யாருமே ஒழுங்கு இல்ல.. பிக் பாஸில் மற்றவர்களின் குறையை கூறிய போட்டியாளர்கள் – ப்ரோமோ இதோ!
Bigg Boss Tamil Season 10: தமிழில் பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியானது சிறப்பாக ஒளிபரப்பாகிவருகிறது. இந்த நிகழ்ச்சியானது 10வது வாரத்தின் முடிவில் உள்ளது. இந்நிலையில், இன்று (13/11/2026) வெளியான முதல் ப்ரோமோவில், போட்டியாளர்கள் அனைவரும் ஷாக் போட்டியாளர்களின் குறையை கூறி அவர்களுக்கு ஏற்ற பொருளை கொடுக்கவேண்டும் என்பது போல காட்டப்பட்டுள்ளது.
பிக் பாஸ் சீசன் 10 (Bigg Boss Season 10) நிகழ்ச்சியானது கடந்த 2026 ஆண்டு செப்டம்பர் 6ம் தேதியில், தமிழில் மிகவும் பிரம்மாண்டமாக ஆரம்பித்தது. இந்த நிகழ்ச்சியை நடிகர் விஜய் சேதுபதி (Vijay Sethupathi) தொகுப்பாளராக தொகுத்துவரும் நிலையில், சிறப்பாக நடத்திவருகிறார். பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சி மொத்தம் 19 போட்டியாளர்களுடன் ஆரம்பமான நிலையில், தற்போது வெறும் 12 போட்டியாளர்கள் மட்டுமே மீதம் உள்ளனர். இந்த போட்டியானது இந்த வாரத்தில் ஓரளவு இருந்தது என கூறலாம். பிக் பாஸ் குரல் இந்த வாரத்தில் கேட்கவே என்ற நிலையில், ஜூனியர் பிக் பாஸாக (Junior Bigg Boss Task) போட்டியாளர்கள் டாஸ்கள் ஈடுபட்டிருந்தனர். அதனால் சுமாராகவே இந்த வாரம் அமைந்தது.
மேலும் இந்த வாரத்தில் ஜேசனால் இந்த வீட்டில் பல குளறுபடிகளும் நடந்தது. இந்நிலையில், இந்த வாரத்தில் யார் மோசமான போட்டியாளர்கள் என்ற தேர்வில், ஜேசன் மற்றும் முனியம்மாளை சக போட்டியாளர்கள் கூறியுள்ளனர். அது தொடர்பான ப்ரோமோ வெளியாகி இணையத்தில் வைரலாகிவருகிறது.




இதையும் படிங்க: சுயமரியாதை திருமணம் செய்த அனிருத் – காவியா மாறன்.. உறுதி செய்த முன்னாள் அமைச்சர்..
பிக் பாஸில் மோசமான போட்டியாளர்களை தேர்ந்தெடுத்த சக போட்டியாளர்கள்:
இந்த ப்ரோமோவில், முதலில் டிடிஃஎப் வாசன் எழுந்து, முனியம்மாளின் வாய் கட்டுப்பாடு மற்றும் அவரின் பேச்சு குறித்து பேசி அவருக்கு டேப் வாயால் ஓட்டுவதற்கு கொடுத்திருந்தார். மேலும் சாதிகாவும் எழுந்து முனியம்மாளை குறிப்பிட்டு பேசி டேப் கொடுத்திருந்தார். முனியம்மாள் வந்து, ஜேசன் ஒவ்வொரு விஷயமும் பேசிவிட்டு அது இல்லை என கூறுகிறார் என அவருக்கு டேப்பை வாயில் ஒட்டிக்கொள்ள கொடுத்திருந்தார்.
இதையும் படிங்க: தல-யின் தீபாவளி.. அஜித் குமார் – ஷாலினி அஜித் குமாரின் தீபாவளி கிளிக்!
மேலும் எழுந்த முத்தழகி, சாதிகாவை சாடிப் பேசியிருந்தார். இதன் பிறகு வந்த தன்யா மற்றும் வினோத் பாபு இருவருமே ஜேசன் மொத்தமான போட்டியிலர் என்பது குறித்து கூறியபடி அவருக்கு வாத்து பொம்மையை கொடுத்திருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியின் 68வது நாளின் முதல் ப்ரோமோ குறித்த எக்ஸ் பதிவு:
#Day68 #Promo1 of #BiggBossTamil
Bigg Boss Tamil Season 10 – இன்று இரவு 9:30 மணிக்கு.. நம்ம விஜய் டிவில.. #BiggBossTamilSeason10 #Ottikichi #VijaySethupathi #CarniVizha #BiggBossSeason10Tamil #BiggBoss10 #BiggBossSeason10 #BiggBossTamilBB10 #VijayTV #VijayTelevision https://t.co/EKkjZCrEBM
— Vijay Television (@vijaytelevision) November 13, 2026
இந்த வாரத்தில் நிஜ பிக் பாஸின் குரல் இந்த வீட்டில் கேட்காத நிலையில், ஜூனியர் பிக் பாஸாக சக போட்டியாளர்கள் இருந்தனர். அதனால் இந்த வாரத்தில் டாஸ்குகள் எதுவுமே பெரிதாக சுவாரஸ்யமாக இல்லை என கூறலாம். கடந்த வாரம் வரைக்கும் ஒவ்வொரு டாஸ்க்கும் சிறப்பாக இருந்த நிலையில், இந்த வாரத்தில் அந்த அளவுக்கு எதுவும் இல்லை என ரசிகர்கள் தெரிவித்துவருகிறார்கள். இந்த வாரத்தின் இறுதியில் நிகழ்ச்சிக்கு வரும் விஜய் சேதுபதி, இது குறித்து எல்லாம் கேள்விகளை எழுப்புவாரா என ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.