அக்லி கேம்… பிக்பாஸில் டிடிஎஃப் வாசனின் கோபத்தை தூண்டும் முனியம்மாள் – வைரலாகும் வீடியோ!
Bigg Boss Tamil Season 10 | பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் தற்போது 10 வாரங்கள் முடிவடைந்து 11-வது வாரத்தை எட்டிய்யுள்ளது. இந்த வாரம் வீட்டில் உள்ள போட்டியாளர்களிடையே போட்டியும் அதிக அளவில் அதிகரித்துள்ளது இந்த வார எபிசோடைப் பார்க்கும் போதே தெரிகின்றது.
தமிழ் சின்னத்திரையில் ரசிகர்களிடையே அதிக அளவில் வரவேற்பைப் பெற்று வரும் நிகழ்ச்சியாக உள்ளது பிக்பாஸ் தமிழ் (Bigg Bos Tamil Season 10). இந்த நிகழ்ச்சி தமிழ் மொழியில் கடந்த 2017-ம் ஆண்டு தொடங்கியது. தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக எந்த பிரபலம் வருவார்கள் என்பதை எதிர்பார்த்து மக்கள் காத்திருப்பது வழக்கமான ஒன்று. ஒவ்வொரு சீசனிலும் மக்களுக்கு மிகவும் பிடித்த நபர் ஒருவர் இருப்பார் அந்த நபரைப் பார்த்தாலே எனக்குப் பிடிக்காது என்று சொல்லும் அளவிற்கும் ஒருவர் இருப்பார். ஆனால் இந்த பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் பிரபலங்கள் மட்டும் இன்றி பொது மக்களுக்காக நடத்தப்பட்ட காமென் மேன் நிகழ்ச்சியில் இருந்து மொத்தம் 5 நபர்கள் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு போட்டியாளர்களாக வந்தனர். அந்த வகையில் இந்த பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் பிரபலங்கள் மட்டும் இன்றி பொது மக்களும் போட்டியாளர்களாக கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இந்த பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் உள்ள போட்டியாளர்களுக்கும் பெரிய அளவில் ஒருவருக்கொருவர் நட்பு என்பது கிடையவே இல்லை. மேலும் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒருவர் மற்றொருவருடன் நட்பு பாராட்டுவதே அவர்களுக்கு ஏதேனும் பயன் இருந்தால் மட்டுமே செய்து வருகின்றனர்.




பிக்பாஸில் டிடிஎஃப் வாசனின் கோபத்தை தூண்டும் முனியம்மாள்:
இந்த நிலையில் இந்த பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் டிக்கெட் டூ ஃபினாலே டாஸ்க் இந்த வாரம் நடைபெறுகின்றது. அது தொடர்பான வீடியோ முன்னதாக வெளியானது. இந்த நிலையில் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் உள்ள போட்டியாளர் முனியம்மாள் தொடர்ந்து டிடிஎஃப் வாசனிடம் சண்டையிட்டு வருகிறார். மேலும் வாசனின் கோபத்தை தூண்டும் விதமாக தொடர்ந்து பேசி வருகிறார். அது தொடர்பான வீடியோ தொடர்ந்து வெளியாகி வருவது குறிப்பிடத்தக்கது.’
Also Read… இந்தக் கனவுக்கு வானமே எல்லை அல்ல… வெளியானது துல்கர் சல்மானின் ஆகாசம்லோ ஓகா தாரா படத்தின் ட்ரெய்லர்!
பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சி குழு வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவு:
#Day72 #Promo3 of #BiggBossTamil
Bigg Boss Tamil Season 10 – இன்று இரவு 9:30 மணிக்கு.. நம்ம விஜய் டிவில..
#BiggBossTamilSeason10 #Ottikichi #VijaySethupathi #CarniVizha #BiggBossSeason10Tamil #BiggBoss10 #BiggBossSeason10 #BiggBossTamilBB10 #VijayTV #VijayTelevision https://t.co/5t5FX58Mwx
— Vijay Television (@vijaytelevision) November 17, 2026
Also Read… பிக்பாஸில் தர்பூசணியால் போட்டியாளர்களிடையே வெடித்த சண்டை… வைரலாகும் வீடியோ!