பொங்கல் முடிந்து சென்னை திரும்ப ரயில் டிக்கெட்டுகள் – ஜனவரி 18, 19 தேதிகளுக்கான முன்பதிவு எப்போது?
Pongal Return Train Ticket Booking : பொங்கல் பண்டிகை முடிந்து சொந்த ஊர்களில் இருந்து சென்னை திரும்புவதற்கான ரயில் டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ஜனவரி 17க்கான ரயில் டிக்கெட் ஏற்கனவே விற்றுத் தீர்ந்த நிலையில் ஜனவரி 18, 19 ஆகிய நாட்களுக்கான ரயில் டிக்கெட் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை, நவம்பர் 18 : பொங்கல் பண்டிகை முடிந்து சொந்த ஊர்களில் இருந்து சென்னை திரும்புவதற்கான ரயில் டிக்கெட் (Train Ticket) முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக ஜனவரி 17, 2027 ஊர் திரும்புவதற்கான ரயில் டிக்கெட் முன்பதிவு நவம்பர் 18, 2026 இன்று காலை 8 மணிக்கு தொடங்கிய நிலையில், பெரும்பாலான ரயில்களில் சில நிமிடங்களிலேயே டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்தன. இதனிடையே 2027 ஜனவரி 18 மற்றும் 19 நாட்களில் ஊர் திரும்புவதற்கான ரயில் டிக்கெட் முன்பதிவு குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
பொங்கல் பண்டிகை 2027
ஒவ்வொரு ஆண்டும் தமிழர்களால் வெகு சிறப்பாக கொண்டாடப்படும் பண்டிகளில் ஒன்று பொங்கல். அந்த வகையில் வரும் 2027 ஆம் ஆண்டு ஜனவரி 15, 2027 வெள்ளிக்கிழமை பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. அதற்கு அடுத்த நாளான 2027 ஜனவரி 16 அன்று மாட்டுப் பொங்கலும், 2027 ஜனவரி 17 அன்று காணும் பொங்கலும் கொண்டாடப்படவுள்ளது. தொடர விடுமுறை காரணமாக மக்கள் தங்கள் சொந்த ஊரில் கொண்டாடுவது வழக்கம். இந்த நிலையில் ஊர்களுக்கு செல்பவர்கள இந்திய ரயில்வேயின் 60 நாட்கள் முன்பதிவு நடைமுறையின் கீழ், பயணிகள் முன்கூட்டியே டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து வருகின்றனர்.
இதையும் படிக்க : “சென்னையில் சர்வதேச தரத்தில் பிரம்மாண்ட ஒலிம்பிக் சிட்டி!”.. செம்மஞ்சேரியில் 124 ஏக்கர் நிலத்தை இறுதி செய்தது தமிழக அரசு!




சில நிமிடங்களில் விற்றுத் தீர்ந்த ரயில் டிக்கெட்டுகள்
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்குச் செல்வதற்கான ரயில் டிக்கெட்டுகள் ஏற்கெனவே பெரும்பாலான ரயில்களில் முன்பதிவு செய்யப்பட்டுவிட்டன. இந்த நிலையில், பொங்கல் விடுமுறை முடிந்து சென்னை திரும்புவதற்கான ரயில் டிக்கெட் முன்பதிவு தற்போது நடைபெற்று வருகிறது. குறிப்பாக, காணும் பொங்கல் தினமான 2027 ஜனவரி 17 ஆம் தேதி பயணம் செய்வதற்கான ரயில் டிக்கெட் முன்பதிவு நவம்பர் 18, 2026 இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது.
அதன் படி ஜனவரி 18, 2027 திங்கட்கிழமை அலுவலகங்கள் மற்றும் பள்ளிகள் திறக்கப்படும் என்பதால், பெரும்பாலான பயணிகள் ஜனவரி 17ஆம் தேதியே சென்னை திரும்பத் திட்டமிட்டுள்ளனர். இதன் காரணமாக முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே பல முக்கிய ரயில்களில் டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்தன.
ஜனவரி 18, 19 தேதிகளுக்கான முன்பதிவு எப்போது?
2027 ஜனவரி 17ஆம் தேதிக்கான ரயில் டிக்கெட்டுகள் பெரும்பாலான ரயில்களில் விற்றுத் தீர்ந்த நிலையில், அடுத்தடுத்த நாட்களுக்கான முன்பதிவை பயணிகள் எதிர்பார்த்துள்ளனர். அதன்படி, ஜனவரி 18, 2027 திங்கட்கிழமை பயணம் செய்வதற்கான ரயில் டிக்கெட் முன்பதிவு நவம்பர் 19, 2026 நாளை காலை 8 மணிக்குத் தொடங்குகிறது. தேபோல், ஜனவரி 19, 2027 செவ்வாய்க்கிழமை பயணம் செய்வதற்கான ரயில் டிக்கெட் முன்பதிவு நவம்பர் 20, 2026 வெள்ளிக்கிழமை காலை 8 மணிக்குத் தொடங்குகிறது.
இதையும் படிக்க : திமுக- காங்கிரஸ் உறவு முற்றிலும் முறிவு? ராகுல்காந்தி அழைப்பை ஏற்க மறுத்த மு.க.ஸ்டாலின்.. அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு!
இதனால் ஜனவரி 17, 2026 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமைக்கான ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய முடியாத பயணிகள், 2027 ஜனவரி 18 மற்றும் 19ஆ ம் தேதிகளுக்கான முன்பதிவைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.