AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

ரவி மோகனின் கராத்தே பாபு படத்தின் ரிலீஸ் எப்போது? வைரலாகும் தகவல்

Ravi Mohans Karathey Babu Release Update | நடிகர் ரவி மோகன் நடிப்பில் முன்னதாக உருவாகி பல மாதங்களாக வெளியீட்டிற்கு காத்திருக்கும் படம் கராத்தே பாபு. இந்தப் படம் திரையரங்குகளில் எப்போது வெளியாக உள்ளது என்பது குறித்த தகவல்கள் சினிமா வட்டாரங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

ரவி மோகனின் கராத்தே பாபு படத்தின் ரிலீஸ் எப்போது? வைரலாகும் தகவல்
கராத்தே பாபுImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 17 Nov 2026 20:55 PM IST

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் ரவி மோகன் (Actor Ravi Mohan). இவர் சினிமாவில் முன்னணி நாயகனாக மட்டும் இன்றி தொடர்ந்து படங்களை இயக்கவும் தயாரிப்பாளராக படங்களை தயாரிக்கவும் செய்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து தமிழ் சினிமாவில் நடிகர் ரவி மோகனின் நடிப்பில் அடுத்தடுத்தப் படங்கள் திரையரங்களில் வெளியாக வரிசையாக காத்திருக்கின்றது. அதன்படி நடிகர் ரவி மோகன் நடிப்பில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட படம் கராத்தே பாபு. இந்தப் படத்தின் போஸ்டர் வெளியான போதே படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிக அலவில் அதிகரித்தது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் படத்தை இயக்குநர் கணேஷ் கே பாபு எழுதி இயக்கி உள்ளார். ஸ்கிரீன் சீன் மீடியா எண்டர்டெய்ன்மெண்ட் இந்தப் படத்தை தயாரித்து உள்ளது.

தமிழ் நாட்டில் உள்ள ஒரு அரசியல்வாதியின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகி உள்ளது. தொடர்ந்து இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்த நிலையில் தற்போது வெளியீட்டிற்கான பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றது. இந்த நிலையில் படத்தின் வெளியீடு எப்போது இருக்கும் என்பது தொடர்பான தகவல்கள் தற்போது வெளியாகி வைரலாகி வருகின்றது.

ரவி மோகனின் கராத்தே பாபு படத்தின் ரிலீஸ் எப்போது?

ரவி மோகன் நடிக்கும் கரதே பாபு திரைப்படம், தணிக்கைக் குழு பரிந்துரைத்த சில வெட்டுகளுக்குப் பிறகு, தணிக்கை நடைமுறையை நிறைவு செய்துள்ளதாகத் தெரிகிறது. இப்படம் தற்போது வெளியீட்டிற்குத் தயாராக உள்ளது. ஆரம்பத்தில் டிசம்பர் மாதத்தில் வெளியிடத் திட்டமிட்டிருந்த படக்குழுவினர், தற்போது பிப்ரவரி 2027-ல், காதலர் தின வாரத்தை முன்னிட்டு படத்தை வெளியிட ஆலோசித்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Also Read… டிக்கெட் டூ ஃபினாலே பில்டப் வீக்.. ஆப்ரேஷன் ரெஸ்கியூ டாஸ்கில் அதிரடியாக பிக் பாஸ் வீடு!

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… ரிலீஸிற்கு மூன்று நாட்களே உள்ள ஓ.எம் படம்… புதிய போஸ்டரை வெளியிட்ட படக்குழு!

Follow Us