Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

புத்தாண்டு முதல் இந்த 22 ரயில்களின் வேகம் அதிகரிப்பு…. தெற்குவே ரயில்வே அறிவிப்பு

Train Speed Increased: வருகிற புத்தாண்டை முன்னிட்டு ஜனவரி 1, 2026 ஆம் ஆண்டு முதல் பொது மக்களின் பயண நேரத்தை குறைக்கும் வகையில் 22 ரயில்களின் வேகம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பயணிகளின் பயண நேரம் 85 நிமிடங்கள் வரை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புத்தாண்டு முதல் இந்த 22 ரயில்களின் வேகம் அதிகரிப்பு…. தெற்குவே ரயில்வே அறிவிப்பு
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 30 Dec 2025 21:49 PM IST

சென்னை, டிசம்பர் 30: வரும் ஜனவரி 1, 2026 புத்தாண்டு (New Year) முதல், பொதுமக்களின் பயண நேரத்தை குறைக்கும் வகையில் மெயில், விரைவு மற்றும் சூப்பர் ஃபாஸ்ட் உள்ளிட்ட 22 ரயில்களின் வேகம் அதிகரிக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதன் மூலம் பயணிகளின் பயண நேரம் 5 நிமிடங்கள் முதல் 85 நிமிடங்கள் வரை குறையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சென்னை உள்ளிட்ட பல முக்கிய நகரங்களை இணைக்கும் ரயில்களின் வேகம் உயர்த்தப்படுவதாக கூறப்பட்டுள்ளது. இந்த மாற்றம் ஜனவரி 1, 2026 முதல் அமலுக்கு வரும் என்றும், இதன் மூலம் பயணிகள் குறைந்த நேரத்தில் தங்கள் இலக்கை அடைய முடியும் என்றும் ரயில்வே தெரிவித்துள்ளது.

22 ரயில்களின் பயண வேகம் அதிகரிப்பு

அதன்படி, சென்னை சென்ட்ரல் – நாகர்கோவில் சூப்பர் ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயிலின் பயண நேரம் 20 நிமிடங்கள் குறைக்கப்பட்டுள்ளது. சென்னை சென்ட்ரல் – திருப்பதி சப்தகிரி எக்ஸ்பிரஸ் 15 நிமிடங்கள், சென்னை சென்ட்ரல் – டெல்லி கிராண்ட் ட்ரங்க் எக்ஸ்பிரஸ் 5 நிமிடங்கள், சென்னை சென்ட்ரல் – போடிநாயக்கனூர் சூப்பர் ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ் 5 நிமிடங்கள் என பயண நேரம் குறைக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க : ஓடும் ரயிலில் வெளிமாநில இளைஞர் வெட்டப்பட்ட சம்பவம்…வடக்கு மண்டல ஐஜி விளக்கம்!

மேலும், நிசாமுதீன் – சென்னை சென்ட்ரல் ராஜதானி எக்ஸ்பிரஸ் மற்றும் நிசாமுதீன் – சென்னை சென்ட்ரல் துரோந்தோ எக்ஸ்பிரஸ் ரயில்களின் பயண நேரம் தலா 10 நிமிடங்கள் குறைக்கப்பட்டுள்ளது. கோயம்புத்தூர் – சென்னை சென்ட்ரல் இன்டர்சிட்டி சூப்பர் ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ் 5 நிமிடங்கள், சென்னை எழும்பூர் – குருவாயூர் எக்ஸ்பிரஸ் 20 நிமிடங்கள், சென்னை எழும்பூர் – ராமேஸ்வரம் சேது சூப்பர் ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ் 10 நிமிடங்கள் குறைக்கப்பட்டுள்ளது.

சென்னை எழும்பூர் – செங்கோட்டை பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலின் பயண நேரம் 10 நிமிடங்கள், சென்னை எழும்பூர் – மங்களூர் சென்ட்ரல் எக்ஸ்பிரஸ் 25 நிமிடங்கள், தூத்துக்குடி – சென்னை எழும்பூர் முத்துநகர் எக்ஸ்பிரஸ் 30 நிமிடங்கள் குறைக்கப்பட்டுள்ளது. இதுபோல், ராமேஸ்வரம் – சென்னை எழும்பூர் சூப்பர் ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ், திருச்செந்தூர் – சென்னை எழும்பூர் சூப்பர் ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ் மற்றும் தாம்பரம் – மதுரை மகால் சூப்பர் ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்களின் பயண நேரம் தலா 10 நிமிடங்கள் குறைக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க : மார்கழி மாத பெளர்ணமி..திருவண்ணாமலையில் கிரிவலம் வர உகந்த நேரம் அறிவிப்பு!

தாம்பரம் – நாகர்கோவில் அந்த்யோதயா சூப்பர் ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ் 5 நிமிடங்கள், கொல்லம் – தாம்பரம் எக்ஸ்பிரஸ் 85 நிமிடங்கள் மற்றும் நாகர்கோவில் – தாம்பரம் அந்த்யோதயா எக்ஸ்பிரஸ் 45 நிமிடங்கள் குறைக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. இந்த மாற்றங்கள் மூலம், தினசரி பயணிகள், நீண்ட தூர பயணிகள் மற்றும் வேலைக்குச் செல்லும் பொதுமக்கள் பெரிதும் பயனடைவார்கள் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. பயண நேரம் குறைவதால் ரயில் சேவைகள் மேலும் வசதியானதாகவும், விரைவானதாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.