AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

இதெல்லாம் ஒரு Role- ஆ? ஓ.எம் படத்தில் நடித்தது குறித்து மம்முட்டி பகிர்ந்த சம்பவம்!

Mamootty About O.M Movie: தென்னிந்திய சினிமாவில் முன்னணி ஸ்டார் நடிகராக இருந்துவருபவர் மம்முட்டி. இவர் பல ஆண்டுகளுக்கு பிறகு தமிழில் நடித்துள்ள புதிய திரைப்படம்தான் ஓ.எம். இப்படத்தில் இவர் வில்லன் போன்ற வேடத்தில் நடித்துள்ள நிலையில், இப்படத்தில் நடித்த அனுபவம் குறித்து நகைச்சுவையாக பகிர்ந்துள்ளார்.

இதெல்லாம் ஒரு Role- ஆ? ஓ.எம் படத்தில் நடித்தது குறித்து மம்முட்டி பகிர்ந்த சம்பவம்!
மம்முட்டி Image Source: Social Media
Barath Murugan
Barath Murugan | Published: 15 Nov 2026 17:33 PM IST

மலையாள திரையுலகில் ரசிகர்கள் கொண்டாடும் நாயகனாக இருந்துவருபவர் மெகாஸ்டார் மம்முட்டி (Actor Mammootty). இவரின் நடிப்பில் தமிழ் சினிமாவில் பல படங்கள் வெளியாகியுள்ளது. இவர் இறுதியாக தமிழில் இயக்குநர் ராம் இயக்கத்தில், பேரன்பு (Peranbu) என்ற திரைப்படத்தில் நாயகனாக நடித்திருந்தார். அந்த படம் வெளியாகி சிறப்பான வரவேற்பை பெற்றிருந்தது. இந்த படத்திற்கு பிறகு கிட்டத்தட்ட 6 கழித்து மீண்டும் இவர் தமிழில் நடித்துள்ள திரைப்படம்தான் ஓ.எம் (O.M Movie). இந்த படத்தை அமரன் பட இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி (Director Rajkumar Periasamy) இயக்க, நடிகர் மம்முட்டி வில்லன் போன்ற வேடத்தில் நடித்துள்ளார். இதில் அவர் கார்த்திகேயன் (சியா) என்ற வேடத்தில் நடித்துள்ளார்.

இப்படத்தில் தனுஷ் அதிரடி ஆக்ஷன் நாயகனாக நடித்துள்ள நிலையில், படத்தின் மீதான எதிர்பார்ப்புகள் அதிகமாக உள்ளது. சமீபத்தில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றிருந்தது. அதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட நடிகர் மம்முட்டி, அதில் ஓ.எம் படத்தில் நடித்த அனுபவம் குறித்து சுவாரஸ்யமாகவும், நகைச்சுவையாகவும் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: ஜேசன் Vs விஜய் சேதுபதி.. பிக் பாஸில் விஜய் சேதுபதி மற்றும் ஆடியன்ஸிடம் திமிரு காட்டிய ஜேசன் – தீயாய் பரவும் ப்ரோமோ!

ஓ.எம் திரைப்படத்தில் நடித்தது குறித்து வெளிப்படையாக பேசிய மம்முட்டி:

அந்த நிகழ்ச்சியின் மேடையில் பேசிய மலையாள ஸ்டார் மம்முட்டி, அதில் “எனக்கு இந்த படத்தில் ஒரு குடும்பம் இருக்கிறது. ஒரு அம்மா எனக்கு மனைவி வேடத்தில் நடித்திருந்தார். அவர் இந்த விழாவிற்கு வரவில்லை என நினைக்கிறேன். அவரும் நானும் ஒருமுறை பேசும்போது, நமக்கு இப்படத்தில் ஒரு பேரன் இருந்தால் கூட அவரிடம் பேசிக்கொண்டு இருக்கலாம், ஆனால் ஆளே இல்ல என கூறினேன். அப்பறம் இந்த படத்தில் எனது அடியாளாக இருவர் நடித்துள்ளனர். கணேசா, தாண்டியப்பா. மெயினாக இருக்கும் கதாபாத்திரம் எல்லாமே வந்துருக்கு.

இதையும் படிங்க: முற்றிலும் மாறுபட்டது…. ஓ.எம் படத்தில் ஸ்ரீலீலாவின் கதாபாத்திரம் எப்படி இருக்கும்? – ராஜ்குமார் பெரியசாமி பேச்சு!

இந்த படத்தில் கணேசா, தாண்டியப்பா என கூப்பிடுவதுதான் எனது வேலையே. எல்லாந் காட்சியிலும் கணேசா, தாண்டியப்பானு கூப்டுட்டே இருக்கனும், வேற எந்த டயலாக்கும் இல்லை எனக்கு. அப்பறம், திரு வாடா இங்க.. திரு போடா அங்க அவ்வளவுதான். திரு அவனை அடிச்சிடுவாடா.. இவானா அடிச்சிடுவாடா. இதெல்லாம் ஒரு ரோலா? கேரக்டரா?. இந்த ஆறு மாதமாக அதைத்தான் பண்ணிக்கிட்டு இருந்தேன். காலையில் வண்டி எடுத்துக்கொண்டு ஷாப்பிங் போகணும் அவ்ளோதான். இதை நான் உண்மையிலே விளையாட்டுக்கு சொல்கிறேன்” என நகைச்சுவையாக பேசியிருந்தார்.

ஓ.எம் திரைப்படத்தில் நடித்தது குறித்து மம்முட்டி பேசிய வீடியோ பதிவு:

கிட்டத்தட்ட 6 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் மம்முட்டி தமிழில் நடித்துள்ள படம் ஓ.எம். இந்த படத்தில் தனுஷ் ஹீரோவாக நடிக்க, அவருடன் மிக முக்கியமான வேடத்தில் மம்முட்டி நடித்துள்ளார். இந்த படமானது பான் இந்திய மொழிகளில் வரும் 2026 நவம்பர் 20ம் தேதியில் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us