Ajith Kumar: சர்ப்ரைஸ் ஸ்கூல் பிக்கப்.. ஷாலினி பகிர்ந்து அஜித் குமாரின் போட்டோ!
Shalini Ajith Kumar Instagram Post: தென்னிந்திய சினிமாவில் மக்களிடையே அதிகமாக போற்றப்படும் நடிகர்களில் ஒருவராக இருந்துவருபவர் அஜித் குமார். இவருக்கு ஒரு மகள் மற்றும் ஒரு மகன் இருக்கிறார்கள். இவர் தனது மகன் ஆத்விக்கை சர்ப்ரைஸாக பள்ளியிருந்து பிக்கப் செய்த எமோஷனல் புகைப்படத்தை ஷாலினி அஜித் குமார் பகிர்ந்துள்ளார்.
தமிழில் ரசிகர்கள் அதிகம் கொண்டாடும் நாயகனாக இருந்துவருபவர் தல அஜித் குமார் (Ajith Kumar). இவர் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்துவருகிறார். இவரின் நடிப்பில் தமிழ் சினிமாவில் இதுவரை கிட்டத்தட்ட 63 படங்கள் வெளியாகியுள்ளது. மேலும் இறுதியாக இவரின் நடிப்பில் வெளியான திரைப்படம் குட் பேட் அக்லி (Good Bad Ugly). இந்த திரைப்படமானது கடந்த 2026ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் வெளியாகியிருந்த நிலையில், மிக பிரம்மாண்டமான வரவேற்பை பெற்றிருந்தது. இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு, மீண்டும் அஜித் மற்றும் ஆதிக் ரவிச்சந்திரனின் (Director Adhik Ravichandran) கூட்டணி டேர் டெவில் என்ற திரைப்படத்தில் இணைந்துள்ளது. மேலும் அஜித் குமார் கார் ரேஸ் போட்டிகளில் பிசியாக இருந்துவந்த நிலையில், தற்போது டேர் டெவில் (Dare Devil Movie) படத்திற்காக சென்னை திரும்பியுள்ளார்.
சென்னை திரும்பிய அஜித் குமார், தனது மகன் ஆத்விக்கை சர்ப்ரைஸாக பள்ளியிலிருந்து பிக்கப் செய்தது தொடர்பான புகைப்படத்தை நடிகை ஷாலினி அஜித் குமார் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த போட்டோ தற்போது இணையத்தில் வைரலாகப் பரவிவருகிறது.




இதையும் படிங்க: ஜேசனின் கேம் பிளே இதான்.. ஜேசனை கேம் தந்திரம் குறித்து பேசிய LP – வினோத் பாபு – ப்ரோமோ!
அஜித் தனது மகனுடன் இருக்கும் இன்ஸ்டாகிராம் போட்டோவை பகிர்ந்து ஷாலினி அஜித் குமார்:
View this post on Instagram
இந்த புகைப்படத்தில் நடிகர் அஜித் குமார், தனது 2வது மகனான ஆத்விக்கை இருக்க கட்டி அனைத்து இருக்கும்படி உள்ளது. தந்தை மற்றும் மகனின் பாசம் தொடர்பாக இந்த புகைப்படமானது இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகப் பரவிவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
அஜித் குமாரின் கிளாடியேட்டர்ஸ் ஆவணப்பட ரிலீஸ் எப்போது:
நடிகர் அஜித் குமார் கிட்டத்தட்ட 2 ஆண்டுகளாக கார் ரேஸ் பயிற்சி மற்றும் போட்டிகளில் சிறப்பாக பங்குபெற்றுவந்தார்கள். இவரின் கார் ரேஸ் போட்டிகள் மற்றும் பயிற்சிகள் எல்லாமே ஆவணப்படமாக உருவாக்கப்பட்டுள்ள நிலையில், இதை அஜித் தனது சொந்த தயாரிப்பில் உருவாக்கியுள்ளாராம். இந்த படத்தை இயக்குநர் ஏ.எல்.விஜய் இயக்க, இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.
இதையும் படிங்க: என் கணவர் அதை பற்றி கவலைப்பட்டதே இல்லை – கியாரா அத்வானி பகிர்ந்த விஷயம்!
இந்த ஆவணப்படமானது அஜித்தின் ரேஸ் வாழ்க்கை, சினிமா வாழ்க்கையை பற்றியதாக இருக்கும் என கூறப்படுகிறது. இதில் முதல்வர் விஜய், அஜித் குமார் நேரில் சந்தித்த காட்சிகளும் இடம்பெறும் என கூறப்படுகிறது. இந்த ஆவணப்படமானது சிறப்பாக தயாராகியுள்ள நிலையில், 2027ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியிட திட்டமிடப்பட்டுவருகிறதாம். இது உண்மையானால் விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.