காவிரி தொழில்நுட்பக் குழும துணைத் தலைவர் பதவி காலி! நியமனத்தில் 4 மாத தாமதம் ஏன்? – தவெக அரசுக்கு அண்ணாமலை சரமாரி கேள்வி
Annamalai Questions TVK Government: மத்திய அமைச்சரைச் சந்தித்து மனு அளிப்பது மட்டுமே காவிரி மற்றும் மேகதாது பிரச்சினைகளுக்குத் தீர்வாகிவிடுமா? மாநிலத்தின் சொந்த நிர்வாகக் கட்டமைப்பை வலுப்படுத்தி, முக்கியப் பொறுப்புகளுக்கான நியமனங்களை உரிய நேரத்தில் மேற்கொள்ள வேண்டாமா என்றும் அவர் விமர்சித்துள்ளார்.
நவம்பர் 18, 2026: தமிழ்நாட்டின் நீர் உரிமைகள் மற்றும் காவிரி நீர்ப் பங்கீடு தொடர்பான முக்கியப் பொறுப்பான காவிரி தொழில்நுட்பக் குழுமத்தின் துணைத் தலைவர் பதவி காலியாக இருப்பதற்கு பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை, தமிழக அரசைக் கடுமையாக விமர்சித்துள்ளார். முக்கியமான நிர்வாகப் பொறுப்பை நிரப்புவதில் இவ்வளவு காலதாமதம் ஏன் என்றும், விவசாயிகளின் வாழ்வாதாரம் தொடர்பான விவகாரத்தில் அரசு அலட்சியம் காட்டுகிறதா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
மூன்றரை மாதங்களுக்குப் பிறகே அரசாணை
காவிரி தொழில்நுட்பக் குழுமம் மற்றும் மாநிலங்களுக்கு இடையேயான நீர்ப்பிரிவின் (Cauvery Technical Cell-cum-Inter-State Waters Wing) துணைத் தலைவராக இருந்த எம். செல்வராஜின் ராஜினாமா கடந்த 2026 ஜூன் 28ஆம் தேதி ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதையடுத்து, அந்தப் பதவியை மீண்டும் நிரப்புவதற்கான அரசாணை சுமார் மூன்றரை மாதங்களுக்குப் பிறகு, அக்டோபர் 9ஆம் தேதிதான் வெளியிடப்பட்டது.
மேலும் படிக்க: பாலியல் அத்துமீறல் புகார்.. 2 இன்ஸ்பெக்டர்கள்- 1 சப்-இன்ஸ்பெக்டர் வேலை காலி.. காவல்துறையில் பரபரப்பு!
ஆனால், அரசாணை வெளியிடப்பட்டு ஒரு மாதத்திற்கும் மேலாகியும் புதிய துணைத் தலைவர் நியமிக்கப்பட்டதாகத் தகவல் இல்லை. தமிழ்நாட்டின் நீராதார உரிமைகள் மற்றும் மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர்ப் பிரச்சினைகளைக் கையாள்வதில் முக்கியப் பங்கு வகிக்கும் இந்தப் பதவி தொடர்ந்து காலியாக இருப்பது நிர்வாக ரீதியான கேள்விகளை எழுப்பியுள்ளது.
காவிரி நீர்ப் பங்கீடு, மேகதாது அணை விவகாரம்
காவிரி நீர்ப் பங்கீட்டுப் பிரச்சினை தமிழ்நாடு மற்றும் கர்நாடகா இடையே தொடர்ந்து நீடித்து வருகிறது. குறிப்பாக, கர்நாடக அரசு முன்மொழிந்துள்ள மேகதாது அணைத் திட்டம் தமிழ்நாட்டின் நீர் உரிமைகள் தொடர்பான முக்கியப் பிரச்சினையாக உள்ளது.
மேகதாதுவில் 67.16 டி.எம்.சி. கொள்ளளவு கொண்ட அணை கட்ட கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளது. இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டால் தமிழ்நாட்டுக்கு உரிய காவிரி நீரின் வரத்து மற்றும் உச்சநீதிமன்றம் நிர்ணயித்துள்ள மாதாந்திர நீர் ஒதுக்கீடு பாதிக்கப்படலாம் என்பது தமிழக அரசின் எதிர்ப்புக்கான முக்கியக் காரணமாக உள்ளது.
மேலும் படிக்க: “மன்னித்துக்கொள்ளுங்கள்.. இதை வெளியே சொல்ல வேண்டாம்!”.. ஆட்சியருக்கு அமைச்சர்கள் அழுத்தம் கொடுத்ததாக கனிமொழி பகீர் குற்றச்சாட்டு!!
இதற்கிடையே, 2026-27 நீராண்டில் கர்நாடகாவிடமிருந்து தமிழ்நாட்டுக்கு உரிய காவிரி நீர் முழுமையாகக் கிடைக்கவில்லை என்றும், காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுகளைச் செயல்படுத்துவதில் சிக்கல் நீடிப்பதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தவெக அரசுக்கு அண்ணாமலை கேள்வி
காவிரி தொழில்நுட்பக் குழுமம் மற்றும் மாநிலங்களுக்கு இடையேயான நீர்ப்பிரிவின் (Cauvery Technical Cell-cum-Inter-State Waters Wing) துணைத் தலைவராக இருந்த திரு. எம். செல்வராஜ் அவர்களின் ராஜினாமா கடந்த 2026 ஜூன் 28-ஆம் தேதி ஏற்றுக்கொள்ளப்பட்டது. அந்த மிக முக்கியமான பதவியை மீண்டும் நிரப்புவதற்கான அரசாணை, சுமார் மூன்றரை மாதங்களுக்குப் பிறகு, அக்டோபர் 9-ஆம் தேதிதான் வெளியிடப்பட்டிருக்கிறது. அரசாணை வெளியிடப்பட்டு ஒரு மாதத்திற்கும் மேலாகியும், இன்றுவரை புதிய துணைத் தலைவர் நியமிக்கப்பட்டதாகத் தகவல் இல்லை.
தமிழ்நாட்டின் நீராதார உரிமைகள் மற்றும் மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர்ப் பிரச்சினைகளைக் கையாள்வதில் மிக முக்கியப் பங்கு வகிக்கும் ஒரு பொறுப்பான பதவியை நிரப்புவதிலேயே இத்தகைய காலதாமதம் ஏற்படுவது அரசின் நிர்வாகத் திறன் மற்றும் பொறுப்புணர்வு குறித்த கேள்விகளை எழுப்புகிறது. இது சாதாரணமான ஒரு நிர்வாகப் பதவி அல்ல, தமிழ்நாட்டின் நீர் உரிமைகளைப் பாதுகாப்பதில் முக்கியமான தொழில்நுட்ப மற்றும் சட்டரீதியான பணிகளுடன் தொடர்புடைய பொறுப்பு.
ஒருபுறம் காவிரி டெல்டா மாவட்டங்களில் சம்பா சாகுபடிக்குத் தேவையான தண்ணீர் கிடைக்காமல் விவசாயிகள் கவலையில் உள்ளனர். மறுபுறம் காவிரி நீர்ப் பங்கீட்டுப் பிரச்சினை தொடர்ந்து கொண்டிருக்கிறது. கர்நாடகத்தின் மேகதாது அணைத் திட்ட விவகாரமும் தமிழ்நாட்டின் உரிமைகளுக்குச் சவாலாக நீடிக்கிறது. இத்தனை முக்கியமான பிரச்சினைகள் ஒருபுறம் இருக்கும்போது, அவற்றைக் கையாள வேண்டிய காவிரி தொழில்நுட்பக் குழுமம் மற்றும் மாநிலங்களுக்கு இடையேயான நீர்ப்பிரிவின் (Cauvery Technical Cell-cum-Inter-State Waters Wing) மிக முக்கியமான துணைத் தலைவர் பதவி காலியாக இருப்பது எவ்வளவு பெரிய நிர்வாகக் குறைபாடு?
தமிழக அமைச்சர்கள் திரு. N. ஆனந்த் மற்றும் திரு. ஆதவ் அர்ஜுனா ஆகியோர், மத்திய நீர்வளத்துறை அமைச்சரைச் சந்தித்து மேகதாது அணை விவகாரம் தொடர்பாக மனு அளிக்க உள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. மாநிலத்தின் சொந்த நிர்வாகக் கட்டமைப்பை வலுப்படுத்தி, முக்கியப் பொறுப்புகளுக்கான நியமனங்களை உரிய நேரத்தில் மேற்கொள்ளாமல், மத்திய அமைச்சரைச் சந்தித்து மனு அளிப்பது மட்டுமே இந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வாகிவிடும் என்று தவெக அரசு நினைக்கிறதா?
விவசாயிகளின் வாழ்வாதாரமும், தமிழ்நாட்டின் நீர் உரிமையும் தொடர்புடைய இவ்வளவு முக்கியமான விவகாரங்களில் தவெக அரசின் இத்தகைய நிர்வாகத் தாமதமும் பொறுப்பின்மையும் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல.
— K.Annamalai (@annamalai_k) November 18, 2026
இத்தகைய சூழலில், மாநிலத்தின் நீர் உரிமைகளைப் பாதுகாப்பதில் முக்கியப் பங்கு வகிக்கும் காவிரி தொழில்நுட்பக் குழுமத்தின் துணைத் தலைவர் பதவியையே நிரப்புவதில் ஏன் இவ்வளவு காலதாமதம் ஏற்படுகிறது என அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
மத்திய அமைச்சரைச் சந்தித்து மனு அளிப்பது மட்டுமே காவிரி மற்றும் மேகதாது பிரச்சினைகளுக்குத் தீர்வாகிவிடுமா? மாநிலத்தின் சொந்த நிர்வாகக் கட்டமைப்பை வலுப்படுத்தி, முக்கியப் பொறுப்புகளுக்கான நியமனங்களை உரிய நேரத்தில் மேற்கொள்ள வேண்டாமா என்றும் அவர் விமர்சித்துள்ளார்.
விவசாயிகளின் வாழ்வாதாரமும், தமிழ்நாட்டின் நீர் உரிமையும் தொடர்புடைய இவ்வளவு முக்கியமான விவகாரத்தில், காலியாக உள்ள துணைத் தலைவர் பதவியை விரைந்து நிரப்ப தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அண்ணாமலையின் வலியுறுத்தலாக உள்ளது.