AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

இது ராம யுகம்.. முதல் வாரத்தின் முடிவில் உலகமெங்கும் ராமாயணா படம் வசூல் எவ்வளவு தெரியுமா?

Ramayana Part 1 Box Office Record: ஒட்டுமொத்த பான் இந்திய சினிமாவில் 2026ம் ஆண்டில் அதிகம் எதிர்பார்த்து காத்திருந்த திரைப்படம்தான் ராமாயணா பார்ட் 1. இந்த படம் தீபாவளியை முன்னிட்டு 2026 நவம்பர் 6ம் தேதியில் வெளியானது. இந்த படம் வெளியாகி கிட்டத்தட்ட ஒரு வாரத்தை கடந்துள்ள நிலையில், இதன் உலகளாவிய வசூல் எத்தனை கோடிகள் என படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இது ராம யுகம்.. முதல் வாரத்தின் முடிவில் உலகமெங்கும் ராமாயணா படம் வசூல் எவ்வளவு தெரியுமா?
ராமாயணம்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 13 Nov 2026 11:16 AM IST

பாலிவுட் சினிமாவில் இந்த 2026ம் ஆண்டில் மிகவும் பிரம்மாண்டமாக, உலக தர படைப்பாக உருவாக்கப்பட்டிருந்த திரைப்படம்தான் ராமாயணா பார்ட் 1 (Ramayana: Part 1). இந்த திரைப்படமானது கடந்த 2026ம் ஆண்டு நவம்பர் 6ம் தேதியில் உலகமெங்கும் வெளியிடப்பட்டிருந்தது. இந்த படத்தில் ரன்பீர் கபூர் (Ranbir Kapoor), சாய் பல்லவி (Sai Pallavi), யாஷ் (Yash) மற்றும் ரவி துபே உள்ளிட்ட பல்வேறு நட்சத்திர நடிகர்களும் இணைந்து நடித்திருந்தனர். இப்படத்தை இந்தி மொழி இயக்குநர் நிதேஷ் திவாரி (Nitesh Tiwari) இயக்கியிருந்த நிலையில், நமித் மல்ஹோத்ரா மிகவும் பிரம்மாண்டமாக தயாரித்திருந்தார். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் (AR. Rahman) மற்றும் ஹான்ஸ் ஜிம்மர் (Hans Zimmer) என இருவரும் இணைந்து இசையமைத்திருந்தார்.

இந்த படமானது பான் இந்திய மொழிகளில் சிறப்பாக வெளியிடப்பட்டிருந்தது. இப்படம் வெளியாகி இன்றுடன் (13/11/2026) கிட்டத்தட்ட 7 நாட்களை கடந்திருக்கும் நிலையில், உலகளாவிய வசூலில் மொத்தம் எவ்வளவு கலெக்ஷன்ஸ் செய்துள்ளது என படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இதையும் படிங்க: யாருமே ஒழுங்கு இல்ல.. பிக் பாஸில் மற்றவர்களின் குறையை கூறிய போட்டியாளர்கள் – ப்ரோமோ இதோ!

7 நாட்கள் முடிவில் ராமாயணா பார்ட் 1 படத்தின் வசூல் விவரம்:

இந்த ராமாயணா திரைப்படமானது, இந்துக்களில் காவியமான இராமாயணத்தின் கதைக்களத்தை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டிருந்தது. இதில் ஸ்ரீ ராமராக ரன்பீர் கபூரும், சீதா தேவியக்க சாய் பல்லவியும் மற்றும் ராவணனாக யாஷ் என பிரம்மாண்ட நடிகர்கள் இப்படத்தில் இணைந்து நடித்திருந்தனர்.

இதையும் படிங்க: தனுஷின் 57-வது படத்தின் ஷூட்டிங் எப்போது தொடங்கும்? வைரலாகும் தகவல்

மேலும் இப்படத்தில் காஜல் அகர்வால், ஷோபனா என பல்வேறு நடிகர்களும் இணைந்து பணியாற்றியிருந்தனர். இந்த படமானது வெளியாகி கிட்டத்தட்ட ஒரு வாரத்தை கடந்துள்ள நிலையில், இதுவரை உலகமெங்கும் சுமார் ரூ 1000 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

ராமாயணா திரைப்படத்தின் வசூல் குறித்து படக்குழு வெளியிட்ட அறிவிப்பு பதிவு:

ராமாயணா திரைப்படமானது கிட்டத்தட்ட ரூ 4000 கோடி பதில் உருவாக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. இந்த படமானது 2 பாகங்களாக உருவாக்கப்பட்டுள்ள நிலையில், முதல் பாகமானது இந்த 2026ம் ஆண்டு தீபாவளியை முன்னிட்டு வெளியாகியிருந்தது. மேலும் 2வது பாகம் 2027ம் ஆண்டு தீபாவளிக்கு வெளியாக தயாராகிவருகிறது. இந்த பாகம் 2 முழுவதும் ராவணன் மற்றும் ராமரின் போர் குறித்த கதைக்களத்தில் இருக்கும் என கூறப்படுகிறது. இப்படமும் மக்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பை பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow Us