AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

என்ன நடக்குது?? மாற்றி மாற்றி பேசும் LP – சாதிகா… தன்யாவிடம் புலம்பிய முத்தழகி!

igg Boss Tamil 10 Day 67: தமிழில் பிரபலமான ரியாலிட்டி ஷோவாக இருந்துவருவது பிக் பாஸ் சீசன் 10. இந்த நிகழ்ச்சியானது தற்போது 10வது வாரத்தின் இறுதியில் உள்ளது. இந்த வீட்டில் தற்போது ஜூனியர் பிக் பாஸாக அன்சர் இருக்கும் நிலையில், அவரிடம் மாற்றி மாற்றி பேசும் சாதிகா குறித்து முத்தழகி மற்றும் தன்யா பேசும் ப்ரோமோ வெளியாகி இணையத்தில் வைரலாகிவருகிறது.

என்ன நடக்குது?? மாற்றி மாற்றி பேசும் LP – சாதிகா… தன்யாவிடம் புலம்பிய முத்தழகி!
பிக் பாஸ் சீசன் 10 ப்ரோமோImage Source: Social Media
Barath Murugan
Barath Murugan | Published: 12 Nov 2026 19:33 PM IST

தமிழில் மக்கள் மத்தியில் அதிகமாக ஈர்க்கப்பட்டுவரும் ரியாலிட்டி நிகழ்ச்சியில் ஒன்றாக இருந்துவருவதுதான் பிக் பாஸ் சீசன் 10 (Bigg Boss Season 10). இந்த நிகழ்ச்சி கடந்த 2026ம் ஆண்டு செப்டம்பர் 6ம் தேதில், மொத்தம் நான்கு மொழிகளிலும் ஒரே நேரத்தில் தொடங்கியிருந்தது. இந்த நிகழ்ச்சியை தமிழில் விஜய் சேதுபதி தொகுத்துவரும் நிலையில், சிறப்பாக போட்டியாளர்களை வழி நடத்திவருகிறார். இந்த நிகழ்ச்சியானது தொடங்கி கிட்டத்தட்ட 67வது நாளை கடந்துள்ள நிலையில், சிறப்பாக நடைபெற்றுவருகிறது. இந்த வாரத்தில் ஜூனியர் பிக் பாஸாக (Junior Bigg Boss) டாஸ்கானது நடந்துவருகிறது. அந்த விதத்தில் வினோத் பாபு முதல் ஜூனியர் பிக் பாஸாக இருந்தார்.

அதன் பிறகு முனியம்மாள் இருந்த நிலையில், தற்போது மூன்றாவது ஜூனியர் பிக் பாஸாக அன்சர் இருக்கிறார். இவரை மாற்றவேண்டும் என தன்யா கூறியிருந்த நிலையில், சாதிகா அன்சரை ஜூனியர் பிக் பாஸ் பதவியிலிருந்து விலகவேண்டாம் என கூறியிருந்தார். அதனால் தன்யா மற்றும் முத்தழகி பேசும் ப்ரோமோ இணையத்தில் வைரலாகிவருகிறது.

இதையும் படிங்க: ஓ பெண்ணே பெண்ணே… அனிருத் – காவியா மாறனின் கிரீஸ் திருமண போட்டோ கிளிக்ஸ்!

மாற்றி மாற்றி பேசும் சாதிகாவால் காண்டான தன்யா – முத்தழகி:

இந்த ப்ரோமோவில், முத்தழகி சாதிகா குறித்து பேசியிருந்தார். அவர் தன்யாவிடம், முத்தழகி, “சாதிகா, நான் மற்றும் லக்ஷ்மி பிரியா மூன்றுபேரும் நேற்று இரவு அன்சரின் ஜூனியர் பிக் பாஸ் பதிவி குறித்து நிறை குறைகளை பேசியிருந்தோம். ஆனால் இன்று சாதிகா, பிளாஸ்மா டிவி முன்பு அதுவும் நடக்காத மாதிரியே பேசியுள்ளார்.

இதையும் படிங்க: ஜூனியர் பிக் பாஸை மாற்ற நினைத்த தன்யா.. அன்சருக்கு ஆதரவாக எழுந்த ஜேசன் – எமோஷனலான ப்ரோமோ!

அன்சருக்கு ஆதரவாக சாதிகா பேசியுள்ள நிலையில், அதுகுறித்து முத்தழகி கடுப்பாகி பேசியிருந்தார். உடனே தன்யா மற்றும் முத்தழகி இருவருமே சாதிகா மாற்றி ம்,ஆற்றி பேசுகிறார் என அவர்கள் கடுப்பில் பேசியுள்ளனர். இது தொடர்பான ப்ரோமோ வெளியாகி இணையத்தில் வைரலாகிவருகிறது.

பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியில் 67வது நாளின் 4வது ப்ரோமோ குறித்த எக்ஸ் பதிவு:

இந்த பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியில் கிட்டத்தட்ட 12 போட்டியாளர்கள் மட்டுமே இருகிறார்கள். தற்போது ஜூனியர் பிக் பாஸ் என்ற டாஸ்க் சிப்பாக நடந்துவரும் நிலையில், அன்சர் அந்த பதவியில் உள்ளார். இவர் இந்த வாரத்தின் கடைசி வரை இதே பதவியில் இருந்தால், அவர் இந்த வாரத்திற்கான எவிக்ஷன் ஃப்ரீ பாஸை பெறுவார் என கூறப்படுகிறது. தற்போது யார் இந்த எவிக்ஷன் பாஸை பெறுவார்? என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow Us