முதல்வர் விஜய்க்கு ஒன்றும் தெரியாது.. எந்த பிரச்சனைக்காக பேசியுள்ளார்.. மு. க. ஸ்டாலின் விமர்சனம்!
M. K. Stalin Criticized CM Vijay : காவிரி நீர் விவகாரம் மற்றும் மேகதாது அணை விவகாரத்தில் முதல்வர் ஜோசப் விஜய்க்கு ஒன்றும் தெரியாது, அவர் தற்போது வரை எந்த பிரச்சனைக்காக பேசியுள்ளார் என்று திமுக தலைவர் மு. க. ஸ்டாலின் காட்டமாக பதில் அளித்தார்.
டெல்லியில் காங்கிரஸ் நாடாளுமன்ற குழுவின் தலைவர் சோனியா காந்தி எழுதிய சுயசரிதை புத்தக வெளியீட்டு விழாவில் முதல்வர் விஜய் பங்கேற்று இருந்தார். அப்போது, விழாவில் பங்கேற்ற கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமாரிடம் காவிரி நீர் விவகாரம் மற்றும் மேகதாது அணை விவகாரம் தொடர்பாக முதல்வர் விஜய் பேச்சுவார்த்தை நடத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அத்தகைய பேச்சு வார்த்தை எதுவும் நடைபெறவில்லை. இந்த நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு. க. ஸ்டாலினிடம் இது தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, தமிழக முதல்வர் ஜோசப் விஜய்க்கு என்ன தெரியும். காவிரி நீர் விவகாரம் மற்றும் மேகதாது அணை விவகாரம் தொடர்பாக அவருக்கு எதுவும் தெரியாது. ஆட்சி பொறுப்பேற்றது முதல் தற்போது வரை முதல்வர் விஜய் எந்த பிரச்சனைக்காக பேசியுள்ளார் என்று தெரிவித்தார்.
சோனியா காந்தி புத்தக வெளியீட்டு விழாவுக்கு வாழ்த்து கடிதம்
அப்போது, டெல்லியில் நடைபெற்ற சோனியா காந்தி எழுதிய புத்தக வெளியீட்டு விழாவில் தங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்ததா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, ஆம், உதவியாளர் மூலமாக எனக்கு தொலைபேசி வாயிலாக அழைப்பு வந்தது. அழைப்பிதழ் எதுவும் வழங்கப்படவில்லை. ஆனால், சோனியா காந்தி புத்தக வெளியீட்டு விழாவுக்கு வாழ்த்து தெரிவித்திருந்தேன். அத்துடன், கடிதம் மூலமாகவும் எனது வாழ்க்கை அனுப்பி இருந்தேன் என்று தெரிவித்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார். டெல்லியில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் பல்வேறு மாநில முதல்வர்கள், பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்று இருந்தனர்.
மேலும் படிக்க: மீனாட்சி நாச்சியார் தவெகவை சேர்ந்தவரா? சாட்டை துரைமுருகன் மீது பாய்ந்த வழக்கு.. 20 யூடியூப் சேனலுக்கு நோட்டீஸ்!
கர்நாடக முதல்வர் – தமிழக முதல்வர் பேச்சுவார்த்தை
அந்த விழாவில் தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யும் பங்கேற்றிருந்த நிலையில், கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமாரிடம் பேசிக் கொண்டிருந்தார். ஆனால், தமிழகமே பெரிதளவில் எதிர்பார்த்த காவிரி நீர் விவகாரம் மற்றும் மேகதாது அணை விவகாரம் தொடர்பாக முதல்வர் விஜய் எதுவும் பேசவில்லை என்று தகவல் வெளியாகின. இதற்கு திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் கடும் கண்டனத்தை பதிவு செய்திருந்தனர். மேகதாது அணை விவகாரத்தில் பெருத்த ஏமாற்றம் ஏற்பட்டது போல பிம்பம் நிலவியது. அத்துடன், திமுக தரப்பில் வெளியிடப்பட்டிருந்த அறிக்கையில், மக்கள் பணத்தில் தனி விமானத்தில் டெல்லி சென்று விட்டு தமிழக மக்களின் நலனை பற்றி சிந்திக்காமல் கர்நாடக முதல்வரிடம் காவிரி விவகாரம்,
மக்கள் வரிப்பணத்தில் தனி விமானத்தில் டெல்லி பயணம்
மேகதாது அணை விவகாரம் தொடர்பாக எதுவும் பேச்சுவார்த்தை நடத்தாமல் முதல்வரின் டெல்லி பயணம் அமைந்திருந்ததாக பல்வேறு குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டிருந்தன. இந்த நிலையில்தான், திமுக தலைவர் மு. க. ஸ்டாலின் மேகதாது அணை விவகாரம் தொடர்பாக முதல்வர் விஜய்க்கு எதுவும் தெரியாது என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.
மேலும் படிக்க: பாலியல் அத்துமீறல் புகார்.. 2 இன்ஸ்பெக்டர்கள்- 1 சப்-இன்ஸ்பெக்டர் வேலை காலி.. காவல்துறையில் பரபரப்பு!