AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

மகாபலிபுரம் புராதான சின்னங்கள்.. இலவசமாக சுற்றி பார்க்க வேண்டுமா.. இதோ அரிய வாய்ப்பு!

Mahabalipuram Ancient Monuments : மகாபலிபுரத்தில் உலக பாரம்பரிய வாரம் கொண்டாப்பட உள்ள நிலையில், நாளை வியாழக்கிழமை ஒரு நாள் மட்டும் அனைத்து தரப்பு பொது மக்கள், சுற்றுலாப் பயணிகள் இலவசமாக சுற்றிப் பார்க்கலாம் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது .

மகாபலிபுரம் புராதான சின்னங்கள்.. இலவசமாக சுற்றி பார்க்க வேண்டுமா.. இதோ அரிய வாய்ப்பு!
மகாபலிபுரம்.
Gowtham Kannan s
Gowtham Kannan S | Published: 18 Nov 2026 15:29 PM IST

செங்கல்பட்டு மாவட்டம், மகாபலிபுரத்தில் ஏராளமான புராத சின்னங்கள் அமைந்துள்ளன. இதனை உலக பாரம்பரிய வாரத்தையொட்டி, நாளை ஒரு நாள் இலவசமாக சுற்றி பார்க்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மகாபலிபுரத்தில் நாளை வியாழக்கிழமை ( நவம்பர் 19- ஆம் தேதி) காலை அர்ஜுனன் தபசு எதிரே ஓவியப் போட்டியுடன் ” உலக பாரம்பரிய வாரம்” தொடங்குகிறது. இந்த நிகழ்வானது நவம்பர் 25- ஆம் தேதி ( புதன்கிழமை) வரை நடைபெறுகிறது. இதன் காரணமாக, நாளை வியாழக்கிழமை மட்டும் மகாபலிபுரத்தில் உள்ள புராதன சின்னங்களை பொதுமக்கள் சுற்றிப் பார்க்க இலவச அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் மத்திய தொல்லியல் துறை சார்பில் உலக பாரம்பரிய வாரம் கொண்டாடப்பட்டு வருகிறது.

மகாபலிபுரத்தில் இலவசமாக சுற்றி பார்க்க அனுமதி

அந்த வகையில் இந்த ஆண்டு உலக பாரம்பரிய வாரம் நாளை வியாழக்கிழமை தொடங்குகிறது. அர்ஜுனன் தபசு எதிரே ஓவியப் போட்டியுடன் தொடங்கும் இந்த விழாவில் கண்காட்சி, ஓவிய போட்டிகள், கலை நிகழ்ச்சிகள், லேசர் ஒளி என பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. நாடு முழுவதும் உள்ள புராதான சின்னங்கள் இருக்கும் பாரம்பரிய நகரங்களில் இந்த போட்டி நடைபெறுவது வழக்கம் ஆகும். இதில், பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் பங்கேற்க உள்ளனர். இதன் காரணமாக ஒரு நாள் மட்டும் அனைத்து தரப்பு பொது மக்களும் மகாபலிபுரத்தில் அமைந்துள்ள புராதன சின்னங்களை இலவசமாக சுற்றிப் பார்க்கலாம்.

மேலும் படிக்க: மீனாட்சி நாச்சியார் தவெகவை சேர்ந்தவரா? சாட்டை துரைமுருகன் மீது பாய்ந்த வழக்கு.. 20 யூடியூப் சேனலுக்கு நோட்டீஸ்!

மகாபலிபுரத்தில் என்னென்ன உள்ளன

இந்த மகாபலிபுரத்தில்

  • அர்ஜுனன் தபசு.
  • ஐந்து ரதம்.
  • புலி குகை.
  • உருண்டை கல் பாறை.
  • குடவரை கோவில் பகுதிகள் உள்ளிட்டவை அமைந்துள்ளன.

தினந்தோறும் குவிந்து வரும் சுற்றுலாப் பயணிகள்

இதனை சுற்றிப் பார்ப்பதற்காக தினந்தோறும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டை சேர்ந்த ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். சென்னை சுற்றுவட்டார பகுதியில் தவிர்க்க முடியாத சுற்றுலாத்தலமாக மகாபலிபுரம் விளங்கி வருகிறது. இதனால், சுற்றுலா பயணிகளை மேலும் ஈர்க்கும் வகையில், தமிழக சுற்றுலாத்துறை சார்பில் பல்வேறு கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில், மகாபலிபுரத்தில் ரோப் கார் சேவை தொடங்குவதற்கான திட்டத்தை தமிழக அரசு கையில் எடுத்துள்ளது.

விரைவில் ரோப் கார் சேவை திட்டம் தொடக்கம்

இதற்காக, மகாபலிபுரம் பகுதியில் ரோப் கார் சேவை அமைப்பதற்கான அளவீடு உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. அத்துடன், இதற்கான டெண்டர் வெளியிடுவது தொடர்பான பணிகளும் நடைபெற்று வருகின்றன. விரைவில், மகாபலிபுரத்தில் உள்ள புராதன சின்னங்கள், கடல் அழகு உள்ளிட்டவற்றை வானில் பறந்த வாறு சுற்றுலா பயணிகள் கண்டு களிக்க ரோப் கார் சேவை வர உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: பாலியல் அத்துமீறல் புகார்.. 2 இன்ஸ்பெக்டர்கள்- 1 சப்-இன்ஸ்பெக்டர் வேலை காலி.. காவல்துறையில் பரபரப்பு!

Follow Us