அனிருத் செய்த அந்த உதவி… நெகிழ்ந்து பேசிய இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி!
RJ Balaji talks about Anirudh | தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநராக வலம் வருபவர் இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி. தொடர்ந்து படங்களில் இயக்குநராக மட்டும் இன்றி நாயகனாகவும் வலம் வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சமீபத்தில் இசையமைப்பாளர் அனிருத் குறித்து பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக அறிமுகம் ஆகி தொடர்ந்து நாயகனாகவும், இயக்குநராகவும் தன்னை உயர்த்திக் கொண்டவர் ஆர்.ஜே.பாலாஜி (RJ Balaji). இவரது இயக்கத்திலும் நடிப்பிலும் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து பிசியான இயக்குநராக வலம் வரும் இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி தான் நடிக்கும் படங்களை மட்டுமே முதலில் இயக்கி வந்தார். மேலும் மற்ற இயக்குநர்களின் படங்களிலும் அவர் நாயகனாக நடித்து உள்ளார். அவர் வேறு ஒரு நாயகனை வைத்து படத்தை இயக்கியது கருப்பு படத்தில் தான். இந்த கருப்பு படத்தில் நடிகர் சூர்யா நாயகனாக நடித்து இருந்தார். சூர்யாவின் 45-வது படமாக அமைந்து. மேலும் சூர்யாவின் கெரியரில் அதிக வசூல் செய்த படமாக இது மாறியதும் குறிப்பிடத்தக்கது.
இந்தப் படத்தை தொடர்ந்து இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி தமிழ் சினிமாவில் கமெர்ஷியல் ஹிட் கொடுக்கும் இயக்குநராக மாறினார் என்பது குறிப்பிடத்தக்கது. திறமையும் கடின உழைப்பும் இருந்தால் ஒரு நபர் எந்த உயரத்திற்கும் செல்ல முடியும் என்பதற்கான எடுத்துக்காட்டுகளில் ஒன்றாக இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி தற்போது மாறி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அனிருத் செய்த அந்த உதவி… நெகிழ்ந்து பேசிய ஆர்.ஜே.பாலாஜி:
இந்த நிலையில் இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி சமீபத்தில் அளித்தப் பேட்டி ஒன்றில் இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் குறித்து நெகழ்ச்சியான சம்பவத்தை வெளிப்படையாக தெரிவித்துள்ளார். அது தற்போது இணையத்தில் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது. அதன்படி இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி பேசியதாவது, முன்பு ஆக்கோ என்ற படத்தில் நானும் இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தரும் இணைந்து நடிப்பதாக இருந்தது.




அந்தப் படத்திற்கான தயாரிப்பாளர் அந்த காலகட்டத்தில் எனக்கு ரூபாய் 2 லட்சம் முன்பணமாக கொடுத்து இருந்தார். அந்தப் பணத்தை வைத்து எனது மகனின் பிறந்த நாளை மிகவும் சிறப்பாக கொண்டாடினேன். அதன்பிறகு அனிருத் அந்தப் படத்தில் நடிக்கமாட்டேன் என்று விலகிவிட்டார். அதன்பிறகு அந்த முன்பணத்தை கொடுக்க வேண்டும் என்பதற்காக பல வேலைகளை செய்து ரூபாய் 1 லட்சத்தை சேர்த்து தயாரிப்பாளரிடம் முதலில் கொண்டு கொடுத்துவிடலாம் என்று சென்றேன்.
அபோது தயாரிப்பாளர் அந்த முன்பணம் இரண்டு லட்சத்தையும் முன்பே அனிருத் கொடுத்துவிட்டதாகவும் அந்தப் பணத்தை பாலாஜியிடம் கேட்கக் கூடாது என்று அனிருத் கூறியதாகவும் தயாரிப்பாளர் கூறினார். உடனே நான் அனிருத்திற்கு கால் செய்து கேட்டேன். அவர் அந்த 2 லட்சம் உங்க பையன் பர்த்டே கிஃப்ட் என்று கூறினார் என ஆர்.ஜே.பாலாஜி நெகிழ்ச்சியாக பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.