி சரி செய்தனர். அத்துடன், ரயில்வே தண்டவாளங்கள் பல்வேறு இடங்களில் கடுமையாக சேதமடைந்திருந்தது. அதனை, சரிசெய்து சீரமைக்கும் பணிகளில் ரயில்வே ஊழியர்கள் தீவிரமாக பணியாற்றி வந்தனர்.

மேட்டுப்பாளையம் டு குன்னூர் மலை ரயில் சேவை

இந்தப் பணிகள் திட்டமிட்டபடி இன்றுடன் முழுவதுமாக முடிக்கப்பட்டது. அதன்படி, நாளை வியாழக்கிழமை ( நவம்பர் 19- ஆம் தேதி) முதல் மீண்டும் மேட்டுப்பாளையம் டு குன்னூர் இடையிலான மலை ரயில் தொடர்ந்து செயல்படும் என்று சேலம் கோட்ட ரயில் ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கன மழையால் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக சுமார் 26 நாட்கள் இந்த மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இதனால், சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும் படிக்க: பாலியல் அத்துமீறல் புகார்.. 2 இன்ஸ்பெக்டர்கள்- 1 சப்-இன்ஸ்பெக்டர் வேலை காலி.. காவல்துறையில் பரபரப்பு!

Follow Us