AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Valentine’s Day: பார்ட்னருடன் காதலை வலுப்படுத்த.. காதலர் தினத்தில் இப்படி சர்ப்ரைஸ் பண்ணுங்க!

Valentine's Day Surprise Ideas: மக்கள் பெரும்பாலும் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்த தயக்கம் கொள்கிறார்கள். இது பல நல்ல காதல் பிரிவதற்கும் காரணமாக அமைந்துவிடுகிறது. அதன்படி, காதலர் தினத்தன்று, உங்கள் உணர்வுகளை வெறும் வாய்மொழியாக அல்ல, இனிமையான கடிதத்திலும் வெளிப்படுத்தி காதலை வெளிப்படுத்துங்கள்.

Valentine’s Day: பார்ட்னருடன் காதலை வலுப்படுத்த.. காதலர் தினத்தில் இப்படி சர்ப்ரைஸ் பண்ணுங்க!
காதலர் தினம்Image Source: Freepik
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 14 Feb 2026 07:00 AM IST

காதலர் தினம் (Valentine’s Day) என்பது காதலிகள் மற்றும் காதலர்கள், கணவன் மனைவியர் ஆகியோருக்கு சிறப்பு வாய்ந்ததாக நாளாக பார்க்கப்படுகிறது. இந்த நாளில், காதலில் உள்ள ஜோடிகள் ஒருவருக்கொருவர் சர்பரைஸ் திட்டமிடுவதில் காதலை இன்னும் அழகாக மாற்றும். அந்தவகையில், நீங்களும் இந்த முறை உங்கள் பார்ட்னருக்கு தெரியாமல் சர்பரைஸ் (Surprise) செய்ய திட்டமிட விரும்பி, ஆனால் என்ன செய்வது என்று தெரியாமல் கவலையில் இருந்தால், கவலைப்பட வேண்டாம். உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் 5 தனித்துவமான காதலர் தின யோசனைகளை இங்கே தெரிந்து கொள்வோம்.

ALSO READ: காதலை போற்றும் காதலர் தினம்.. எப்படி உருவானது..? இதன் வரலாறு என்ன?

ரோஜாக்கள் மற்றும் ஸ்பெஷல் பரிசுகளுடன்..

காதலர் தினமான பிப்ரவரி 14ம் தேதி உங்கள் பார்ட்னருக்கு ஒரு ரோஜா பூங்கொத்து மற்றும் ஒரு ஸ்பெஷல் கிஃப்டை காலையில் எழுந்ததும் பரிசாக கொடுங்கள். உங்களுக்கு விருப்பமெனில் பரிசுகளில் ஒரு புகைப்பட சட்டகம், ஒரு காதல் கடிதம் அல்லது இருவரின் பெயர் பொறிக்கப்பட்ட ஒரு நகை ஆகியவற்றையும் சேர்த்து கொடுக்கலாம். இப்படியான பரிசை காலையில் எழுந்ததும் பார்க்கும்போது உங்கள் பார்ட்னர் முகத்தில் புன்னகையானது நிச்சயம் தவழும். இதனுடன் கட்டிப்பிடித்து உங்கள் மனதில் பட்ட விஷயங்களை கூறுங்கள்.

மதிய உணவு தயாரித்தல்:

உங்களுக்கு சமைக்கத் தெரிந்தால், காதலர் தினத்தன்று சமையலறைக்குள் புகுந்து, உங்கள் பார்ட்னருக்கு பிடித்த மதிய உணவைத் தயாரித்து கொடுங்கள். பின்னர், சமைத்தது மட்டுமின்றி முழு அன்புடன் பரிமாறுங்கள். நீங்கள் சமைத்த உணவை உங்கள் கைகளால் பரிமாறும்போது ருசியுடன், உங்கள் காதலும் அவர்களை மகிழ்விக்கும்.

நைட் டின்னர்:

வீட்டிலோ அல்லது வெளியிலோ மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் இரவு உணவைத் திட்டமிடலாம். மென்மையான இசை மற்றும் சிறப்பு அலங்காரங்கள் உங்கள் காதலர் தின மாலை நேரத்தை இன்னும் மறக்க முடியாததாக மாற்றும். இதனுடன் அவர்களுக்குப் பிடித்த உணவைப் பரிமாறும்போது, ​​அவர்களின் கையைப் பிடித்துக்கொண்டு சில இனிமையான காதல் உரையாடல்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள். மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் இரவு உணவு முடிந்த பிறகு, நல்ல திரைப்படத்திற்கு அழைத்து செல்லலாம்.

லாங் டிரைவ்:

நீங்கள் விரும்பினால் காதலர் தினந்தன்று உங்கள் பார்ட்னருடன் ஒரு சிறிய பயணம் மேற்கொள்ளலாம். அதேநேரத்தில், லாங் டிரைவ் என்றால் அது இன்னும் சிறப்பானதாக இருக்கும். உங்கள் பார்ட்னருடன் ஒரே ஹெட்போனின் இரு முனையிலும் ஒரு பாடலை ஓடவிட்டால் இன்னும் மறக்கமுடியாததாக மாற்றும். ஒன்றாகச் செலவிடும் இத்தகைய தருணங்கள் உங்கள் உறவை பலப்படுத்தும்.

ALSO READ: மகிழ்ச்சியான ஹார்மோன்களை வெளிப்படுத்தும் முத்தம்.. முத்த தினம் உருவானது எப்படி..?

சர்பரைஸ்தான் காதலை இன்னும் கூட்டும்..

மக்கள் பெரும்பாலும் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்த தயக்கம் கொள்கிறார்கள். இது பல நல்ல காதல் பிரிவதற்கும் காரணமாக அமைந்துவிடுகிறது. அதன்படி, காதலர் தினத்தன்று, உங்கள் உணர்வுகளை வெறும் வாய்மொழியாக அல்ல, இனிமையான கடிதத்திலும் வெளிப்படுத்துங்கள். இது உங்கள் எதிர்பாலினத்தவர் மீதான உங்கள் உணர்வுகளை நன்றாக வெளிப்படுத்தும் ஏனென்றால் பேசும் வார்த்தைகள் காலப்போக்கில் மறக்கப்படலாம், ஆனால் எழுதப்பட்ட காதல் கடிதம் எப்போதும் அழியா நினைவாக இருக்கும். இது வெறும் காதலர்களுக்கு மட்டுமின்றி,  கணவன்-மனைவியும் மேற்கொள்ளலாம். இன்றைய காலத்தில் பெண்கள் பெரும்பாலும் சர்பரைஸைதான் அதிகம் விரும்புகிறார்கள், எதிர்பார்க்கிறார்கள். எனவே, காதலர்கள், கணவர்கள் அதிகளவில் சர்பரைஸ் செய்து உங்கள் காதலி மற்றும் மனைவிமார்களை இம்ப்ரெஸ் செய்யுங்கள்.

Follow Us