AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

தர்மன் படத்தில் இத்தனை நாயகிகள் எதற்கு? இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து சொன்ன விசயம்

Ashwath Marimuthu about heroines in Dharman movie | தமிழ் சினிமாவில் இயக்குநர் அஸ்வத் மாரித்து இயக்கத்தில் தற்போது உருவாகி வரும் படம் தர்மன். இந்தப் படத்தில் பல நாயகிகள் இருக்க என்ன காரணம் என்பது குறித்து இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து வெளிப்படையாக பேசி வருகிறார்.

தர்மன் படத்தில் இத்தனை நாயகிகள் எதற்கு? இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து சொன்ன விசயம்
தர்மன்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 14 Nov 2026 11:38 AM IST

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநராக வலம் வருபவர் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து (Ashwath Marimuthu). இவரது இயக்கத்தில் தமிழ் சினிமாவில் இதுவரை இரண்டு படங்கள் மட்டுமே வெளியாகி இருந்தாலும் இவர் தமிழ் சினிமாவில் ரசிகர்களிடையே அதிக அளவில் வரவேற்பைப் பெறும் இயக்குநராக வலம் வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன்படி இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து எழுதி இயக்கி தமிழ் சினிமாவில் முன்னதாக வெளியான ஓ மை கடவுளே மற்றும் டிராகன் என இரண்டு படங்களும் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தை தொடர்ந்து இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து எழுதி இயக்கி வரும் படம் தர்மன். இந்தப் படத்தில் நடிகர் ரஜினிகாந்த் நாயகனாக நடித்து வரும் நிலையில் அவருடன் இணைந்து நடிகைகள் பலர் முக்கிய வேடத்தில் நடித்து வருகின்றனர்.

மேலும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் பூஜையுடன் தொடங்கிய நிலையில் தற்போது விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றது. இதில் நடிகர் ரஜினிகாந்த் உடன் இணைந்து நடிகைகள் சிம்ரன், ராஷி கண்ணா, நயன்தாரா மற்றும் ஸ்ரீலீலா என இத்தனை நடிகைகள் நடிக்க என்ன காரணம் என்று அஸ்வத் மாரிமுத்து பேசியுள்ளார்.

தர்மன் படத்தில் இத்தனை நாயகிகள் எதற்கு?

அதன்படி நடிகரும் யூடியூபருமான சித்ரா லக்‌ஷ்மனிடம் அஸ்வத் மாரிமுத்து பேசியதாவது, படத்தைப் பாருங்கள் சார், நீங்கள் மெய்சிலிர்த்துப் போவீர்கள். ஒவ்வொரு நாயகி கதாபாத்திரத்திற்குப் பின்னாலும் ஒரு வலுவான கதை இருக்கிறது. அவற்றை நான் மிகச் சிறப்பாக எழுதியிருக்கிறேன். மேலும், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் ஒத்துழைப்பு எதிர்பாராத விதமாகவும், வியக்கத்தக்க வகையிலும் இருந்ததாக அவர் குறிப்பிட்டார்.

அவர் காலை 9 மணிக்கு படப்பிடிப்பு தளத்திற்கு வந்து, இரவு 10 மணி வரை தொடர்ந்து நடிக்கிறார். ‘நீங்கள் கிளம்புங்கள், மீதமுள்ள காட்சிகளை நாளை படமாக்கிக்கொள்ளலாம்’ என்று நான் பலமுறை அவரிடம் கூறினேன், ஆனால் அவர் கேட்கவில்லை. இத்தகைய பண்பை நாம் அவரிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும். இது குறித்து நான் ரஜினிகாந்த் அவர்களைச் சந்தித்துக் கேட்டபோது, ​​அவர், எப்படியிருந்தாலும் நான்தானே நடிக்க வேண்டும்; இன்றைக்கு எடுத்தால் என்ன, நாளைக்கு எடுத்தால் என்ன? என்று பதிலளித்தார்.

Also Read… யோகி பாபுவின் அன் ஆர்டினரி மேன் படத்திலிருந்து வெளியானது 2-வது சிங்கிள்!

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… தேதி குறிச்சாச்சு… நாளை வெளியாகிறது தனுஷின் ஓம் படத்தின் ட்ரெய்லர் – வெளியானது அப்டேட்!

Follow Us