இந்திய ரயில்வே
இந்திய ரயில்வே என்பது இந்திய அரசாங்கத்தால் கட்டுப்படுத்தப்படும் ஒரு பொது ரயில்வே சேவையாகும். இந்தியாவின் ரயில்வே நெட்வொர்க் 115,000 கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ளது. ஒவ்வொரு நாளும் 231,000 க்கும் மேற்பட்ட மக்கள் ரயிலில் பயணம் செய்கிறார்கள். தினமும் 3.3 மில்லியன் டன்களுக்கும் அதிகமான சரக்குகள் கொண்டு செல்லப்படுகின்றன. இந்தியாவின் ரயில்வே சேவை உலகின் நான்காவது பெரியது. இந்திய ரயில்வே 1.227 மில்லியனுக்கும் அதிகமான மக்களைப் பணியமர்த்துகிறது. ரயில்வே துறை என்பது இந்திய அரசின் மத்திய ரயில்வே துறையின் ஒரு பிரிவாகும், இது இந்தியாவில் உள்ள முழு ரயில்வே வலையமைப்பையும் திட்டமிடுவதற்கு பொறுப்பாகும். ரயில்வே துறையை ரயில்வே அமைச்சரவை அமைச்சர் மேற்பார்வையிடுகிறார், ரயில்வே துறைக்கான திட்டமிடல் ரயில்வே வாரியத்தால் செய்யப்படுகிறது. தற்போது, இந்தியாவின் ரயில் நெட்வொர்க் குறிப்பிடத்தக்க அளவில் வளர்ச்சியடைந்துள்ளது. பல ஆண்டுகளாக, ரயில்வேயை தனியார்மயமாக்குவது குறித்த விவாதங்கள் நடந்து வருகின்றன.
சென்னை – நெல்லை வந்தே பாரத் ரயில் – இனி இந்த ஸ்டேஷனிலும் நின்று செல்லும் – விவரம் இதோ
Vande Bharat Update : சென்னை - திருநெல்வேலி வந்தே பாரத் ரயில் இனி விருதாச்சலம் ரயில் நிலையத்திலும் நின்று செல்லும் வகையில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. தங்கள் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறிய நிலையில் விருதாச்சலம் மக்கள் மகிழ்ச்சி தெரிவித்து வருகின்றனர்.
- Karthikeyan S
- Updated on: Dec 21, 2025
- 19:15 pm IST
ரயில் பயணிகளே உஷார்…செல்போனில் இ-டிக்கெட்டுக்கு நோ…இந்தியன் ரயில்வே முக்கிய அறிவிப்பு!
Indian Railways Not Accept Unreserved Tickets On Mobile: ரயில்களில் முன்பதிவில்லாத பெட்டிகளில் பயணிக்கும் பயணிகள் தங்களது செல்போன்களில் காண்பிக்கும் ரயில் டிக்கெட்டுகள் இனி ஏற்கப்படாது என்று முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு பதிலாக டிக்கெட் பிரதியை கையில் வைத்திருக்க அறிவுறுத்தியுள்ளது.
- Gowtham Kannan
- Updated on: Dec 19, 2025
- 18:37 pm IST
ரயில் டிக்கெட் முன்பதிவில் மிகப்பெரிய மாற்றம் – பயணிகளுக்கு நிம்மதியை ஏற்படுத்திய அறிவிப்பு
Indian Railways Update: ரயில் டிக்கெட் முன்பதிவு செய்துள்ள பயணிகளுக்கு கடைசி நேர குழப்பத்தை தவிர்க்கும் வகையில் ரிசர்வேஷன் சார்ட் விவரங்களை ரயில் கிளம்பும் நேரத்தில் இருந்து சரியாக 10 மணி நேரத்துக்கு முன்னதாக தெரிந்துகொள்ளும் அறிவிப்பை இந்தியன் ரயில்வே அறிவித்துள்ளது.
- Karthikeyan S
- Updated on: Dec 19, 2025
- 18:37 pm IST
Year Ender 2025: ஒரே ஆப்பில் அனைத்து ரயில் சேவைகள் – ரயில் ஒன் செயலியின் ஸ்பெஷல் என்ன?
RailOne App: இந்த 2025 ஆம் ஆண்டின் மிக முக்கிய மாற்றமாக ரயில் பயணிகளுக்கு அனைத்து வசதிளும் ஒரே இடத்தில் கிடைக்கும் வகையில் ரயில்ஒன் செயலியை அரிமுகப்படுத்தியது. ஐஆர்சிடிசி ரயில் கனெக்ட், யுடிஎஸ், என்டிஇஎஸ், ரியி் மடட், இகேட்டரிங் போன்ற பல ஆப்களை பயன்படுத்த வேண்டிய அவசியமில்லை.
- Karthikeyan S
- Updated on: Dec 19, 2025
- 18:37 pm IST
சென்னை டூ ஆந்திரா வந்தே பாரத் ரயில் சேவை…நிறுத்தம்…கட்டணம் எவ்வளவு!
Chennai To Narsapur Vande Bharat Train: சென்னையில் இருந்து ஆந்திரா மாநிலம், நராசாபூருக்கு வந்தே பாரத் ரயில் சேவை இன்று திங்கள்கிழமை தொடங்கப்பட்டது. இந்த ரயில் நின்று செல்லும் ரயில் நிலையங்கள், டிக்கெட் கட்டணங்கள் உள்ளிட்டவை குறித்து விரிவாக பார்க்கலாம்.
- Gowtham Kannan
- Updated on: Dec 19, 2025
- 18:38 pm IST
கிறிஸ்துமஸ் லீவுக்கு ஊருக்கு போறீங்களா? சிறப்பு ரயிலை அறிவித்த தெற்கு ரயில்வே – எப்போ தெரியுமா?
Special Trains for Christmas Holidays: கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை முன்னிட்டு ரயில்களில் ஏற்படும் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக தெலங்கானா மாநிலம் சார்லபள்ளியில் இருந்து கர்நாடகா மாநிலம் மங்களூருவுக்கு சேலம் வழியாக சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
- Karthikeyan S
- Updated on: Dec 19, 2025
- 18:39 pm IST
கர்ப்பிணி பெண்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு இனி lower berth தானாக கிடைக்கும்.. இந்திய ரயில்வேயின் அசத்தல் அறிவிப்பு..
Train Ticket Booking: 45 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் மற்றும் கர்ப்பிணி பெண்களுக்கு கீழ்படுக்கைகள் தானாகவே ஒதுக்கப்படும் வகையில் புதிய கொள்கை அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்யும்போதே அவர்கள் தேர்வு செய்யாவிட்டாலும், கிடைக்கும் தன்மையின் அடிப்படையில் கீழ்படுக்கைகள் தானாகவே ஒதுக்கப்படும்.
- Aarthi Govindaraman
- Updated on: Dec 19, 2025
- 18:39 pm IST
இனி ஏசி அல்லாத ஸ்லீப்பர் பெட்டிகளிலும் இந்த வசதி கிடைக்கும்.. தெற்கு ரயில்வே அசத்தல் திட்டம்!
Blankets and Pillows for Non-AC Sleeper Coaches | இதுவரை ஏசி ஸ்லீப்பர் பெட்டிகளில் பயணம் செய்யும் நபர்களுக்கு மட்டுமே இதுவரை போர்வை மற்றும் தலையணை வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது ஏசி அல்லாத ரயில் பெட்டிகளிலும் போர்வை மற்றும் தலையணை வழங்கப்படும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
- Vinalin Sweety
- Updated on: Dec 19, 2025
- 18:40 pm IST
சேலம் – ஈரோடு புதிய பயணிகள் ரயில் சேவை – தெற்கு ரயில்வே அறிவிப்பு – எப்போது தெரியுமா?
New Train Service : மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான சேலம் மற்றும் ஈரோடு இடையே புதிய மெமு ரயில் சேவையை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இந்த ரயில் வியாழக்கிழமை தவிர வாரத்தில் 6 நாட்களும் இயங்கும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
- Karthikeyan S
- Updated on: Dec 19, 2025
- 18:40 pm IST
சபரிமலைக்கு தமிழகம் வழியாக 7 சிறப்பு ரயில்கள் இயக்கம்.. தெற்கு ரயில்வே அறிவிப்பு!
Sabarimala Special Trains | சபரிமலைக்கு ஆண்டுதோரும் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்த நிலையில், சபரிமலைக்கு செல்லும் பக்தர்களுக்கு வசதியாக தமிழகம் வழியாக 7 சிறப்பு ரயில்களை இயக்க உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
- Vinalin Sweety
- Updated on: Dec 19, 2025
- 18:40 pm IST
தொடங்கும் சபரிமலை சீசன்.. தமிழகம் வழியாக செல்லும் சிறப்பு ரயில்கள் அறிவிப்பு..
Sabarimala Special Train: சபரிமலையில் மகரஜோதி மற்றும் மண்டல பூஜைகளை முன்னிட்டு, டிசம்பர் மாதம் முதல் ஜனவரி மாதம் வரை சீசன் களைகட்டும். இதில் ஏராளமான பக்தர்கள் பல்வேறு மாநிலங்களில் இருந்து வருகை தந்து தரிசனம் மேற்கொள்வார்கள். இதன் காரணமாக, தெற்கு ரயில்வே தரப்பில் சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
- Aarthi Govindaraman
- Updated on: Dec 19, 2025
- 18:41 pm IST
சேலம், கோவை, திருப்பூர் வழியாக நின்று செல்லும் புதிய வந்தே பாரத் ரயில்.. முழு விவரம்..
Vande Bharat Train: தற்போது தமிழ்நாடு வழியாக பெங்களூருவில் இருந்து கொச்சி (எர்ணாகுளம்) நோக்கி வந்தே பாரத் ரயில் இயக்கப்பட உள்ளது. இதற்கான ஒப்புதலை ரயில்வே வாரியம் வழங்கியுள்ளது. பெங்களூருவில் இருந்து அதிகாலை 5.10 மணிக்கு புறப்பட்டு, பிற்பகல் 1.50 மணிக்கு எர்ணாகுளம் சென்றடையும்.
- Aarthi Govindaraman
- Updated on: Dec 19, 2025
- 18:42 pm IST
கிறிஸ்துமஸ், அரையாண்டு தேர்வு விடுமுறை: ரயில்களில் முன்பதிவு தொடக்கம்
கிறிஸ்துமஸ் மற்றும் அரையாண்டு விடுமுறை 2025க்கான ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கியுள்ளது. டிசம்பர் 23, 24, 25 தேதிகளுக்கான டிக்கெட்டுகளை பயணிகள் இன்று/நாளை முன்பதிவு செய்யலாம். தென் மாவட்ட ரயில்களில் டிக்கெட்டுகள் மிக வேகமாக விற்று தீர்ந்து வருகிறது. சிறப்பு ரயில்களும் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றன.
- Petchi Avudaiappan
- Updated on: Dec 19, 2025
- 18:42 pm IST