AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

கும்பளங்கி நைட்ஸ் பட இயக்குநரின் இயக்கத்தில் நஸ்லென்.. நிறைவடைந்தது படத்தின் ஷூட்டிங்!

Naslen New Movie Shooting Wrap: மலையாள சினிமாவில் இளம் நடிகராக மக்களிடையே பிரபலமானவராக இருந்து வருபவர் நஸ்லென். இவர் சமீபத்தில் வெளியான சூர்யாவின் சீன் படத்தில் மெயின் வில்லனாக நடித்திருந்தார். இப்படத்திற்கு பிறகு இவர் மலையாளத்தில், இயக்குநர் மது சி நாராயணன் இயக்கத்தில் புது படத்தில் நடித்துவந்த நிலையில், அதன் ஷூட்டிங் முழுமையாக நிறைவடைந்துள்ளது.

கும்பளங்கி நைட்ஸ் பட இயக்குநரின் இயக்கத்தில் நஸ்லென்.. நிறைவடைந்தது படத்தின் ஷூட்டிங்!
நஸ்லென் கே. கஃபூரின் புதிய திரைப்படம்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 12 Nov 2026 14:32 PM IST

தென்னிந்திய சினிமா ரசிகர்கள் மத்தியில் இளம் நாயகனாக மிகவும் பிரபலமானவராக இருந்துவருபவர் நஸ்லென் கே கஃபூர் (Actor Naslen K. Gafoor). இவரின் நடிப்பில் மலையாள சினிமாவில் (Malayalam Cinema) தொடர்ந்து பிரம்மாண்டமான திரைப்படங்கள் வெளியாகிவருகிறது. மலையாள சினிமாவில் ஹீரோவாக நடித்துவந்த இவருக்கு தமிழில் முதல் திரைப்படமாக அமைந்ததுதான் சீன் (Scene Movie). இயக்குநர் ஜித்து மாதவன் (Director Jithu Madhavan) இயக்கத்தில் உருவான இப்படத்தில், சூர்யா (Suriya) மற்றும் நஸ்ரியா (Nazriya) இணைந்து நடித்திருந்தனர். இவர்களுடன் நடிகர் நஸ்லென் நடித்திருந்தார். இப்படத்தில் அவர் ஈஸ்வரன் என்ற வில்லன் வேடத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் வில்லனாக இவர் தமிழில் நுழைந்தாலும், ஹீரோவாக மலையாளத்தில் படங்களில் நடித்துவருகிறார்.

இவர், 2019ல் வெளியான கும்பளங்கி நைட்ஸ் (Kumbalangi Nights) என்ற படத்தை இயக்கி பிரபலமான இயக்குநர் மது சி நாராயணன் இயக்கத்தில் புதிய படத்தில் இணைந்திருந்தார். தற்போது இப்படத்தின் ஷூட்டிங் முழுமையாக நிறைவடைந்ததாக படக்குழு அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இதையும் படிங்க: தொடங்கியது அஜித் குமாரின் டேர் டெவில் படத்தின் ஷூட்டிங் – வைரலாகும் தகவல்!

நஸ்லென் மற்றும் மது சி நாராயணனின் கூட்டணி பட ஷூட்டிங் நிறைவு குறித்து வைரலாகும் பதிவு:

நஸ்லென் மற்றும் மது சி நாராயணன் கூட்டணி பட ரிலீஸ் எப்போது:

நடிகர் நஸ்லென் மலையாள சினிமாவில் நட்சத்திர இளம் நாயகனாக இருந்துவருகிறார். இவர் சூர்யாவின் சீன் படத்தில் மெயின் வில்லனாக நடித்திருந்த நிலையில், இப்படத்தில் அவர் நடித்திருந்த ஈஸ்வரன் கதாபாத்திரம் சிறப்பாகவே அமைந்திருந்தது. இந்த படத்தின் வெற்றியை அடுத்து பேக் டூ பேக் படங்களிலும் ஒப்பந்தமாகிவருகிறார். இந்த வரிசையில், கும்பளங்கி நைட்ஸ் பட இயக்குநர் மது சி நாராயணன் இயக்கத்தில் புதிய படத்தில் நடித்துவந்தார். இந்த புதிய படத்தின் கதாநாயகி யார் என்பது குறித்து எந்த தகவல்களும் வெளியாகவில்லை.

இதையும் படிங்க: தேதி குறிச்சாச்சு… நாளை வெளியாகிறது தனுஷின் ஓம் படத்தின் ட்ரெய்லர் – வெளியானது அப்டேட்!

இப்படத்தின் ஷூட்டிங் கிட்டத்தட்ட 82 நாட்களுக்கும் மேல் நடைபெற்றுவந்த நிலையில், நேற்று (11/11/2026) முழுமையாக நிறைவடைந்துள்ளதாம். இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியிருந்தது. மேலும் தற்போது இப்படமானது போஸ்ட் ப்ரொடக்ஷன் பணியில் இருக்கும் நிலையில், வரும் 2027ம் ஆண்டு மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் படக்குழு வெளியிட திட்டமிட்டுவருகிறதாம். விரைவில் இப்படத்திலிருந்து அப்டேட்டுகளும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow Us